Singer : Malasiya Vasudevan

Music by : Sankar Ganesh

Male : {Ooru peru poonjolaithaan

Male : Oorai suthi maanjolai thaan

Male : Ooru peru poonjolaithaan
Oorai suthi maanjolai thaan
Namma oora pathukka pulla
Adi muppogam thaan
Naalu pakkam nenjai allum
Nanjai punjai thaan} (2)

Male : Oorukkulla varathukkum
Ooravittu porathukkum
Odam thaanae vaaganam aachu

Male : Kaaval thurai yedhum illa
Kutham seiya yaarum illa
Solla ponaa aaga motham
Sananga manasu sutham
Maasathula vaaram oru panjaayathu koodum
Sollugiratheerppu adhu ellarukkum vaedham

Male : Ooru peru poonjolaithaan

Male : Oorai suthi maanjolai thaan

Male : Ooru peru poonjolaithaan
Oorai suthi maanjolai thaan
Namma oora pathukka pulla
Adi muppogam thaan
Naalu pakkam nenjai allum
Nanjai punjai thaan

Male : Aanum ponnum kaadhalichaa
Aasa melae aasa vachaa
Aadharikkum oor sanam thaan
Yengugira ilasugala
Ennapadi serthu veikkum
Maalai katti manam mudikka
Melam kotti vaazhthuraikkum

Male : Thottadhellam minnum
Kai pattadhellaam pongum
Nattadhellam pookkkum
Naama nambum deivam kaakaum

Male : Ooru peru poonjolaithaan

Male : Oorai suthi maanjolai thaan

Male : Ooru peru poonjolaithaan
Oorai suthi maanjolai thaan
Namma oora pathukka pulla
Adi muppogam thaan
Naalu pakkam nenjai allum
Nanjai punjai thaan
Thandhannanae thanae nanae thanna naanae naa…(2)

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : {ஊரு பேரு பூஞ்சோலைத்தான்

ஆண் : ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்

ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான்
ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்
நம்ம ஊரப் பாத்துக்க புள்ள
அடி முப்போகம்தான்
நாலு பக்கம் நெஞ்சை அள்ளும்
நஞ்சை புஞ்சைதான்} (2)

ஆண் : ஊருக்குள்ள வாறத்துக்கும்
ஊர விட்டு போறத்துக்கும்
ஓடம் தானே வாகனமாச்சு

ஆண் : காவல் துறை ஏதுமில்ல
குத்தம் செய்ய யாருமில்ல
சொல்லப் போனா ஆகமொத்தம்
சனங்க மனசு சுத்தம்
மாசத்துல வாரம் ஒரு பஞ்சாயத்து கூடும்
சொல்லுகிற தீர்ப்பு அது எல்லாருக்கும் வேதம்

ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான்

ஆண் : ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்

ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான்
ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்
நம்ம ஊரப் பாத்துக்க புள்ள
அடி முப்போகம்தான்
நாலு பக்கம் நெஞ்சை அள்ளும்
நஞ்சை புஞ்சைதான்

ஆண் : ஆணும் பொண்ணும் காதலிச்சா
ஆச மேல ஆச வச்சா
ஆதரிக்கும் ஊர் சனம்தானே
ஏங்குகிற இளசுகள
எண்ணப்படி சேத்து வைக்கும்
மாலை கட்டி மணம் முடிக்க
மேளம் கொட்டி வாழ்த்துரைக்கும்

ஆண் : தொட்டதெல்லாம் மின்னும்
கைப் பட்டதெல்லாம் பொங்கும்
நட்டதெல்லாம் பூக்கும்
நாம நம்பும் தெய்வம் காக்கும்

ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான்

ஆண் : ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்

ஆண் : ஊரு பேரு பூஞ்சோலைத்தான்
ஊரைச் சுத்தி மாஞ்சோலைத்தான்
நம்ம ஊரப் பாத்துக்க புள்ள அடி முப்போகம்தான்
நாலு பக்கம் நெஞ்சை அள்ளும் நஞ்சை புஞ்சைதான்

ஆண் : ………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here