Singer : Swarnalatha

Music by : Deva

Female : Oh nenje oh nenje
Sogam enthan mugavariyaa
En kadhal paattukku
Kanneer thuliyae mudhal variyaa

Female : Oh nenje oh nenje
Sogam enthan mugavariyaa
En kadhal paattukku
Kanneer thuliyae mudhal variyaa

Female : Intha kadhal malarkatchi
Adharkillai manasaatchi
Naan kannaadi sirppamthaan
Kal veesi ponaayae nee

Female : En kangal imai thaangum
Ini unnaal idi thaangum

Female : Oh nenje oh nenje
Sogam enthan mugavariyaa
En kadhal paattukku
Kanneer thuliyae mudhal variyaa

Female : Valathu kannil vanthu un ninaivu
Oru mullai vaikkirathu
Idathu kannil vanthu un ninai
Sudum theeyai vaikkirathu

Female : Oru samayam nenjil un kanavu
Siru poovai veesiyathu
Oru samayam nenjil un kanavu
Siru poovai veesiyathu

Female : Un perai sollaatha neraththilae
En naakku enai thittum kobaththilae

Female : Unnai enni azhuthida ingae
Irandu vizhi thaangaathu
Naga kangal adhilum azhuthaal
Adhukooda pothaathu

Female : Naan unnaal siragaanaen
Nee illai viragaanaen
En raththathil oru paadhi
Kanneeraai veliyaeruthae

Female : Oru sollil uyir thanthaai
Maru sollil adhai kettaai

Female : Oh nenje oh nenje
Sogam enthan mugavariyaa
En kadhal paattukku
Kanneer thuliyae mudhal variyaa

Female : Megangalai pola naan irunthaal
Unnai mazhaiyaai saernthiruppaen
Vennilavai pola naan irunthaal
Unnai iravil thoonga vaippaen

Female : Thendral adhai pola naan irunthaal
Un moochchil kudiyiruppaen
Bhoomiyinai pola naan irunthaal
Un paadhaththai sumanthiruppaen

Female : Sthambiththu nirkindra gragam idhu
Neeyindri vaazhgindra naanthaan adhu

Female : Uyir irukkum pothae kettaen
Unnaidaththil vinnappam
Un madiyil uyir vida thaanae
Meendum oru santharppam

Female : Maram thedum paravai naan
Mugam thedum uruvam naan
Ada ippothum appothum
En moochchu thaan nirkkumo

Female : Idhayaththil siru thuvaaram
Nee ponaal perithaagum

Female : Oh nenje oh nenje
Sogam enthan mugavariyaa
En kadhal paattukku
Kanneer thuliyae mudhal variyaa

Female : Intha kadhal malarkatchi
Adharkkillai manasaatchi
Naan kannaadi sirppamthaan
Kal veesi ponaayae nee

Female : En kangal imai thaangum
Ini unnaal idi thaangum

Female : Oh nenje oh nenje
Sogam enthan mugavariyaa
En kadhal paattukku
Kanneer thuliyae mudhal variyaa

பாடகி : ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா

பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா

பெண் : இந்தக் காதல் மலர்க்காட்சி
அதற்கில்லை மனசாட்சி
நான் கண்ணாடி சிற்பம்தான்
கல் வீசி போனாயே நீ

பெண் : என் கண்கள் இமை தாங்கும்
இனி உன்னால் இடி தாங்கும்

பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா

பெண் : வலது கண்ணில் வந்து உன் நினைவு
ஒரு முள்ளை வைக்கிறது
இடது கண்ணில் வந்து உன் நினைவு
சுடும் தீயை வைக்கிறது

பெண் : ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு
சிறு பூவை வீசியது
ஒரு சமயம் நெஞ்சில் உன் கனவு
ஒரு புயலை வீசியது

பெண் : உன் பேரை சொல்லாத நேரத்திலே
என் நாக்கு எனைத் திட்டும் கோபத்திலே

பெண் : உன்னை எண்ணி அழுதிட இங்கே
இரண்டு விழி தாங்காது
நகக் கண்கள் அதிலும் அழுதால்
அதுகூட போதாது

பெண் : நான் உன்னால் சிறகானேன்
நீ இல்லை விறகானேன்
என் ரத்தத்தில் ஒரு பாதி
கண்ணீராய் வெளியேறுதே

பெண் : ஒரு சொல்லில் உயிர் தந்தாய்
மறு சொல்லில் அதை கேட்டாய்

பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா

பெண் : மேகங்களை போல நான் இருந்தால்
உன்னை மழையாய் சேர்ந்திருப்பேன்
வெண்ணிலவை போல நான் இருந்தால்
உன்னை இரவில் தூங்க வைப்பேன்

பெண் : தென்றல் அதைப் போல நான் இருந்தால்
உன் மூச்சில் குடியிருப்பேன்
பூமியினைப் போல நான் இருந்தால்
உன் பாதத்தை சுமந்திருப்பேன்…

பெண் : ஸ்தம்பித்து நிற்கின்ற கிரகம் எது
நீயின்றி வாழ்கின்ற நான்தான் அது

பெண் : உயிர் இருக்கும் போதே கேட்டேன்
உன்னிடத்தில் விண்ணப்பம்
உன் மடியில் உயிர் விடத்தானே
மீண்டும் ஓர் சந்தர்ப்பம்

பெண் : மரம் தேடும் பறவை நான்
முகம் தேடும் உருவம் நான்
அட இப்போதும் அப்போதும்
என் மூச்சு தான் நிற்குமோ

பெண் : இதயத்தில் சிறு துவாரம்
நீ போனால் பெரிதாகும்…

பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா

பெண் : இந்தக் காதல் மலர்க்காட்சி
அதற்கில்லை மனசாட்சி
நான் கண்ணாடி சிற்பம்தான்
கல் வீசி போனாயே நீ

பெண் : என் கண்கள் இமை தாங்கும்
இனி உன்னால் இடி தாங்கும்

பெண் : ஓ நெஞ்சே ஒ நெஞ்சே
சோகம் எந்தன் முகவரியா
என் காதல் பாட்டுக்கு
கண்ணீர்த் துளியே முதல் வரியா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here