Singer : T. M. Soundarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male : Odraa odraa odraa…hahahaha

Male : Odi konde iruppen
Indha ulagam suzhalvathu nirkkum varai
Naan odi konde iruppen

Male : Aadi kondirukkum kadal alaigal
Isai paadi kondirukkum poonguyilgal
Odi kondirukkum megangal
Enai thedi kondirupadhai naan ariven

Male : Odi konde iruppen
Indha ulagam suzhalvathu nirkkum varai
Naan odi konde iruppen

Male : Odraa odraa odraa…

Male : Kadarkarai iruppadhu kaadhalukka
Oru kaadhali varuvadhu vedhanaikka
Adikkadi sirippadhu baavanaikka
Unnai aandavan padaithathu sodhanaikka
Hahahahaha…

Male : Maaligai paarungal vaan alavu
Adhil manasugal paarungal kadukualavu
Aandavan koduthathu oralavu
Idhil avan avan thirudiyathevalavu

Male : Odi konde iruppen
Indha ulagam suzhalvathu nirkkum varai
Naan odi konde iruppen

Male : Odraa odraa odraa…

Male : Paadhaiyil pogindra paavigala
Neengal padaithavan anuppiya aavigala
Bodhaiyil irukkindra saamigala
Indha boomiyil naangal oomaigala

Male : Engengum manidhargal surusuruppu
Porul irukko illaiyo paraparappu
Ellorkkum pidithathu paithiyama
Ada enakkenna naan thaan vaithiyana
Hahahahaha

Male : Kadavulai konjam thedungada
Avan kaadhali peyarai kelungada
Kadavulin kaadhalum tholviyada
Avan kandathum boomiyil keliyada

Male : Odi konde iruppen
Indha ulagam suzhalvathu nirkkum varai
Naan odi konde iruppen

Male : Odraa odraa odraa…

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஓட்ராறா……….ஓட்ராறா…….ஓட்ராறா..ஹாஹாஹாஹா

ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன்
இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான்
ஓடிக் கொண்டே இருப்பேன்…….

ஆண் : ஆடிக் கொண்டிருக்கும் கடலலைகள்
இசை பாடிக் கொண்டிருக்கும் பூங்குயில்கள்
ஓடிக் கொண்டிருக்கும் மேகங்கள்
எனை தேடிக் கொண்டிருப்பதை நானறிவேன்

ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன்
இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான்
ஓடிக் கொண்டே இருப்பேன்…….

ஆண் : ஓட்ராறா……….ஓட்ராறா…….ஓட்ராறா

ஆண் : கடற்கரை இருப்பது காதலுக்கா
ஒரு காதலி வருவது வேதனைக்கா
அடிக்கடி சிரிப்பது பாவனைக்கா
உன்னை ஆண்டவன் படைத்தது சோதனைக்கா
ஹாஹாஹாஹா

ஆண் : மாளிகை பாருங்கள் வானளவு
அதில் மனசுகள் பாருங்கள் கடுகளவு
ஆண்டவன் கொடுத்தது ஓரளவு
இதில் அவனவன் திருடியதெவ்வளவு…….

ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன்
இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான்
ஓடிக் கொண்டே இருப்பேன்…….

ஆண் : ஓட்ராறா……….ஓட்ராறா…….ஓட்ராறா..

ஆண் : பாதையில் போகின்ற பாவிகளா
நீங்கள் படைத்தவன் அனுப்பிய ஆவிகளா
போதையில் இருக்கின்ற சாமிகளா
இந்த பூமியில் நாங்கள் ஊமைகளா

ஆண் : எங்கெங்கும் மனிதர்கள் சுறுசுறுப்பு
பொருள் இருக்கோ இல்லையோ பரபரப்பு
எல்லோர்க்கும் பிடித்தது பைத்தியமா
அட எனக்கென்ன நான்தான் வைத்தியனா
ஹாஹாஹாஹா …

ஆண் : கடவுளைக் கொஞ்சம் தேடுங்கடா
அவன் காதலி பெயரை கேளுங்கடா
கடவுளின் காதலும் தோல்வியடா
அவன் கண்டதும் பூமியில் கேலியடா….

ஆண் : ஓடிக் கொண்டே இருப்பேன்
இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான்
ஓடிக் கொண்டே இருப்பேன்…….

ஆண் : ஓட்ராறா……….ஓட்ராறா…….ஓட்ராறா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here