Singers : Ramya NSK and Karthik

Music by : Ilayaraja

Female : Oru melliya kodu
Miga thulliyamaaga
En nenjil vizhundhadhae
Indru neram kanindhadhae
Oru minnal therindhadhae
Adhil unmai irundhadhae

Female : Nijamaai endhan
Nizhal nee indru
Nizhalae solvaai
Nijam yaedhendru

Male : Oru melliya kodu
Miga thulliyamaaga
En nenjil vizhundhadhae
Indru neram kanindhadhae
Oru minnal therindhadhae
Adhil unmai irundhadhae

Male : Nijamaai endhan
Nizhal nee indru
Nizhalae solvaai
Nijam yaedhendru

Female : Ithanai naal sathamidaa
Nenjil ethanaiyo isai karuvi
En manamum adhilae
Isaikkiradhae swaramae

Male : Puthagamaai puthazhagae unnai
Bathiramaai yendhugiren
Munpaniyaai vizhundhaai
Kanmaniyil kalandhaai

Female : Indha naal varum endrae
Naan kaathirundhenae

Male : Adi nee varum paadhai
Adhil poothirundhenae

Female : Irul aagaadhaa
Idhazh seraadhaa
Endhan aasai thaan
Indru theeraadhaa

Male : Oru melliya kodu
Miga thulliyamaaga
Female : Oru melliya kodu
Oru melliya kodu

Male : Nee varaiyum kodugalai ellaam
Oviyamaai maatridavaa

Female : Konjam poru solven
Konjalinaal kolven

Male : Un imaiyum en imaiyum
Ondraai thoongattumae indriravum

Female : Mogathudan neeyum
Dhaagathudan naanum

Male : Ival marmangalaalae
Enai mayakkugiraalae

Female : Adhai unakku vilakka thaan
Ival valaindhu vandhaalae

Male : Thalli sellaadhae
Enai kollaadhae
Ennai kelaamal
Vidai sollaadhae

Female : Oru melliya kodu
Miga thulliyamaaga
En nenjil vizhundhadhae
Indru neram kanindhadhae

Male : Oru minnal therindhadhae
Adhil unmai irundhadhae

Female : Nijamaai endhan
Nizhal nee indru
Male : Nizhalae solvaai
Nijam yaedhendru
Oru melliya kodu
En nenjil vizhundhadhae

பாடகர்கள் : ரம்யா என்எஸ்கே மற்றும் கார்த்திக்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஒரு மெல்லிய கோடு
மிக துல்லியமாக
என் நெஞ்சில் விழுந்ததே
இன்று நேரம் கனிந்ததே
ஒரு மின்னல் தெரிந்ததே
அதில் உண்மை இருந்ததே

பெண் : நிஜமாய் எந்தன்
நிழல் நீ இன்று
நிழலே சொல்வாய்
நிஜம் ஏதென்று

ஆண் : ஒரு மெல்லிய கோடு
மிக துல்லியமாக
என் நெஞ்சில் விழுந்ததே
இன்று நேரம் கனிந்ததே
ஒரு மின்னல் தெரிந்ததே
அதில் உண்மை இருந்ததே

ஆண் : நிஜமாய் எந்தன்
நிழல் நீ இன்று
நிழலே சொல்வாய்
நிஜம் ஏதென்று

பெண் : இத்தனை நாள் சத்தமிடா
நெஞ்சில் எத்தனையோ இசைக் கருவி
என் மனமும் அதிலே
இசைக்கிறதே ஸ்வரமே

ஆண் : புத்தகமாய் புத்தழகே உன்னை
பத்திரமாய் ஏந்துகிறேன்
முன்பனியாய் விழுந்தாய்
கண்மணியில் கலந்தாய்

பெண் : இந்த நாள் வரும் என்றே
நான் காத்திருந்தேனே

ஆண் : அடி நீ வரும் பாதை
அதில் பூத்திருந்தேனே

பெண் : இருள் ஆகாதா
இதழ் சேராதா
எந்தன் ஆசைதான்
இன்று தீராதா

ஆண் : ஒரு மெல்லிய கோடு
மிக துல்லியமாக
பெண் : ஒரு மெல்லிய கோடு
ஒரு மெல்லிய கோடு

ஆண் : நீ வரையும் கோடுகளை எல்லாம்
ஓவியமாய் மாற்றிடவா

பெண் : கொஞ்சம் பொறு சொல்வேன்
கொஞ்சலினால் கொல்வேன்

ஆண் : உன் இமையும் என் இமையும்
ஒன்றாய் தூங்கட்டுமே இன்றிரவும்

பெண் : மோகத்துடன் நீயும்
தாகத்துடன் நானும்

ஆண் : இவள் மர்மங்களாலே
எனை மயக்குகிறேளே

பெண் : அதை உனக்கு விளக்கத்தான்
இவள் வளைந்து வந்தாளே

ஆண் : தள்ளிச் செல்லாதே
எனைக் கொல்லாதே
என்னைக் கேளாமல்
விடை சொல்லாதே

பெண் : ஒரு மெல்லிய கோடு
மிக துல்லியமாக
என் நெஞ்சில் விழுந்ததே
இன்று நேரம் கனிந்ததே

ஆண் : ஒரு மின்னல் தெரிந்ததே
அதில் உண்மை இருந்ததே

பெண் : நிஜமாய் எந்தன்
நிழல் நீ இன்று
ஆண் : நிழலே சொல்வாய்
நிஜம் ஏதென்று
ஒரு மெல்லிய கோடு
என் நெஞ்சில் விழுந்ததே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here