Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Orae vaanam orae bhoomi
Orae jaathi orae needhi
Orae vaanam orae bhoomi
Orae jaathi orae needhi

Male : Enathu kannilae bedhangal illai
Enathu kannilae bedhangal illai
Ellorum naanum oru thaai pillai
Ellorum naanum oru thaai pillai

Male : Orae vaanam orae bhoomi
Orae jaathi orae needhi

Male : Abraham lincoln than anbaal vendraar
Karupenna velupenna ondrae endraar
Abraham lincoln than anbaal vendraar
Karupenna velupenna ondrae endraar

Male : Inaveri illaamal niraveri kollaamal
Eththanai munnorgal thaththuvam sonnaargal
Ulaga makkalae orr inam endru sonnaanae
Ungal kennadi andru….

Male : Orae vaanam orae bhoomi
Orae jaathi orae needhi

Male : Odidum megangal konjum vannam
Oongiya maaligaigal nenjai allum
Odidum megangal konjum vannam
Oongiya maaligaigal nenjai allum

Male : Manithanum avvaaru uyarvathu eppothu
Pudhuyugam thannaalae udhiththidum appothu

Male : Uzhaikkum varkkamae
Naanthaan ungal pakkam
Undaagum selvam
Namakkae sontham

Male : Orae vaanam orae bhoomi
Orae jaathi orae needhi

Male : Aayiram dhesangal mannil undu
Maanida dharmangal engum ondru
Paravaigal iraithaedi paranthida thadaiyaedhu
Virinthidum vaanaththil pirivugal kidaiyaathu

Male : Enathu thaayagam gandhiyin desam
Enathu thaayagam gandhiyin desam
Ennaalum solvaen ahimsai vedham
Ennaalum solvaen ahimsai vedham

Male : Orae vaanam orae bhoomi
Orae jaathi orae needhi

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஒரே வானம்..ஒரே பூமி…
ஒரே ஜாதி…ஒரே நீதி…
ஒரே வானம்..ஒரே பூமி…
ஒரே ஜாதி…ஒரே நீதி…

ஆண் : எனது கண்ணிலே பேதங்கள் இல்லை
எனது கண்ணிலே பேதங்கள் இல்லை
எல்லோரும் நானும் ஒருதாய் பிள்ளை
எல்லோரும் நானும் ஒருதாய் பிள்ளை

ஆண் : ஒரே வானம்…..ஒரே பூமி……
ஒரே ஜாதி……ஒரே நீதி……

ஆண் : ஆப்ரகாம் லிங்கன் தன் அன்பால் வென்றார்
கருப்பென்ன வெளுப்பென்ன ஒன்றே என்றார்
ஆப்ரகாம் லிங்கன் தன் அன்பால் வென்றார்
கருப்பென்ன வெளுப்பென்ன ஒன்றே என்றார்

ஆண் : இனவெறி இல்லாமல் நிறவெறி கொள்ளாமல்
எத்தனை முன்னோர்கள் தத்துவம் சொன்னார்கள்
உலக மக்களே ஓர் இனம் என்று சொன்னானே
உங்கள் கென்னடி அன்று………

ஆண் : ஒரே வானம்…..ஒரே பூமி……
ஒரே ஜாதி……..ஒரே நீதி……

ஆண் : ஓடிடும் மேகங்கள் கொஞ்சும் வண்ணம்
ஓங்கிய மாளிகைகள் நெஞ்சை அள்ளும்
ஓடிடும் மேகங்கள் கொஞ்சும் வண்ணம்
ஓங்கிய மாளிகைகள் நெஞ்சை அள்ளும்

ஆண் : மனிதனும் அவ்வாறு உயர்வது எப்போது
புதுயுகம் தன்னாலே உதித்திடும் அப்போது

ஆண் : உழைக்கும் வர்க்கமே
நான்தான் உங்கள் பக்கம்
உண்டாகும் செல்வம்
நமக்கே சொந்தம்

ஆண் : ஒரே வானம்…..ஒரே பூமி……
ஒரே ஜாதி……..ஒரே நீதி……

ஆண் : ஆயிரம் தேசங்கள் மண்ணில் உண்டு
மானிட தர்மங்கள் எங்கும் ஒன்று
பறவைகள் இறைதேடி பறந்திட தடையேது
விரிந்திடும் வானத்தில் பிரிவுகள் கிடையாது

ஆண் : எனது தாயகம் காந்தியின் தேசம்
எனது தாயகம் காந்தியின் தேசம்
எந்நாளும் சொல்வேன் அகிம்சை வேதம்
எந்நாளும் சொல்வேன் அகிம்சை வேதம்

ஆண் : ஒரே வானம்…..ஒரே பூமி……
ஒரே ஜாதி……..ஒரே நீதி……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here