Singer : Kalpana Raghavendar
Music by : Mani Sharma
Female : Oru chinna vennila pole
Naan vaanil pogiren mele
Adi thulli kuthippathu ingu yen than
Nee thoondil maatikonda meen than
Chorus : Santhana poo nettriyila
Kungumathi ittu kondu
Sangamikka pogum pen aaval
Azhakiya angamellam minnum pon aaval
Female : Malare malare…..
Avan thethil moozhgum neram
Meduvai meduvai
intha poovil baram yerum
Adiye….adiye……
ini neeyum avanum yetheyetho
Female : Oru chinna vennila pole
Naan vaanil pogiren mele
Female : Mutha kadhaigal muttrum karaiya
Venneer kondu neeradinen
Unnai kandathaal ennai maranthen
Theeyil vegum neeragiren
Female : Kaadu malaigal kai veesi nadanthen
Unathu nizhalil naan nirkiren
Uchanthalaiyil nerkodu kizhithu
Thalaivan poga thalai saaigiren
Female : Antha kovil kathavai moodu
Ival kai korkum kadavul neethan
Ada kannere illaa kangal
Ini ennoda kangal thaane
Chorus : Santhana poo nettriyila
Kungumathi ittu kondu
Sangamikka pogum pen aaval
Azhakiya angamellam minnum pon aaval
Female : Oru chinna vennila pole
Naan vaanil pogiren mele
Adi thulli kuthipathum ingu yen thaan
Nee thoondil maatikkonda meen than
Chorus : ………………..
Female : Kuthu vilakkai koodi irunthen
Minnal pola ododinen
Chinna vithaiyai mannil irunthen
Vergal vittu aalaginen
Female : Meesai kayitril ponnunjal amaithu
Unathu kuzhanthai thaalattuven
Pasikkum pozhuthu madimeethu vaithu
Nilavai pizhinthu paaloottuven
Female : Kuzhal meetum viralai vanthai
Naan karpoora theeyai aanen
Ival kannathai killi ponai
Oru aanantha pennai aanen
Chorus : Velli nila kannathile
Vetkam vanthu otti kolla
Muthathaale thudaippavan yaar
Solladi munthanaikku sonthakkaaran yaar
Female : Oru kaathal devanai kanden
Avan kannil thoongave vanthen
Athi kaalai sooriyan nee than
Unnai paarthu pookintra poo naan
Female : Oru naal oru naal ival
Nenjukkulle vizhunthan
Uyirai uyirai ival
Thegam engum vazhnthan
Adada….adada…..
Naan unnal nalai thaayaven…..
பாடகி : கல்பனா ராகவேந்தர்
இசையமைப்பாளர் : மணி ஷர்மா
குழு : ……………………..
பெண் : ஒரு சின்ன வெண்ணிலா போலே
நான் வானில் போகிறேன் மேலே
அடி துள்ளி குதிப்பது இங்கு ஏன்தான்
நீ தூண்டில் மாட்டிக்கொண்ட மீன்தான்
குழு : சந்தன பூ நெற்றியிலே
குங்குமத்தை இட்டு கொண்டு
சங்கமிக்க போகும் பெண் ஆவாள்
அழகிய அங்கமெல்லாம்
மின்னும் பொன் ஆவாள்
பெண் : மலரே மலரே….
அவன் தேதில் மூழ்கும் நேரம்
மெதுவாய் மெதுவாய் இந்த
பூவில் பாரம் ஏறும்
அடியே…..அடியே…..
இனி நீயும் அவனும் ஏதேதோ
பெண் : ஒரு சின்ன வெண்ணிலா போலே
நான் வானில் போகிறேன் மேலே
பெண் : முத்த கதைகள் முற்றும் கரைய
வெந்நீர் கொண்டு நீராடினேன்
உன்னை கண்டதால் என்னை மறந்தேன்
தீயில் வேகும் நீராகிறேன்
பெண் : காடு மலைகள் கை வீசி நடந்தேன்
உனது நிழலில் நான் நிற்கிறேன்
உச்சந்தலையில் நேர்கோடு கிழித்து
தலைவன் போக தலை சாய்கிறேன்
பெண் : அந்த கோயில் கதவை மூடு
இவள் கை கோர்க்கும் கடவுள் நீதான்
அட கண்ணீரே இல்லா கண்கள்
இனி என்னோட கண்கள் தானே
குழு : சந்தன பூ நெற்றியிலே
குங்குமத்தை இட்டு கொண்டு
சங்கமிக்க போகும் பெண் ஆவாள்
அழகிய அங்கமெல்லாம்
மின்னும் பொன் ஆவாள்
பெண் : ஒரு சின்ன வெண்ணிலா போலே
நான் வானில் போகிறேன் மேலே
அடி துள்ளி குதிப்பது இங்கு ஏன்தான்
நீ தூண்டில் மாட்டிக்கொண்ட மீன்தான்
குழு : …………………….
பெண் : குத்து விளக்காய் கூடி இருந்தேன்
மின்னல் போல ஓடோடினேன்
சின்ன விதையாய் மண்ணில் இருந்தேன்
வேர்கள் விட்டு ஆளாகினேன்
பெண் : மீசை கயிற்றில் பொன்னுஞ்சல் அமைத்து
உனது குழந்தை தாலாட்டுவேன்
பசிக்கும் பொழுது மடிமீது வைத்து
நிலவை பிழிந்து பாலூட்டுவேன்
பெண் : குழல் மீட்டும் விரலாய் வந்தாய்
நான் கற்பூர தீயை ஆனேன்
இவள் கன்னத்தை கிள்ளி போனாய்
ஒரு ஆனந்த பெண்ணாய் ஆனேன்
குழு : வெள்ளி நிலா கன்னத்திலே
வெட்கம் வந்து ஒட்டி கொள்ள
முத்தத்தாலே துடைப்பவன் யார்
சொல்லடி முந்தானைக்கு சொந்தகாரன் யார்
பெண் : ஒரு காதல் தேவனை கண்டேன்
அவன் கண்ணில் தூங்கவே வந்தேன்
அதி காலை சூரியன் நீதான்
உன்னை பார்த்து பூக்கின்ற பூ நான்
பெண் : ஒரு நாள் ஒரு நாள் இவள்
நெஞ்சுக்குள்ளே வீழ்ந்தான்
உயிராய் உயிராய் இவள்
தேகம் எங்கும் வாழ்ந்தான்
அடடா அடடா
நான் உன்னால் நாளை தாயாவேன்…