Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Male : Odam ondru kaattril pona vazhi
Naamum pogindrom
Yaetho ondru naalai endru
Innum vaazhgindrom

Male : Odam ondru kaattril pona vazhi
Naamum pogindrom

Male : Paathai endru yaedhum illai
Kaalam ellaam naangal pogindrom
Thaagam vanthaal neerum illai
Neeril ingae naalum vaazhgindrom
Intha neeril sendrae kaanal neeraanom

Male : Odam ondru kaattril pona vazhi
Naamum pogindrom

Male : Thoondil ittom meengal illai
Naangal ingae thoondil meenaanom
Odam vittom dheepam illai
Naangal ingae odam polaanom
Entha neram engae povom endraanom

Male : Megam endraal minnal undu
Thondrum minnalthaanae maaraathaa
Vaazhkkai endraal innal undu
Kaanum innal thaanae theeraathaa
Nalla kaalam ondru naalai vaaraathaa

Male : Odam ondru kaattril pona vazhi
Naamum pogindrom

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்
ஏதோ ஒன்று நாளை என்று
இன்னும் வாழ்கின்றோம்……..

ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்

ஆண் : பாதை என்று ஏதும் இல்லை
காலம் எல்லாம் நாங்கள் போகின்றோம்
தாகம் வந்தால் நீரும் இல்லை
நீரில் இங்கே நாளும் வாழ்கின்றோம்
இந்த நீரில் சென்றே கானல் நீரானோம்

ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்

ஆண் : தூண்டில் இட்டோம் மீன்கள் இல்லை
நாங்கள் இங்கே தூண்டில் மீனானோம்
ஓடம் விட்டோம் தீபம் இல்லை
நாங்கள் இங்கே ஓடம் போலானோம்
எந்த நேரம் எங்கே போவோம் என்றானோம்

ஆண் : மேகம் என்றால் மின்னல் உண்டு
தோன்றும் மின்னல் தானே மாறாதா
வாழ்க்கை என்றால் இன்னல் உண்டு
காணும் இன்னல் தானே தீராதா
நல்ல காலம் ஒன்று நாளை வாராதா

ஆண் : ஓடம் ஒன்று காற்றில் போன வழி
நாமும் போகின்றோம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here