Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Oru kudumbam ingae kovil aanathu
Oru kudumbam ingae kovil aanathu
Thirukkuraalil sonna paadal aanathu

Female : Oru kudumbam ingae kovil aanathu

Female : Ambigai pol annai
Antha aandavan pol thanthai
Ambigai pol annai
Antha aandavan pol thanthai
Moondru kaala poojai seiyya moondru pergal pillai

Female : Oru kudumbam ingae kovil aanathu

Female : Thalai magan endru piranthavan ingu
Thamarai mel neerai pola thaniththiruppaan indru
Thamarai mel neerai pola thaniththiruppaan indru
Thaan pidiththa muyalgalukkae moondru kaalgal endru
Thaan pidiththa muyalgalukkae moondru kaalgal endru
Than vazhiyae thani vazhiyaai sellum gunam undu

Female : Oru kudumbam ingae kovil aanathu

Female : Aduththathu endru piranthathu ondru
Sidusidunnu mugam irukkum kaduvan poonaiyondru
Sidusidunnu mugam irukkum kaduvan poonaiyondru
Kadaikuttiyaai kannan vanthaan vilaiyaattuppillai
Kadaikuttiyaai kannan vanthaan vilaiyaattuppillai
Karantha paalai pol irukkum kuzhantha manam vellai

Female : Oru kudumbam ingae kovil aanathu

Female : Naanoru pillai ena solavatharkillai
Naanoru pillai ena solavatharkillai
Naaikkutti pol naan vanthaen neengal vaazhum ellai
Naaikkutti pol naan vanthaen neengal vaazhum ellai
Anbu ennum selvaththai naan abagariththa yaezhai
Anbu ennum selvaththai naan abagariththa yaezhai
Intha veettil thalaiyai neettum aduththa veettu vaazhai
Intha veettil thalaiyai neettum aduththa veettu vaazhai

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது
ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது
திருக்குறளில் சொன்ன பாடல் ஆனது

பெண் : ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது

பெண் : அம்பிகை போல் அன்னை
அந்த ஆண்டவன் போல் தந்தை
அம்பிகை போல் அன்னை
அந்த ஆண்டவன் போல் தந்தை
மூன்று கால பூஜை செய்ய மூன்று பேர்கள் பிள்ளை

பெண் : ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது

பெண் : தலை மகன் என்று பிறந்தவன் இங்கு
தாமரை மேல் நீரைப் போல தனித்திருப்பான் இன்று
தாமரை மேல் நீரைப் போல தனித்திருப்பான் இன்று
தான் பிடித்த முயல்களுக்கே மூன்று கால்கள் என்று
தான் பிடித்த முயல்களுக்கே மூன்று கால்கள் என்று
தன் வழியே தனி வழியாய் செல்லும் குணம் உண்டு

பெண் : ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது

பெண் : அடுத்தது என்று பிறந்தது ஒன்று
சிடுசிடுன்னு முகம் இருக்கும் கடுவன் பூனையென்று
சிடுசிடுன்னு முகம் இருக்கும் கடுவன் பூனையென்று
கடைக்குட்டியாய் கண்ணன் வந்தான் விளையாட்டுப்பிள்ளை
கடைக்குட்டியாய் கண்ணன் வந்தான் விளையாட்டுப்பிள்ளை
கறந்த பாலை போல் இருக்கும் குழந்தை மனம் வெள்ளை

பெண் : ஒரு குடும்பம் இங்கே கோவில் ஆனது

பெண் : நானொரு பிள்ளை என சொல்வதற்கில்லை
நானொரு பிள்ளை என சொல்வதற்கில்லை
நாய்க்குட்டி போல் நான் வந்தேன் நீங்கள் வாழும் எல்லை
நாய்க்குட்டி போல் நான் வந்தேன் நீங்கள் வாழும் எல்லை
அன்பு என்னும் செல்வத்தை நான் அபகரித்த ஏழை
அன்பு என்னும் செல்வத்தை நான் அபகரித்த ஏழை
இந்த வீட்டில் தலையை நீட்டும் அடுத்த வீட்டு வாழை
இந்த வீட்டில் தலையை நீட்டும் அடுத்த வீட்டு வாழை

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Vettaiyan"Manasilaayo Song: Click Here