Singers : Hariharan and Swarnalatha

Music by : Deva

Chorus : Thae thath thae thath thae
Thae thath thae thath thae
Thae thath thae thath thae

Chorus : {Kitha kitha thath
Thara theera thara
Kitha kitha thath
Thara theera thara} (2)

Male : {Oh nenjae nenjae ..
Ra ra ra ra oh nenja nenjae} (2)
Nee vellai chandira veedhiyil
Ulaap pogiraai
Nee natchathirangalil vaazhavae
Kanaa kaanngiraai

Male : Nenjae nee vinnai
Suttri parandhaalum
Un kaalai mannil oondri
Nil nil nil nil

Female : Anbae anbae un dhukkathai vittu
Vinnai thottu un perai nilavil vettu…
Thath tha thath tha
Thath thara thara rara
Thath tha thath tha
Thath thara thara thaara

Chorus : {Thath thara ree ree raa
Thath thara ree ree raa
Thath thara ree ree tharaa rae} (2)
Heyyy…yeee…

Female : Kaatrellam inikkumpadi kannaala
Kaadhukkul paattupadi
En kaalam nadakkattumae
En dhevaa un maarbil saaindhapadi

Male : Oru paarvai siru vaarthai
Endhan uyirukku kavasamadi
Irandhaalum uyiroottum
Undhan viralgalin sparisamadi

Female : Naan sollum sollai kelaai
Naalaiiku neeyae velvaai
Sangeetha naadhangalukku
Vedham sollvaai vedham sollvaai

Male : Pennae pennae un ottrai sollukku
Ponnum muththum naan kotti thara vendum
Anbae anbae un anbu soll vendum
Innum sollu en ratham oora vendum

Female : O nenjae nenjae…
Ra ra ra ra oo nenjae nenjae…

Chorus : College college
Akka endha college
October november
Endha maasam marriage
Heart-oda beat-u ellam
Love love love love

Male : Sandharpam amaindhu vittal
Pennpoovae
Sangeedham maatri vaippen
Kaalangal kaniyum varai pesaamal
Kaatrukku isaiamaippen

Female : Kalangaadhae mayangaadhae
Un kanavukku thunai iruppen
Indha boomi udaindhaalum
Unnai ullankaiyil yendhi parappen

Female : En nenjil saaithukkolven
Idhayathin osai kelu
En nenjil ottichellum
Paattukkettu mettu podu

Male : Poovae poovae
Un moochchae sangeetham
Saththam sindhum
Un muthamkooda naadham

Male : Vaazhvin dheepam
Adi needhaan eppodhum
Endrum podhum
Nee sollum sollae vedham

Female : O nenjae nenjae…
Ra ra ra ra oo nenjae nenjae…
O nenjae nenjae…
Ra ra ra ra oo nenjae nenjae…

Male : Nee vellai chandira veedhiyil
Ulaap pogiraai
Nee natchathirangalil vaazhavae
Kanaa kaanngiraai

Male : Nenjae nee vinnai
Suttri parandhaalum
Un kaalai mannil oondri
Nil nil nil nil

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும்
ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : தேவா

குழு : …………………………………………..

ஆண் : {ஓ நெஞ்சே நெஞ்சே
ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே} (2)

ஆண் : நீ வெள்ளை சந்திர வீதியில்
உலா போகிறாய்
நீ நட்சத்திரங்களில் வாழவே
கனா காண்கிறாய்

ஆண் : நெஞ்சே நீ
விண்ணை சுற்றிப் பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி
நில் நில் நில் நில்

பெண் : அன்பே அன்பே
உன் துக்கத்தை விட்டு
விண்ணை தொட்டு
உன் பேரை நிலவில் வெட்டு
………………………………………………

குழு : ……………………………………….

பெண் : காற்றெல்லாம் இனிக்கும்படி
கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
என் காலம் நடக்கட்டுமே என் தேவா
உன் மார்பில் சாய்ந்தபடி

ஆண் : ஒரு பார்வை சிறு வார்த்தை
எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிர் ஊட்டும்
உந்தன் விரல்கள் ஸ்பரிசமடி

பெண் : நான் சொல்லும் சொல்லை கேளாய்
நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத நாதங்களுக்கு
வேதம் சொல்வாய் வேதம் சொல்வாய்

ஆண் : பெண்ணே பெண்ணே
உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தம்
நான் கொட்டித்தர வேண்டும்

ஆண் : அன்பே அன்பே
உன் அன்பு சொல் வேண்டும்
இன்னும் சொல்லு
என் ரத்தம் ஊர வேண்டும்

பெண் : ஓ நெஞ்சே நெஞ்சே
ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

குழு : காலேஜூ காலேஜூ
அக்கா எந்தக் காலேஜூ
அக்டோபர் நவம்பர்
எந்த மாசம் மேரேஜு
ஹார்ட் ஓட பீட் எல்லாம்
லவ் லவ் லவ் லவ்

ஆண் : சந்தர்ப்பம் அமைந்து விட்டால்
பெண் பூவே
சங்கீதம் மாற்றி வைப்பேன்
காலங்கள் கனியும் வரை பேசாமல்
காற்றுக்கு இசை அமைப்பேன்

பெண் : கலங்காதே மயங்காதே
உன் கனவுக்கு துணை இருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும்
உன்னை உள்ளங்கையில்
ஏந்தி பறப்பேன்

பெண் : என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன்
இதயத்தின் ஓசை கேளு
என் நெஞ்சில் ஒட்டி செல்லும்
பாட்டு கேட்டு மெட்டு போடு

ஆண் : பூவே பூவே
உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும்
உன் முத்தம் கூட நாதம்

ஆண் : வாழ்வின் தீபம்
அடி நீதான் எப்போதும்
என்றும் போதும்
நீ சொல்லும் சொல்லே வேதம்

பெண் : {ஓ நெஞ்சே நெஞ்சே
ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே} (2)

ஆண் : நீ வெள்ளை சந்திர வீதியில்
உலா போகிறாய்
நீ நட்சத்திரங்களில் வாழவே
கனா காண்கிறாய்

ஆண் : நெஞ்சே நீ
விண்ணை சுற்றிப் பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி
நில் நில் நில் நில்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here