Singers : Malaysia Vasudevan and M. Jayachandran

Music by : Vijayanand

Lyrics by : Vaali

Male : Nizhaledhu ingae nijamedhu
Ninaikkaiyil manda kuzhambuthu
Ennai pola irukkurae
Rompa paadu paduththurae

Male : Ada maanga madaiyaa vidhiyaa vinaiyaa
Mayakkangal theliyalaiyae
Idhu vittalaachaaryaa marmakkadhiyaa
Enakkonnum puriyalaiyae

Male : Hae….enakkunthaan un pol mayakkanthaan
Kalakkanthaan manda kozhappamthaan
Unna pola irukkuraen
Ippa maatti muzhikkiraen

Male : Ada naai vaal thannai nimirnthida nenachchen
Kaikalai kadichchathaiyyaa
En kadhal kaniyai gramakiliyae
Enai vittu pirichchathiyya hae haei

Male : Enakunthaan un pol mayakkanthaan

Male : Maappillai unga maamanaaru naan
Udhavikku varalaamaa
Neengal nadaththum sandai kaatchiyi
Yosanai tharalaamaa

Male : Iruvarukkullae enna pirachchanai
Engitta sollalaamaa
Samman illaama aajar aaguraen
En sollai thallalaamaa

Male : Poonaithaan puliyai pol
Oorilae thiriyuthu
Male : Poonaiyai puliyumthaan
Paaththu yaen nadunguthu hoi
Male : Oththi podaa unnaal thalaivali

Male : Original saathaa original
Unmai sol nee yaar unmai sol
Male : Intha kelvi yaenunga naan gramaththaanunga

Male : Ada en pol neeyum un pol naanum
Iruppathu sangadamthaan
Ingu poosal vanthaal idaiyil pugunthu
Thaduppathu en kadanthaan

Male : Nee vantha velai thookam pochchudaa
Nimmathi enakkilla
Male : Nee panna vela thappu kaariyam
Ellaam en melae

Male : Kattiya manaivi sandai poduraa
Nee senja vinaithaanae
Male : Kadhali enaiyae vittu odinaa
Kaaranam needhaanae poeiyya

Male : Iruvarai ondru pol
Iraivan yaen padaikkanum
Male : Oruththanin pazhigali
Aduththavan sumakkanum
Vittu thallu ellaam thalaivithi

Male : Nijamedhu ingae nizhaledhu
Male : Ninaikkaiyil manda kuzhambuthu
Male : Ennai pola irukkurae
Male : Rompa paadu paduthurae

Male : Ada eththanai kaalam ippadi unnaal
Kavalaiyil midhappeno
Male : En daughter matter watter kooda
Inmael kudippeno

Male : Nijamedhu ingae nizhalethu….hoi….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எம். ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : விஜயானந்த்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நிழலெது இங்கே நிஜமெது
நினைக்கையில் மண்ட குழம்புது
என்னைப் போல இருக்குறே
ரொம்ப பாடு படுத்துறே

ஆண் : அட மாங்கா மடையா விதியா வினையா
மயக்கங்கள் தெளியலையே
இது விட்டலாச்சார்யா மர்மக்கதையா
எனக்கொண்ணும் புரியலையே

ஆண் : ஹே….எனக்குந்தான் உன் போல் மயக்கந்தான்
கலக்கந்தான் மண்ட கொழப்பந்தான்
உன்னப் போல இருக்குறேன்
இப்ப மாட்டி முழிக்கிறேன்

ஆண் : அட நாய் வால் தன்னை நிமிர்த்திட நெனச்சேன்
கைகளை கடிச்சதய்யா
என் காதல் கனியை கிராமக்கிளியை
எனை விட்டு பிரிச்சதய்யா ஹே ஹேய்

ஆண் : எனக்குந்தான் உன் போல் மயக்கந்தான்

ஆண் : மாப்பிள்ளை உங்க மாமனாரு நான்
உதவிக்கு வரலாமா
நீங்கள் நடத்தும் சண்டை காட்சியில்
யோசனை தரலாமா

ஆண் : இருவருக்குள்ளே என்ன பிரச்சனை
எங்கிட்ட சொல்லலாமா
சம்மன் இல்லாம ஆஜர் ஆகுறேன்
என் சொல்லை தள்ளலாமா

ஆண் : பூனை தான் புலியைப் போல்
ஊரிலே திரியுது
ஆண் : பூனையை புலியும் தான்
பாத்து ஏன் நடுங்குது ஹோய்
ஆண் : ஒத்தி போடா உன்னால் தலைவலி…..

ஆண் : ஒரிஜனல் சாதா ஒரிஜனல்
உண்மை சொல் நீ யார் உண்மை சொல்
ஆண் : இந்தக் கேள்வி ஏனுங்க நான் கிராமத்தானுங்க

ஆண் : அட என் போல் நீயும் உன் போல் நானும்
இருப்பது சங்கடம்தான்
இங்கு பூசல் வந்தால் இடையில் புகுந்து
தடுப்பது என் கடந்தான்

ஆண் : நீ வந்த வேளை தூக்கம் போச்சுடா
நிம்மதி எனக்கில்ல
ஆண் : நீ பண்ண வேல தப்புக் காரியம்
எல்லாம் என் மேலே

ஆண் : கட்டிய மனைவி சண்டை போடுறா
நீ செஞ்ச வினைதானே
ஆண் : காதலி எனையே விட்டு ஓடினா
காரணம் நீதானே போய்யா…

ஆண் : இருவரை ஒன்று போல்
இறைவன் ஏன் படைக்கணும்
ஆண் : ஒருத்தனின் பழிகளை
அடுத்தவன் சுமக்கணும்
விட்டுத் தள்ளு எல்லாம் தலைவிதி…

ஆண் : நிஜமெது இங்கே நிழலெது
ஆண் : நினைக்கையில் மண்ட குழம்புது
ஆண் : என்னைப் போல இருக்குறே
ஆண் : ரொம்ப பாடு படுத்துறே

ஆண் : அட எத்தனை காலம் இப்படி உன்னால்
கவலையில் மிதப்பேனோ
ஆண் : என் டாட்டர் மேட்டர் வாட்டர் கூட
இனிமேல் குடிப்பேனோ

ஆண் : நிஜமெது இங்கே நிழலெது…..ஹோய்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here