Singer : K. Veeramani
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Male : Mannil nalla vannam vaazhalaam vaigalum
Ennil nalla kathikku yaathumor kuraivillai
Kannil nallaathoorum kazhumala valanagar
Pennin nallaalodum perunthagai irunthathae
Chorus : Oradi kadavulukaaga oradi kanavarkkaaga
Seeradi moondraam paadham saernththor kulaththai kaakka
Naaladi achcham naanam madam enum nalaththai kaakka
Ainthadi pulangal ainthai adakkiyae vaazhvai kaakka
Aaradi suvaigal aarum kanavarkkae anbil ootta
Yazhadi ulagam yezhum kanavanodu inainthu vaazha
Chorus : Sapthpathi saththiyam dharmakula thaththuvam
Sapthpathi saththiyam dharmakula thaththuvam
Saththiyam thaththuvam……saththiyam thaththuvam
Chorus : Sakthi oru paathiyaai sivamum oru paathiyaai
Dharmaththil inainthu vaazhvom
Thaaimai enum kolamaai thanthai enum paalamaai
Thaththuva perumai kaanbom
Chorus : Bakthivazhi nermaiyaai panbuvazhi menmaiyaai
Vaazhalaam vananga vaazhvom
Palliyarai kolvathil paramanadi saervathil
Pakkaththil pangu kolvom
Chorus : Paathaathi kesamum seeraana naayagan panikkendru
Thunaivi vaazhga
Varuvathoru thuyareninum varuvathoru sugameninum
Paathiyaai thunaivan vaazhga
Chorus : Thaai veedu vittappin than veedu
Thaai veedu endrenniyae thalaivu vaazhga
Naatkaalai yogamithu kadhikaalaiyaagamena
Samsaaram inithu vaazhga
பாடகர் : கே. வீரமணி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
குழு : ஓரடி கடவுளுக்காக ஓரடி கணவர்க்காக
சீரடி மூன்றாம் பாதம் சேர்ந்ததோர் குலத்தைக் காக்க
நாலடி அச்சம் நாணம் மடம் எனும் நலத்தை காக்க
ஐந்தடி புலன்கள் ஐந்தை அடக்கியே வாழ்வை காக்க
ஆறடி சுவைகள் ஆறும் கணவர்க்கே அன்பில் ஊட்ட
ஏழடி உலகம் ஏழும் கணவனோடு இணைந்து வாழ
குழு : சப்தபதி சத்தியம் தர்மகுல தத்துவம்
சப்தபதி சத்தியம் தர்மகுல தத்துவம்
சத்தியம்…….தத்துவம்…….. சத்தியம்………தத்துவம்……….
குழு : சக்தி ஒரு பாதியாய் சிவமும் ஒரு பாதியாய்
தர்மத்தில் இணைந்து வாழ்வோம்
தாய்மை எனும் கோலமாய் தந்தை எனும் பாலமாய்
தத்துவ பெருமை காண்போம்
குழு : பக்திவழி நேர்மையாய் பண்புவழி மேன்மையாய்
வாழலாம் வணங்க வாழ்வோம்
பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்
பக்கத்தில் பங்கு கொள்வோம்
குழு : பாதாதி கேசமும் சீரான நாயகன் பணிக்கென்று
துணைவி வாழ்க
வருவதொரு துயரெனினும் வருவதொரு சுகமெனினும்
பாதியாய் துணைவன் வாழ்க
குழு : தாய் வீடு விட்டப்பின் தன் வீடு
தாய் வீடு என்றெண்ணியே தலைவி வாழ்க
நாட்காலை யோகமிது கதிகாலையாகமென
சம்சாரம் இனிது வாழ்க