Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : T. K. Ramamurthy
Lyrics by : Kannadasan
Female : Orraayiram varudam vanthaal
Theeraatha vazhakkellaam
Theerththu vaippaal deviyammaa….aa…aa…
Male : Theerththu vaippal deviyendru kaaththiruppatho…oo…
Sattam enum devanavan sathiraada maattano…oo….
Female : Orr nenjukku needhi vellum vellum
Sila kaalamaagum
Vendravar melum velum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
Chorus : Vendravar melum velum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
Female : Orr manithan seithaal sattam
Athai deivam seithaal tharumam
Antha sattangalellaam dharumathai vendrathundo
Male : Vendravar melum velum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
Male : Oru deivam seithaal dharumam
Adhai manithan seithaal sattam
Un dharumangalellaam sattangal polae
Vendrathum undo
Chorus : Vendravar melum melum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
Male : Kannil kanda kaatchi palarundu saatchi
Aa……kannil kanda kaatchi palarundu saatchi
Amma…. idhu engal aatchi
Mannaalae kottai katti
Maraigindra koottam
Mazhai pondra needhi munnae adangidum aattam
Female : Aa…ullam konda kaatchi oru manasatchi
Aa…ullam konda kaatchi oru manasatchi
Aiyya….adharkethu veezhchchi
Nimmathi yaethu thoongavidaathu
Illaiyendra pothum dheivam vidaathu
Male : Orr nenjukku neethi vellum vellum
Sila kaalamaagum
Vendravar melum melum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
Male : ……………….
Male : Sathi anusooyai kaalamalla naam vaazhum kaalam
Aniyaayam thannai vellum athikaaram sellum
Female : …………….
Female : Adhikara veliyondru siru dhooram sellum
Chorus : Siru dhooram sellum
Female : Manaiyaalin thaaliyondru dhinanthorum vellum
Chorus : Dhinanthorum vellum
Male : Aasaikku vetkamillai
Female : Yaaridam kuttramillai
Male : Needhiyil pedhamilla
Female : Nee mattum needhiyillai
Male : Indrenna solvathammaa edhirkaalam kaattum
Female : Edhirkaalam ennavendru vithi vanthu kaattum
Female : Orr nenjukku needhi vellum vellum
Sila kaalamaagum
Chorus : Vendravar melum melum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : டி. கே. ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஓராயிரம் வருடம் வந்தாலும்
தீராத வழக்கெல்லாம்
தீர்த்து வைப்பாள் தேவியம்மா……ஆ…ஆ…..
ஆண் : தீர்த்து வைப்பாள் தேவியென்று காத்திருப்பதோ…ஓ….
சட்டம் எனும் தேவனவன் சதிராட மாட்டானோ….ஓ……
பெண் : ஓர் நெஞ்சுக்கு நீதி வெல்லும் வெல்லும்
சில காலமாகும்
வென்றவர் மேலும் மேலும் வென்றதுமுண்டு
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்பதுமுண்டு….
குழு : வென்றவர் மேலும் மேலும் வென்றதுமுண்டு
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்பதுமுண்டு…
பெண் : ஓர் மனிதன் செய்தால் சட்டம்
அதை தெய்வம் செய்தால் தருமம்
அந்த சட்டங்களெல்லாம் தருமத்தை வென்றதுண்டோ..
ஆண் : வென்றவர் மேலும் மேலும் வென்றதுமில்லை
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்றதுமில்லை
ஆண் : ஒரு தெய்வம் செய்தால் தருமம்
அதை மனிதன் செய்தால் சட்டம்
உன் தருமங்களெல்லாம் சட்டங்கள் போலே
வென்றதும் உண்டோ
குழு : வென்றவர் மேலும் மேலும் வென்றதுமுண்டு
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்பதுமுண்டு…
ஆண் : கண்ணில் கண்ட காட்சி பலருண்டு சாட்சி
ஆ….கண்ணில் கண்ட காட்சி பலருண்டு சாட்சி
அம்மா……இது எங்கள் ஆட்சி
மண்ணாலே கோட்டைக் கட்டி
மறைக்கின்ற கூட்டம்
மழை போன்ற நீதி முன்னே அடங்கிடும் ஆட்டம்
பெண் : ஆ…..உள்ளம் கொண்ட காட்சி ஒரு மனசாட்சி
ஆ…..உள்ளம் கொண்ட காட்சி ஒரு மனசாட்சி
ஐயா……அதற்கேது வீழ்ச்சி
நிம்மதி ஏது தூங்கவிடாது
இல்லையென்ற போதும் தெய்வம் விடாது
ஆண் : ஓர் நெஞ்சுக்கு நீதி வெல்லும் வெல்லும்
சில காலமாகும்
வென்றவர் மேலும் மேலும் வென்றதுமுண்டு
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்பதுமுண்டு….
ஆண் : …………………………….
ஆண் : சதி அனுசூயை காலமல்ல நாம் வாழும் காலம்
அநியாயம் தன்னை வெல்லும் அதிகாரம் செல்லும்
பெண் : ……………………
பெண் : அதிகார வேலியொன்று சிறு தூரம் செல்லும்
குழு : சிறு தூரம் செல்லும்
பெண் : மனையாளின் தாலியொன்று தினந்தோறும் வெல்லும்
குழு : தினந்தோறும் வெல்லும்
ஆண் : ஆசைக்கு வெட்கமில்லை
பெண் : யாரிடம் குற்றமில்லை
ஆண் : நீதியில் பேதமில்லை
பெண் : நீ மட்டும் நீதியில்லை
ஆண் : இன்றென்ன சொல்வதம்மா எதிர்காலம் காட்டும்
பெண் : எதிர்காலம் என்னவென்று விதி வந்து காட்டும்
பெண் : ஓர் நெஞ்சுக்கு நீதி வெல்லும் வெல்லும்
சில காலமாகும்
குழு : வென்றவர் மேலும் மேலும் வென்றதுமுண்டு
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்பதுமுண்டு….