Singer : P. B. Sreenivas

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Male : Nizhal thedi vantha idam nerupaanathu
Nizhal thedi vantha idam nerupaanathu
Nee neer endru kudiththathingu nanjaanathu

Male : Nizhal thedi vantha idam nerupaanathu
Nee neer endru kudiththathingu nanjaanathu
Nanjaanathu……

Male : Thaai endru ninaiththa manam peyaanathu
Thaai endru ninaiththa manam peyaanathu
Un penmaikku pennaethaan pagaiyaanathu

Male : Nizhal thedi vantha idam nerupaanathu

Male : Thanninamthaan thindru nee vaazhathu
Antha thannalam sila perkku yaen vanthathu
Thanninamthaan thindru nee vaazhathu
Antha thannalam sila perkku yaen vanthathu

Male : Ponnaendrum poovendrum
Annaiyin inam endrum
Ponnaendrum poovendrum
Annaiyin inam endrum
Penninam per pettru ennaananthu
Indru paavigal kai pattu punnaanathu
Paavigal kai pattu punnaanathu

Male : Nizhal thedi vantha idam nerupaanathu

Male : Pennena piranthaalae perumpaavama
Idhu kanniyam illaatha samuthaayamaa
Pennena piranthaalae perumpaavama
Idhu kanniyam illaatha samuthaayamaa

Male : Santhaiyil vilai pogum
Manthaiyin nilai polae
Santhaiyil vilai pogum
Manthaiyin nilai polae
Mangaiyai edai podum parithaabamaa
Idhai maattridum edhirkaalam uruvaagumaa…..

பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது
நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது
நீ நீர் என்று குடித்ததிங்கு நஞ்சானது

ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது
நீ நீர் என்று குடித்ததிங்கு நஞ்சானது
நஞ்சானது…..

ஆண் : தாய் என்று நினைத்த மனம் பேயானது
தாய் என்று நினைத்த மனம் பேயானது
உன் பெண்மைக்கு பெண்ணேதான் பகையானது
பகையானது…..

ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது

ஆண் : தன்னினம் தான் தின்று நீ வாழ்வது
அந்த தன்னலம் சில பேர்க்கு ஏன் வந்தது
தன்னினம் தான் தின்று நீ வாழ்வது
அந்த தன்னலம் சில பேர்க்கு ஏன் வந்தது

ஆண் : பொன்னென்றும் பூவென்றும்
அன்னையின் இனம் என்றும்
பொன்னென்றும் பூவென்றும்
அன்னையின் இனம் என்றும்
பெண்ணினம் பேர் பெற்று என்னானது
இன்று பாவிகள் கைப் பட்டு புண்ணானது
பாவிகள் கைப் பட்டு புண்ணானது

ஆண் : நிழல் தேடி வந்த இடம் நெருப்பானது

ஆண் : பெண்ணென பிறந்தாலே பெரும் பாவமா
இது கண்ணியம் இல்லாத சமுதாயமா
பெண்ணென பிறந்தாலே பெரும் பாவமா
இது கண்ணியம் இல்லாத சமுதாயமா

ஆண் : சந்தையில் விலை போகும்
மந்தையின் நிலை போலே
சந்தையில் விலை போகும்
மந்தையின் நிலை போலே
மங்கையை எடை போடும் பரிதாபமா
இதை மாற்றிடும் எதிர்காலம் உருவாகுமா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here