Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Nilavu vandhu paadumo
Silai ezhundhu aadumo
Palar nirandha sabaiyinilae
Panbu kooda maarinaal
Panbu kooda maarinaal

Female : Aa… aahha hahhaa
Nilavu vandhu paadumo
Silai ezhundhu aadumo
Palar nirandha sabaiyinilae
Panbu kooda maarinaal
Panbu kooda maarinaal

Female : Maarattum manadhu pola pogattum
Aadattum thanai marandhu aadattum
Aadattum thanai marandhu aadattum

Whistling : ………………………

Female : Thalai kunindha pengalum
Thalai nimirndha aangalum
Thalai kunindha pengalum
Thalai nimirndha aangalum
Nilai kulaindhu pona pin
Needhi engu vaazhumo
Needhi engu vaazhumo

Female : Vaazhattum vazhi marandhu vaazhattum
Paarkkattum arivu kondu paarkkattum
Paarkkattum arivu kondu paarkkattum

Female : Nilavu vandhu paadumo
Silai ezhundhu aadumo

Female : Anubavikkum avasaram
Aadai maattrum adhisayam
Mudivillaadha bodhaiyil
Mugam marandhu pogumo
Mugam marandhu pogumo

Female : Pogattum pudhiya sugam kaanattum
Kaanattum kaalam varum maarattum
Kaanattum kaalam varum maarattum

Whistling : ………………………

Female : Oomai kanda kanavaiyum
Uravu thandha ninaivaiyum
Oomai kanda kanavaiyum
Uravu thandha ninaivaiyum
Karuvil ulla mazhalaiyum
Uruvam kaatta mudiyumo
Uruvam kaatta mudiyumo

Female : Mudiyattum mudiyum podhu mudiyattum
Vidiyattum vidiyum podhu vidiyattum
Vidiyattum vidiyum podhu vidiyattum

Female : Nilavu vandhu paadumo…
Silai ezhundhu aadumo…

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்
பண்பு கூட மாறினால்

பெண் : ஆ……ஆஹ்ஹா ஹஹ்ஹா
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்
பண்பு கூட மாறினால்

பெண் : மாறட்டும் மனது போல போகட்டும்
ஆடட்டும் தனை மறந்து ஆடட்டும்
ஆடட்டும் தனை மறந்து ஆடட்டும்

விசில் : ………………………….

பெண் : தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலை குலைந்து போன பின்
நீதி எங்கு வாழுமோ
நீதி எங்கு வாழுமோ

பெண் : வாழட்டும் வழி மறந்து வாழட்டும்
பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும்
பார்க்கட்டும் அறிவு கொண்டு பார்க்கட்டும்

பெண் : நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ

பெண் : அனுபவிக்கும் அவசரம்
ஆடை மாற்றும் அதிசயம்
முடிவில்லாத போதையில்
முகம் மறந்து போகுமோ
முகம் மறந்து போகுமோ

பெண் : போகட்டும் புதிய சுகம் காணட்டும்
காணட்டும் காலம் வரும் மாறட்டும்
காணட்டும் காலம் வரும் மாறட்டும்

விசில் : ……………………………..

பெண் : ஊமை கண்ட கனவையும்
உறவு தந்த நினைவையும்
ஊமை கண்ட கனவையும்
உறவு தந்த நினைவையும்
கருவிலுள்ள மழலையும்
உருவம் காட்ட முடியுமோ
உருவம் காட்ட முடியுமோ

பெண் : முடியட்டும் முடியும் போது முடியட்டும்
விடியட்டும் விடியும் போது விடியட்டும்
விடியட்டும் விடியும் போது விடியட்டும்

பெண் : நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here