Singer : K. B. Sundarambal

Music by : K. V. Mahadevan

Female : Ondraanavan uruvil irandaanavan
Uruvaana sendhamizhil moondraanavan
Ondraanavan uruvil irandaanavan
Uruvaana sendhamizhil moondraanavan
Nandraana vedhaththil naangaanavan
Namachchivaaya ena aindhaanavan
Nandraana vedhaththil naangaanavan
Namachchivaaya ena aindhaanavan

Female : Inba chuvaigalukkul aaraanavan
Aaaa….aaa….aaa…
Inba chuvaigalukkul aaraanavan
Innisai swrangalil ezhaanavan
Inba chuvaigalukkul aaraanavan
Innisai swrangalil ezhaanavan
Siththikkum porulgalil ettaanavan
Siththikkum porulgalil ettaanavan
Thiththikkum navarasa viththaanavan
Thiththikkum navarasa viththaanavan

Female : Paththaanavan nenjil patraanavan
Pannirukai velavanai petraanavan
Mutradhavan moola mudhalaanavan
Munnaikkum pinnaikkum naduvaanavan
Munnaikkum pinnaikkum naduvaanavan

Female : Aanaagi pennaagi nindraanavan
Avaiyondru thaanendru sonnaanavan
Aanaagi pennaagi nindraanavan
Avaiyondru thaanendru sonnaanavan
Thaan paadhi umai paadhi kondaanavan
Saripaadhi penmaikku thandhaanavan

Female : Kaatraanavan kuliraanavan
Neeraanavan neruppaanavan
Netraagi indraagi endraikkum nilaiyaagi
Oootraagi nindraanavan
Anbil oliyaagi nindraanavan

பாடகி : கே.பி. சுந்தராம்பாள்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில்
மூன்றானவன் ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில்
மூன்றானவன் நன்றான
வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்

பெண் : இன்பச் சுவைகளுக்குள்
ஆறானவன் ஆஆ ஆஆ ஆஆ
இன்பச் சுவைகளுக்குள்
ஆறானவன் இன்னிசை
ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில்
எட்டானவன் சித்திக்கும்
பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்

பெண் : பத்தானவன்
நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனைப்
பெற்றானவன் முற்றாதவன்
மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும்
நடுவானவன் முன்னைக்கும்
பின்னைக்கும் நடுவானவன்

பெண் : ஆணாகிப் பெண்ணாகி
நின்றானவன் அவையொன்று
தானென்று சொன்னானவன்
ஆணாகிப் பெண்ணாகி
நின்றானவன் அவையொன்று
தானென்று சொன்னானவன்
தான்பாதி உமைபாதி
கொண்டானவன் சரிபாதி
பெண்மைக்குத் தந்தானவன்

பெண் : காற்றானவன்
குளிரானவன் நீரானவன்
நெருப்பானவன் நேற்றாகி
இன்றாகி என்றைக்கும்
நிலையாகி ஊற்றாகி
நின்றானவன் அன்பின்
ஒளியாகி நின்றானவன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here