Singers : K. J. Yesudas and K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Oru kiliyin thanimaiyilae
Siru kiliyin uravu
Chorus : Uravu uravu uravu uravu
Male : Iru kiligal uravinilae
Pudhu kili ondru varavu
Chorus : Varavu varavu varavu varavu

Male : Vizhigalilae kanavu mithanthu vara
Ulagamelaam ninaivu paranthu vara
Dhinam dhinam uravu uravu
Chorus : Pudhithu pudhithu
Male : Varavu varavu
Chorus : Inithu inithu
Male : Kanavu kanavu
Chorus : Pudhiya kanavu aa….haa….

Male : Oru kiliyin thanimaiyilae
Siru kiliyin uravu
Chorus : Uravu uravu uravu uravu
Male : Iru kiligal uravinilae
Pudhu kili ondru varavu

Female : Muththu raththinam unakku sooda
Muththirai kavi isainthu paada
Niththam niththirai karainthu oda
Siththam niththamim ninaiththu kooda

Female : Siru mazhalai mozhigalilae
Chorus : Inimai thavazha idhayam magizha
Female : Iru malarin vizhigalilae
Chorus : Iravum maraiya pagalm theriya

Female : Aasaiyaal unai alla vendum
Anbinaal enai kolla vendum
Serum naal idhuthaan
Chorus : Lala lala lalal lalal lalaa….

Male : Oru kiliyin thanimaiyilae
Siru kiliyin uravu
Chorus : Uravu uravu uravu uravu
Male : Iru kiligal uravinilae
Pudhu kili ondru varavu
Chorus : Varavu varavu varavu varavu

Chorus : ………………

Male : Kattalaippadi kidaiththa vedham
Thottanaippathe enakku pothum
Female : Mottu malligai eduththu thoovum
Muththu punnagai enakku pothum

Male : Oru iraivan varaintha kadhai
Chorus : Pudhiya kavithai iniya kavithai
Female : Kadhai mudivum therivathillai
Chorus : Ilaiya manathai izhuththa kavithai

Male : Paasam endroru raagam ketkum
Paarvai anbenum neerai vaarkkum
Paadum naal idhuthaan
Chorus : Lala lala lalal lalal lalaa

Male : Oru kiliyin thanimaiyilae
Siru kiliyin uravu
Chorus : Uravu uravu uravu uravu

Chorus : Oru kiliyin thanimaiyilae
Siru kiliyin uravu
Iru kiligal uravinilae
Pudhu kili ondru varavu

Chorus : Oru kiliyin thanimaiyilae
Siru kiliyin uravu

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு
குழு : உறவு உறவு உறவு உறவு
ஆண் : இரு கிளிகள் உறவினிலே
புதுக் கிளி ஒன்று வரவு
குழு : வரவு வரவு வரவு வரவு

ஆண் : விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெலாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு
குழு : புதிது புதிது
ஆண் : வரவு வரவு
குழு : இனிது இனிது
ஆண் : கனவு கனவு
குழு : புதிய கனவு ஆ…ஹா…

ஆண் : ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு
குழு : உறவு உறவு உறவு உறவு
ஆண் : இரு கிளிகள் உறவினிலே
புதுக் கிளி ஒன்று வரவு

பெண் : முத்து ரத்தினம் உனக்குச் சூட
முத்திரைக் கவி இசைந்து பாட
நித்தம் நித்திரை கரைந்து ஓட
சித்தம் நித்தமும் நினைந்து கூட

பெண் : சிறு மழலை மொழிகளிலே
குழு : இனிமை தவழ இதயம் மகிழ
பெண் : இரு மலரின் விழிகளிலே
குழு : இரவும் மறைய பகலும் தெரிய

பெண் : ஆசையால் உனை அள்ள வேண்டும்
அன்பினால் எனை கொள்ள வேண்டும்
சேரும் நாள் இதுதான்
குழு : லல லல லலல் லலல் லலா….

பெண் : ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு
குழு : உறவு உறவு உறவு உறவு
பெண் : இரு கிளிகள் உறவினிலே
புதுக் கிளி ஒன்று வரவு
குழு : வரவு வரவு வரவு வரவு

குழு : ……………………………

ஆண் : கட்டளைப் படி கிடைத்த வேதம்
தொட்டணைப்பதே எனக்கு போதும்
பெண் : மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
முத்து புன்னகை எனக்கு போதும்

ஆண் : ஒரு இறைவன் வரைந்த கதை
குழு : புதிய கவிதை இனிய கவிதை
பெண் : கதை முடிவும் தெரிவதில்லை
குழு : இளய மனதை இழுத்த கவிதை

ஆண் : பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பெனும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இது தான்
குழு : லல லல லலல் லலல் லலா….

ஆண் : ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு
குழு : உறவு உறவு உறவு உறவு

குழு : ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு
இரு கிளிகள் உறவினிலே
புதுக் கிளி ஒன்று வரவு

குழு : ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here