Singers : A. R. Rahman and Vijay Yesudas

Music by : A. R. Rahman

Male : Oor aayiram vaanavil bhoomiyil
Un kangalum theduthae kaar irul
Poo vaasangal korthidum bhoomiyil
Un nesamum veezhnthidum veliyil

Male : Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga

Male : Oo koochalae maunamaai maaridu
Oo vanjamae nanmaiyaai yeridu
Peraasaiyae thaanamaai aagidu
Oo inmaiyae enil peidhidu

Male : Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga

Male : Kilai veezhthinum poo tharum nan maram
Midhithaerinum thaangidum odamum
Adithaalumae isai tharum melamum
Ivai polavae yengidum thaai manam

Male : Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga

Male : Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi paravum
Adhu ozhira ozhira ozhiyai parugum
Maanudam muzhudhum

Male : Amma un madi podhum
Neeyae en varamaagum
Ellam thandhaai verai pola nindren
Unnil paniven undhan paadham engae
Kaalam ellaam endhan aavi unadhae…ae
Amma un karunai edhanai koduthu niraithiduven

Male & Chorus : Oor aayiram vaanavil bhoomiyil
Un kangalum theduthae kaar irul
Poo vaasangal korthidum bhoomiyil
Un nesamum veezhnthidum veliyil

Male & Chorus : Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga
Un idhaya idhaya idhaya thiriyil
Perozhi parava
Nall ozhiyum unakkul nuzhaindhu
Padara ooridam tharuga

பாடகர்கள் : ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் விஜய் யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ஓர் ஆயிரம் வானவில் பூமியில்
உன் கண்களோ தேடுதே காரிருள்
பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில்
உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில்

ஆண் : உன் இதய இதய இதய திரியில்
பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து
படர ஓரிடம் தருக

ஆண் : ஓ கூச்சலே மௌனமாய் மாறிடு
ஓ வஞ்சமே நன்மையாய் ஏறிடு
பேராசையே தானமாய் ஆகிடு
ஓ இன்மையே எனில் பெய்திடு

ஆண் : உன் இதய இதய இதய திரியில்
பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து
படர ஓரிடம் தருக

ஆண் : கிளை வீழ்த்தினும் பூ தரும் நன்மரம்
மிதித்தேறினும் தாங்கிடும் ஓடமும்
அடித்தலுமே இசைதரும் மேளமும்
இவை போலவே ஏங்கிடும் தாய்மனம்

ஆண் : உன் இதய இதய திரியில்
பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து
படர ஓரிடம் தருக

ஆண் : உன் இதய இதய இதய திரியில்
பேரொளி பரவும்
அது ஒளிர ஒளிர ஒளியைப் பருகும்
மானுடம் முழுதும்

ஆண் : அம்மா உன் மடி போதும்
நீயே என் வரம் ஆகும்
எல்லாம் தந்தாய் வேரைப்போல நின்றே
உன்னில் பணிவேன் உந்தன் பாதமெங்கே
காலம் எல்லாம் எந்தன் ஆவி உனதே
அம்மா உன் கருணை
எதனைக் கொடுத்து நிறைத்திடுவேன்

ஆண் மற்றும் குழு : ஓர் ஆயிரம் வானவில் பூமியில்
உன் கண்களோ தேடுதே காரிருள்
பூவாசங்கள் கோர்த்திடும் பூமியில்
உன் நேசமோ வீழ்ந்திடும் வேலியில்

ஆண் : உன் இதய இதய திரியில்
பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து
படர ஓரிடம் தருக

ஆண் : உன் இதய இதய திரியில்
பேரொளி பரவ
நல்லொளியும் உனக்குள் நுழைந்து
படர ஓரிடம் தருக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here