Singers : S.C. Krishnan, Trichy Loganathan, A.G. Rathnamala and Jikki

Music Director : C. N. Pandurangan

Lyricist : P. K. Aatkondan

Male : Om endra pranavathin ..
Ongaara roobanae
Ulagathai aatkonda
Umaiyaal maindhanae
Female : Unnadi panindhom ganapathi appanae

Female : Vaelvi malai kurunji nilam
Valliyammae pirandha nilam
Vaelvi malai kurunji nilam
Valliyammae pirandha nilam
Nambhirasan murai magalaam
Nangaiyaval kuramagalaam
Nambhirasan murai magalaam
Nangaiyaval kuramagalaam

Male : Valli ponnu azhagu ponnu
Vayadhu vandha kanni ponnu
Haei valli ponnu azhagu ponnu
Vayadhu vandha kanni ponnu
Valli ponnu azhagu ponnu
Vayadhu vandha kanni ponnu

Male : Kalagakaara naradhanum
Kandaan valli ponnai
Thanikachala velanidam
Sonnaan azhagu thannai
Avan sonnaan azhagu thannai
Oho sonnaana
Haan sonnan

Female : Kurathi valli azhagai kettu
Thinai punathil avalai
Kaana vandhaan vadivelan
Odi vandhaan vadivelan
O vandhaan vadivelan
Odi vandhaan vadivelan

Female : So so so
Kambhu thinnavarum
Kakka kuruvi mainakkale
Kavan veesi thurathiduven
So so so

Female : Valai thappi odiya maan ondru ippakkam
Vandhadhundo adhai kandathundo
Valai thappi odiya maan ondru ippakkam
Vandhadhundo adhai kandathundo

Female : Aayalottum pennae
Aayalottum pennae
Aayalottum pennae
Aaviyae en aaruyir sanjeeviyae manmadhan enum
Paaviyae malarkanaiyaal thooviyae
Vaaturaandi kannae
Aayalottum pennae

Female : Madhikettu maan thedi maadhendhen munn vandha
Maanam vetkam ketta mooda podaa vaedaa
Madhikettu maan thedi maadhendhen munn vandha
Maanam vetkam ketta mooda podaa vaedaa

Male : Vaeduvargal thediyadhum
Vaengai maramaanan murugan
Vaeduvargal thediyadhum
Vaengai maramaanan
Vaengai marathai vetta sonnaan
Vaendhan nambhi rajan ..aama
Female : Nindra andha maayavaelan ippo
Urumaari kizhamaagi vandhaan angae
Maramaagi

Female : Pasiyaal udal melindhen konjam
Pusikka amudhalippai pennae
Pasiyaal udal melindhen konjam
Pusikka amudhalippai

Female : Vaanga thaatha vaanga thaathaa
Vaanga thaatha vaanga vandhu kalaipaarunga
Kanivaana maa palaa thinaimaavum indhaanga
Thinnu kalaipaarunga vaanga thathaa vaanga

Female : Thaagam theerndhadhadi en thangamae
Mogam theeravillai en sornamae
Thaagam theerndhadhadi en thangamae
Mogam theeravillai en sornamae
Kittae vandhu
En kitta vandhu kai pidithu thottu enai
Thooki vittu sellu konjam nillu

Female : Meesai naraithu pochae kizhava
Aasai naraikkavillaiyae
Kizhava meesai naraithu pochae kizhava
Aasai naraikkavillaiyae
Dhegam thalarndhu poyum undhan
Thimirum adangavilaliyae kizhava

Male : Ganapathiyin udavithanai kandhan pera ninaithaan
Gajapathiyum yaanaiyaai ododi vandhaan
Kaatchiyae thandhan

Female : Kunjarathai kanda valli sanjalamae kondaal
Kunjarathai kanda valli sanjalamae kondaal
Kenjiyaval kizhavanidam thanjam pera sendraal

All : Kittae bayandhu vandha pennai kandhan
Katti anaitha vindhai enna solluvom
Oho kittae bayandhu vandha pennai kandhan
Katti anaitha vindhai enna solluvom
Valli ponnai siraiyeduthaan
Maal marugan velan
Oho valli ponnai siraiyeduthaan
Maal marugan velan
Vaanavarum vaazhthu koora valli kuhanai
Manadhaale mangalamaai vaazhndhaale
Male : Hooo oo haa..aaa

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன், திருச்சி லோகநாதன், ஏ. ஜி. ரத்னமாலா மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்

பாடல் ஆசிரியர் : பி. கே. ஆட்கொண்டான்

ஆண் : ஓம் என்ற ப்ரணவத்தின்
ஓங்கார ரூபனே
உலகத்தை ஆட்கொண்ட
உமையாள் மைந்தனே
பெண் : உன்னடி பணிந்தோம் கணபதி அப்பனே…..

பெண் : வேள்வி மலை குறிஞ்சி நிலம்
வள்ளியம்மே பிறந்த நிலம்
வேள்வி மலை குறிஞ்சி நிலம்
வள்ளியம்மே பிறந்த நிலம்
நம்பிராசன் முறை மகளாம்
நங்கையவள் குறமகளாம்
நம்பிராசன் முறை மகளாம்
நங்கையவள் குறமகளாம்

ஆண் : வள்ளிப் பொண்ணு அழகுப் பொண்ணு
வயது வந்த கன்னிப் பொண்ணு..
ஹேய் வள்ளிப் பொண்ணு அழகுப் பொண்ணு
வயது வந்த கன்னிப் பொண்ணு..
வள்ளிப் பொண்ணு அழகுப் பொண்ணு
வயது வந்த கன்னிப் பொண்ணு..

