Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Oorukku nallathoru ubakaaram seiyya
Naangal eduththathintha avathaaram
Oorukku nallathoru ubakaaram seiyya
Naangal eduththathintha avathaaram
Male : Verukku neethaanae aadhaaram manithan
Vaazhvukku anbae aadhaaram
Female : Oorukku nallathoru ubakaaram seiyya
Naangal eduththathintha avathaaram
Female : Vaanam kodukkindra mazhai undu
Vaiyam kodukindra payir undu
Vaanam kodukkindra mazhai undu
Vaiyam kodukindra payir undu
Female : Yaavum kodukindra manam kondu
Ingu vaazhum anaivarkkum pugazhundu
Male : Nallennam illaamal
Nanmaigal seiyaamal
Nenjangal vaazhnthaal paavam
Nallennam illaamal
Nanmaigal seiyaamal
Nenjangal vaazhnthaal paavam
Male : Engengu paainthaalum thagaththai theerkkaatha
Thanneeraal undo laabam
Female : Oorukku nallathoru ubakaaram seiyya
Naangal eduththathintha avathaaram
Female : Pillai sirippodu nagai minna
Ingu kollai adikkindra gunam enna
Male : Devan koduththaanae pala kodi
Avan perai keduththaanae padupaavi
Female : Kaththikkum puththikkum eppothum poraattam
Thannaiyae maranthaan manithan
Male : Anbukkum panbukkum sambantham illaatha
Ullangal yaavum mirugam
Female : Oorukku nallathoru ubakaaram seiyya
Naangal eduththathintha avathaaram
Female : Kaigal koduththaanae edharkaga pirar
Kanneer thudaikkindra panikkaaga
Male : Kaalgal koduththaanae edharkaga pirar
Kashtam therinthangu thunai poga
Female : Eppothum thiththikkum muppaalai
Thanthaanae thennaattil vaazhntha gnani
Male : Naattukkum veettukkum paattukkal
Thanthaanae bharathi ennum thaenee….
Both : Oorukku nallathoru ubakaaram seiyya
Naangal eduththathintha avathaaram
Verukku neethaanae aadhaaram manithan
Vaazhvukku anbae aadhaaram
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய
நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்
ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய
நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்
ஆண் : வேருக்கு நீதானே ஆதாரம் மனிதன்
வாழ்வுக்கு அன்பே ஆதாரம்……
பெண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய
நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்
பெண் : வானம் கொடுக்கின்ற மழை உண்டு
வையம் கொடுக்கின்ற பயிர் உண்டு
வானம் கொடுக்கின்ற மழை உண்டு
வையம் கொடுக்கின்ற பயிர் உண்டு
பெண் : யாவும் கொடுக்கின்ற மனம் கொண்டு
இங்கு வாழும் அனைவர்க்கும் புகழுண்டு
ஆண் : நல்லெண்ணம் இல்லாமல்
நன்மைகள் செய்யாமல்
நெஞ்சங்கள் வாழ்ந்தால் பாவம்
நல்லெண்ணம் இல்லாமல்
நன்மைகள் செய்யாமல்
நெஞ்சங்கள் வாழ்ந்தால் பாவம்
ஆண் : எங்கெங்கு பாய்ந்தாலும் தாகத்தை தீர்க்காத
தண்ணீரால் உண்டோ லாபம்
ஆண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய
நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்
பெண் : பிள்ளை சிரிப்போடு நகை மின்ன இங்கு
கொள்ளை அடிக்கின்ற குணம் என்ன
ஆண் : தேவன் கொடுத்தானே பல கோடி
அவன் பேரைக் கெடுத்தானே படுபாவி
பெண் : கத்திக்கும் புத்திக்கும் எப்போதும் போராட்டம்
தன்னையே மறந்தான் மனிதன்
ஆண் : அன்புக்கும் பண்புக்கும் சம்பந்தம் இல்லாத
உள்ளங்கள் யாவும் மிருகம்
பெண் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய
நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்
பெண் : கைகள் கொடுத்தானே எதற்காக பிறர்
கண்ணீர் துடைக்கின்ற பணிக்காக
ஆண் : கால்கள் கொடுத்தானே எதற்காக பிறர்
கஷ்டம் தெரிந்தங்கு துணை போக
பெண் : எப்போதும் தித்திக்கும் முப்பாலை
தந்தானே தென்னாட்டில் வாழ்ந்த ஞானி
ஆண் : நாட்டுக்கும் வீட்டுக்கும் பாட்டுக்கள்
தந்தானே பாரதி என்னும் தேனீ………
இருவர் : ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய
நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்
வேருக்கு நீதானே ஆதாரம் மனிதன்
வாழ்வுக்கு அன்பே ஆதாரம்……