Singer : P. Unnikrishnan

Music by : S. A. Rajkumar

Male : Oor azhuthaa nee azhuvae oorukidhu puriyalla
Unmai yaedhu poi edhunnu yaarukkumae theriyalla
Eppavum nallavana yaelanamaai pesuthu
Yaesuva poloruththan edhiril vanthaa yaesuthu

Male : Konja naal poruththiru nee
Kaalam maaralaam
Konja naal poruththiru nee
Kaalam maaralaam

Male : Aiyirandu maadhangalaa naan kudiyiruntha koyilae
Kaiyirandil Enai eduththu kaaththu nindra dheivamae
Oorukkae annamittaai anbu manam maeviyae
Nee unnum soththulathaan veshaththa vachchaan paaviyae
Ennadaa kodumai idhu nooru sodhanai
Pongi nee ezhunthu vittaal theerum edhanai

Male : Aa soreduththu oottiya kai
Veshaththa oottumaa
Veshameduththu oottiyathu vidhiyin saabamaa
Un kaiyaal valarththa kili unnaal maalvathaa
Nenjukkul irunthava neruppu soozhvathaa
Nenjukkul irunthava neruppu soozhvathaa

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஊர் அழுதா நீ அழுவே ஊருக்கிது புரியல்ல
உண்மை ஏது பொய் எதுன்னு யாருக்குமே தெரியல்ல
எப்பவும் நல்லவன ஏளனமாய் பேசுது
ஏசுவப் போலொருத்தன் எதிரில் வந்தா ஏசுது

ஆண் : கொஞ்ச நாள் பொறுத்திரு நீ
காலம் மாறலாம்
கொஞ்ச நாள் பொறுத்திரு நீ
காலம் மாறலாம்….

ஆண் : ஐயிரண்டு மாதங்களா நான் குடியிருந்த கோயிலே
கையிரண்டில் எனை எடுத்து காத்து நின்ற தெய்வமே
ஊருக்கே அன்னமிட்டாய் அன்பு மனம் மேவியே
நீ உண்ணும் சோத்துலதான் வெஷத்த வச்சான் பாவியே
என்னடா கொடுமை இது நூறு சோதனை
பொங்கி நீ எழுந்து விட்டால் தீரும் வேதனை…..

ஆண் : அட சோறெடுத்து ஊட்டிய கை
வெஷத்த ஊட்டுமா
வெஷமெடுத்து ஊட்டியது விதியின் சாபமா
உன் கையால் வளர்த்த கிளி உன்னால் மாள்வதா
நெஞ்சுக்குள் இருந்தவன நெருப்பு சூழ்வதா
நெஞ்சுக்குள் இருந்தவன நெருப்பு சூழ்வதா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here