ஆண் : கலகக்கார நாரதனும்
கண்டான் வள்ளிப் பொண்ணை
தணிகாசல வேலனிடம்
சொன்னான் அழகுதன்னை
அவன் சொன்னான் அழகு தன்னை…

வசனம் : ஹோ சொன்னானா
ஹான் சொன்னான்

பெண் : குறத்தி வள்ளி அழகைக் கேட்டுத்
தினைப் புனத்தில் அவளைக்
காண வந்தான் வடிவேலன்
ஓடி வந்தான் வடிவேலன்….
ஓ வந்தான் வடிவேலன்….
ஓடி வந்தான் வடிவேலன்….

பெண் : சோ…சோ…சோ…
கம்பு சோளம் தின்னவரும்
காக்கா குருவி மைனாக்களே
கவண் வீசி துரத்திடுவேன்
சோ…சோ..சோ…

பெண் : வலை தப்பி ஓடிய மான் ஒன்று இப்பக்கம்
வந்ததுண்டோ அதைக் கண்டதுண்டோ
வலை தப்பி ஓடிய மான் ஒன்று இப்பக்கம்
வந்ததுண்டோ அதைக் கண்டதுண்டோ

பெண் : ஆயலோட்டும் பெண்ணே
ஆயலோட்டும் பெண்ணே
ஆயலோட்டும் பெண்ணே
ஆவியே என் ஆருயிர் சஞ்சீவியே மன்மதன் எனும்
பாவியே மலர்கணையால் தூவியே
வாட்டுரானடி கண்ணே
ஆயலோட்டும் பெண்ணே

பெண் : மதிகெட்டு மான் தேடி மாதெந்தன் முன் வந்த
மானம் வெட்கம் கெட்ட மூடா…போடா…வேடா.
மதிகெட்டு மான் தேடி மாதெந்தன் முன் வந்த
மானம் வெட்கம் கெட்ட மூடா…போடா…வேடா..

ஆண் : வேடுவர்கள் தேடியதும்
வேங்கை மரமானான் முருகன்
வேடுவர்கள் தேடியதும்
வேங்கை மரமானான்
வேங்கை மரத்தை வெட்டச் சொன்னான்
வேந்தன் நம்பி ராஜன்…..ஆமா……
பெண் : நின்ற அந்த மாயவேலன் இப்போ
உருமாறி கிழமாகி வந்தான் அங்கே
மரமாகி

பெண் : பசியால் உடல் மெலிந்தேன் கொஞ்சம்
புசிக்க அமுதளிப்பாய் பெண்ணே
பசியால் உடல் மெலிந்தேன் கொஞ்சம்
புசிக்க அமுதளிப்பாய்

பெண் : வாங்க தாத்தா வாங்க தாத்தா
வாங்க தாத்தா வாங்க வந்து களைப்பாருங்க
கனிவான மா, பலா, தினைமாவும் இந்தாங்க
தின்னு களைப்பாருங்க வாங்க தாத்தா வாங்க

பெண் : தாகம் தீர்ந்ததடி என் தங்கமே
மோகம் தீரவில்லை சொர்ணமே
தாகம் தீர்ந்ததடி என் தங்கமே
மோகம் தீரவில்லை சொர்ணமே
கிட்டே வந்து
என் கிட்ட வந்து கை பிடித்து தொட்டு என்னை
தூக்கி விட்டு செல்லு கொஞ்சம் நில்லு…..

பெண் : மீசை நரைத்துப் போச்சே கிழவா
ஆசை நரைக்கவில்லையே
கிழவா மீசை நரைத்துப் போச்சே கிழவா
ஆசை நரைக்கவில்லையே
தேகம் தளர்ந்து போயும் உந்தன்
திமிரும் அடங்கவில்லையே கிழவா…

ஆண் : கணபதியின் உதவிதனை கந்தன் பெற நினைத்தான்
கஜபதியும் யானையாய் ஓடோடி வந்தான்
காட்சியே தந்தான்

பெண் : குஞ்சரத்தைக் கண்ட வள்ளி சஞ்சலமே கொண்டாள்
குஞ்சரத்தைக் கண்ட வள்ளி சஞ்சலமே கொண்டாள்
கெஞ்சியவள் கிழவனிடம் தஞ்சம் பெற சென்றாள்

அனைவரும் : கிட்டே பயந்து வந்த பெண்ணை கந்தன்
கட்டி அணைத்த விந்தை என்ன சொல்லுவோம்
ஓஹோ கிட்டே பயந்து வந்த பெண்ணை கந்தன்
கட்டி அணைத்த விந்தை என்ன சொல்லுவோம்
வள்ளிப் பொண்ணை சிறையெடுத்தான்
மால் மருகன் வேலன்
ஓஹோ வள்ளிப் பொண்ணை சிறையெடுத்தான்
மால் மருகன் வேலன்
வானவரும் வாழ்த்துக் கூற வள்ளி குகனை
மணந்தாளே மங்களமாய் வாழ்ந்தாளே..

ஆண் : ஹோ ஓ ஹா ஆஆ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here