Singer : K. J. Jesudass

Music by : Shankar Ganesh

Male : Oru kodi pizhai seithavan
Nallorkku ooyamal thuyar seithavan
Oru kodi pizhai seithavan
Nallorkku ooyamal thuyar seithavan
Thaanennum thrukkeri thadumaarinaen
Dheivaththai madhikkaamal thadam maarinaen
Perumpaavi kodumpaavi naanthaanae

Male : Oru kodi pizhai seithavan
Nallorkku ooyamal thuyar seithavan

Male : Porpudai maadhar karpinai naalum
Podi podiyaakkiyavan
Nalla paambugal vaazhum puttrugal yaavum
Theekkiraiyaakkiyavan

Male : Thalai mudhal kaal varai kadum visham yaera
Thudiththaen puzhuvaaga
Thaaikkoru thaayena thondriya thayavae
Varuvaai viraivaaga
Podhume sodhanai naan padum vedhanai
Podhume sodhanai naan padum vedhanai

Male : Oru kodi pizhai seithavan
Nallorkku ooyamal thuyar seithavan

Male : Naaththazhumpera naaththigam pesi
Naai pol alainthaenae
Ariyaatha sirupillai ivanallavo

Male : Naalvagai vedham naadiya paadham
Idhuthaan arinthaenae
Ini ennai nee kaakka thadai ennavo

Male : Arangkoorum thaayae en abiramiyae
Sabaiyeri aadum nal sivagamiyae
Om enum nadhamae saranam un paadhamae
Om enum nadhamae saranam un paadhamae

Male : Oru kodi pizhai seithavan
Nallorkku ooyamal thuyar seithavan
Thaanennum thrukkeri thadumaarinaen
Dheivaththai madhikkaamal thadam maarinaen
Perumpaavi kodumpaavi naanthaanae
Thaayae vaa…..thayavae vaa…..

பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன்
நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்
ஒரு கோடி பிழை செய்தவன்
நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்
தானென்னும் தருக்கேறி தடுமாறினேன்
தெய்வத்தை மதிக்காமல் தடம் மாறினேன்
பெரும்பாவி கொடும்பாவி நான்தானே

ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன்
நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்

ஆண் : பொற்புடை மாதர் கற்பினை நாளும்
பொடிப் பொடியாக்கியவன்
நல்ல பாம்புகள் வாழும் புற்றுகள் யாவும்
தீக்கிரையாக்கியவன்

ஆண் : பொற்புடை மாதர் கற்பினை நாளும்
பொடிப் பொடியாக்கியவன்
நல்ல பாம்புகள் வாழும் புற்றுகள் யாவும்
தீக்கிரையாக்கியவன்

ஆண் : தலை முதல் கால் வரை கடும் விஷம் ஏற
துடித்தேன் புழுவாக
தாய்க்கொரு தாயென தோன்றிய தயவே
வருவாய் விரைவாக
போதுமே சோதனை நான் படும் வேதனை
போதுமே சோதனை நான் படும் வேதனை

ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன்
நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்

ஆண் : நாத்தழும்பேற நாத்திகம் பேசி
நாய் போல் அலைந்தேனே
அறியாத சிறுப்பிள்ளை இவனல்லவோ

ஆண் : நால்வகை வேதம் நாடிய பாதம்
இதுதான் அறிந்தேனே
இனி என்னை நீ காக்க தடை என்னவோ

ஆண் : அறங்கூறும் தாயே என் அபிராமியே
சபையேறி ஆடும் நல் சிவகாமியே
ஓம் எனும் நாதமே சரணம் உன் பாதமே
ஓம் எனும் நாதமே சரணம் உன் பாதமே

ஆண் : ஒரு கோடி பிழை செய்தவன்
நல்லோர்க்கு ஓயாமல் துயர் செய்தவன்
தானென்னும் தருக்கேறி தடுமாறினேன்
தெய்வத்தை மதிக்காமல் தடம் மாறினேன்
பெரும்பாவி கொடும்பாவி நான்தானே….
தாயே வா…….தயவே வா……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here