Singers : Charan Raj and Vaish

Music by : Charanraj M.R

Lyrics by : Madhurakavi

Female : Kaadhal maram
Kanavae kilai
Katraaga vaa
Kanni manam kaambanadhu
Poovaga vaa

Female : Paravai oli payanam madhi
Vanamaga vaa
Paruvam mozhi azhagae isai
Ragamaga vaa

Female : Ninaithaalae kaadhal varam
Rasithaalae kaadhal dhavam

Female : Pen azhagai paadi sollaa
Sangaam ulladhu
Ann azhagai paadi sonnal
Nenjam thulluthu

Male : Kalamellaam kavalan aaven
Kaadhal sollum paavalan aaven
Mayil iragaai kaatril midhappen
Malaridhazhalae un vali theerppen

Female : Pen azhagai paadi sollaa
Sangaam ulladhu
Ann azhagai paadi sonnal
Nenjam thulluthu

Female : Idhigasa puthagamellaam
Nam anbin pakkam puralum
Un viralgal thottu thazhuva
Endhan nenjil sorgam malarum

Female : Kaadhal kalangal
Kaadhaalin vasanthamagudhu
Thanimai kalangal
Kaadhalin thedalaagudhu
Pagaliravu dhinasari
Pakkam nindru adhari
Ennuyirukku un ninaivae
Kadham bari

Male : Pen azhagai paadi sollaa
Sangaam ulladhoo
Ann azhagai paadi sonnal
Nenjam thulluthu

Female : Kalamellaam kaavalan neeyae
Kadhal sollum paavalan neeyae
Mayiliragaai kaatril mithappaai
Malaridhazhil valiyinai theerppaai….
Hmm mm aaa aa anbin vaasagaa
Hmm mm aaa aaa aasai neasagaa…

பாடகர்கள் : சரண் ராஜ் மற்றும் வைஷ்

இசையமைப்பாளர் : சரண் ராஜ் எம். ஆர்

பாடலாசிரியர் : மதுரகவி

பெண் : காதல் மரம் கனவே கிளை
காற்றாக வா
கன்னி மனம் காம்பானது
பூவாக வா

பெண் : பறவை ஒளி பயணம் மதி
வனமாக வா
பருவம் மொழி அழகே இசை
ராகமாக வா

பெண் : நினைத்தாலே காதல் வரம்
ரசித்தாலே காதல் தவம்

பெண் : பெண் அழகை பாடி சொல்ல
சங்கம் உள்ளது
ஆண் அழகை பாடி சொன்னால்
நெஞ்சம் துள்ளுது

ஆண் : காலமெல்லாம் காவலன் ஆவேன்
காதல் சொல்லும் பாவலன் ஆவேன்
மயில் இறகாய் காற்றில் மிதப்பேன்
மலரிதழே உன் வலி தீர்ப்பேன்

பெண் : பெண் அழகை பாடி சொல்ல
சங்கம் உள்ளது
ஆண் அழகை பாடி சொன்னால்
நெஞ்சம் துள்ளுது

பெண் : இதிகாச புத்தகமெல்லாம்
நம் அன்பின் பக்கம் புரளும்
உன் விரல்கள் தொட்டு தழுவ
எந்தன் நெஞ்சில் சொர்க்கம் மலரும்

பெண் : காதல் காலங்கள்
காதலின் வசந்தமாகுது
தனிமை காலங்கள்
காதலின் தேடலாகுது
பகலிரவு தினசரி பக்கம் நின்று ஆதரி
என்னுயிருக்கு உன் நினைவே காதம்பரி

ஆண் : பெண் அழகை பாடி சொல்ல
சங்கம் உள்ளதோ
ஆண் அழகை பாடி சொன்னால்
நெஞ்சம் துள்ளுது

பெண் : காலமெல்லாம் காவலன் நீயே
காதல் சொல்லும் பாவலன் நீயே
மயிலிறகாய் காற்றில் மிதப்பாய்
மலரிதழில் வலியினை தீர்ப்பாய்
ம்ம் ஆஆ அன்பின் வாசகா
ம்ம் ஆஆ ஆசை நேசகா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here