Singer : Benny Dayal
Music by : Ghibran
Male : Oh azhagae oh azhagae
Thotta sinungi vaanae
Nee sinunga nee sinunga
Ponnai pularudhae
Adhil nenjam malarudhae
Male : Oh manamae oh manamae
Minnum paniyin keezhae
Poi oliya poi oliya
Konjam yengudhae
Adhil thanjam thedudhae
Male : Adangaadha kaatrae
Adangaadha kaatrae
Adangaadha kaatrae
Adangaadha kaatrae
Male : Thoora alaigal kaalai nanaikkum
Maya nadhi idhu
Megam thaninthu vaasal thelikkum
Thooya mazhai idhu
Vizhakkal dhorum ooramaga
Nindru paarkka nerum
Nilakkal indri vaanam kooda
Mounamaaga maarum
Male : Oru veedu parivodu
Varaverka neelum bothu
Athanodu uraiyaadu
Adhu pol oru varam yedhu
Male : Adangaadha kaatrae
Adangaadha kaatrae
Adangaadha kaatrae
Adangaadha kaatrae
Male : Oh azhagae oh azhagae
Thotta sinungi vaanae
Nee sinunga nee sinunga
Ponnai pularudhae
Adhil nenjam malarudhae
Male : Kaatru kumizhi pola
Udainthu pogum magizhvinai
Pottri valarthu pottri valarthu
Kaakkum oruvanai
Thuzhaavi thedi kannin munbu
Kondu kaattum kaalam
Kanaavil kooda nervadhillai
Nerndhadhindha maayam
Avan yaaro thoduvaano
Tholaidhoora kodu thaano
Vazhi thaero varalaaro
Puriyaa kurunagai thaano
Male : Oh azhagae oh azhagae
Thotta sinungi vaanae
Nee sinunga nee sinunga
Ponnai pularudhae
Male : Oh manamae oh manamae
Minnum paniyin keezhae
Poi oliya poi oliya
Konjam yengudhae
Adhil thanjam thedudhae
Male : Adangaadha kaatrae
Adangaadha kaatrae
பாடகர் : பென்னி தயாள்
இசை அமைப்பாளர் : ஜிப்ரான்
ஆண் : ஓ அழகே ஓ அழகே
தொட்டா சிணுங்கி வானே
நீ சிணுங்க நீ சிணுங்க
பொன்னாய் புலருதே
அதில் நெஞ்சம் மலருதே
ஆண் : ஓ மனமே ஓ மனமே
மின்னும் பனியின் கீழே
போயி ஒழிய போயி ஒழிய
கொஞ்சம் ஏங்குதே
அதில் தஞ்சம் தேடுதே
ஆண் : அடங்காத காற்றே …(4)
ஆண் : தூர அலைகள் காலை நனைக்கும்
மாய நதி இது
மேகம் தணிந்து வாசல் தெளிக்கும்
தூய மழை இது
விழாக்கள் தோறும் ஓரமாக
நின்று பார்க்க நேரும்
நிலாக்கள் இன்றி வானம் கூட
மெளனமாக மாறும்
ஆண் : ஒரு வீடு பரிவோடு
வரவேற்க நீளும் போது
அதனோடு உரையாடு
அது போல் ஒரு வரம் ஏது
ஆண் : அடங்காத காற்றே …(4)
ஆண் : ஓ அழகே ஓ அழகே
தொட்டா சிணுங்கி வானே
நீ சிணுங்க நீ சிணுங்க
பொன்னாய் புலருதே
அதில் நெஞ்சம் மலருதே
ஆண் : காற்றின் குமிழி போல
உடைந்து போகும் மகிழ்வினை
போற்றி வளர்த்து போற்றி வளர்த்து
காக்கும் ஒருவனை
துழாவி தேடி கண்ணின் முன்பு
கொண்டு காட்டும் காலம்
ஆண் : கனாவில் கூட நேர்ந்ததில்லை
நேர்ந்ததிந்த மாயம்
அவன் யாரோ தொடுவானோ
தொலை தூர கோடு தானோ
வழி தேரோ வரலாறோ
புரியா குறுநகை தானோ
ஆண் : ஓ அழகே ஓ அழகே
தொட்டா சிணுங்கி வானே
நீ சிணுங்க நீ சிணுங்க
பொன்னாய் புலருதே
ஆண் : ஓ மனமே ஓ மனமே
மின்னும் பனியின் கீழே
போயி ஒழிய போயி ஒழிய
கொஞ்சம் ஏங்குதே
அதில் தஞ்சம் தேடுதே
ஆண் : அடங்காத காற்றே …(2)