Singer : T. M. Soundararajan

Music by : T. G. Lingappa

Male : Hahahahaa

Male : O suyanala veri migum maandhargalae
Sugandhanil midhandhidum vaendhargalae
Aattathai niruthungal
Arivudan viraivinil thirundhungal

Male : Hae you fool get out

Male : Ennatha ezhai endrum
Thunbathil vaada kandum
Inbam thannil neendhuvadhu nyaayamaa
Ennatha ezhai endrum
Thunbathil vaada kandum
Inbam thannil neendhuvadhu nyaayamaa

Male : Pengalai thaedi kondu
Kangalai moodi kondu
Thannalangal pesuvadhu veeramaa
Pengalai thaedi kondu
Kangalai moodi kondu
Thannalangal pesuvadhu veeramaa
Kalnenjam maarumaa ….kashtangal theerumaa
Theerumaa… aaa…

Male : Aathiram kollum adhisaya piravigalae
Ungal aasai moginiyin naakku kannangal
Konjum kumarigalin kovai adharangal
Sakkara vaanathin sivappu niramalla
Seerazhindhu vaazhum paattaaliyin ratham

Male : Pesaadhae niruthu

Male : Niruthu niruthu niruthu
Endru kathaadhae
Hoi niruthu niruthu niruthu
Endru kathaadhae
Emmai adithu udhaithu
Adakki odukka ennaadhae
Emmai adithu udhaithu
Adakki odukka ennaadhae

Male : Udhithu ezhundha alai kadalai hahaa
Pugai vedithu valarndha yerimalaiyai
Thadai thagarthu mudikka varum puyalai
Silar thaduthu nirutha mudiyaadhae hahaa

Male : Pethavarae vandhaalum
Enai pethavanae vandhaalum
Vandhaalum… vandhaalum

Male : Paattaaliyin kural paattaaliyin udal
Muzhangi ezhu
Thadukka mudiyaadhu mudiyaadhu…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

ஆண் : ஹஹஹஹ்ஹா…..

ஆண் : ஓ சுயநல வெறி மிகும் மாந்தர்களே
சுகந்தனில் மிதந்திடும் வேந்தர்களே
ஆட்டத்தை நிறுத்துங்கள்
அறிவுடன் விரைவினில் திருந்துங்கள்

ஆண் : ஹெ யு ஃபூல் கெட் அவுட்

ஆண் : எண்ணற்ற ஏழை என்றும்
துன்பத்தில் வாடக் கண்டும்
இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா
எண்ணற்ற ஏழை என்றும்
துன்பத்தில் வாடக் கண்டும்
இன்பம் தன்னில் நீந்துவது நியாயமா

ஆண் : பெண்களை தேடிக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டு
தன்னலங்கள் பேசுவது வீரமா
பெண்களை தேடிக் கொண்டு
கண்களை மூடிக் கொண்டு
தன்னலங்கள் பேசுவது வீரமா
கல் நெஞ்சம் மாறுமா…..
கஷ்டங்கள் தீருமா………தீருமா……..ஆஅ…..

ஆண் : ஆத்திரம் கொள்ளும் அதிசய பிறவிகளே
உங்கள் ஆசை மோகினியின் ஆப்பிள் கன்னங்கள்
கொஞ்சும் குமரிகளின் கோவை அதரங்கள்
சக்கர வானத்தின் சிவப்பு நிறமல்ல
சீரழிந்து வாழும் பாட்டாளியின் ரத்தம்

ஆண் : பேசாதே நிறுத்து

ஆண் : நிறுத்து நிறுத்து நிறுத்து
என்று கத்தாதே
ஹோய் நிறுத்து நிறுத்து நிறுத்து
என்று கத்தாதே
எம்மை அடித்து உதைத்து
அடக்கி ஒடுக்க எண்ணாதே
எம்மை அடித்து உதைத்து
அடக்கி ஒடுக்க எண்ணாதே

ஆண் : உடைத்து எழுந்த அலை கடலை ஹஹா
புகை வெடித்து வளர்ந்த எரிமலையை
தடை தகர்த்து முடிக்க வரும் புயலை
சிலர் தடுத்து நிறுத்த முடியாதே ஹஹா

ஆண் : பெத்தவரே வந்தாலும்
என்னைப் பெத்தவனே வந்தாலும்
வந்தாலும்……. வந்தாலும்

ஆண் : பாட்டாளியின் குரல் பாட்டாளியின் உடல்
முழங்கியே எழு
தடுக்க முடியாது முடியாது…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here