Singer : T. M. Soundararajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Male : Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Male : Rathinathil seithu vaitha
Chithirathin mandapathil
Uravo uravo uravo
Pathu viral thottizhuthu
Arthamulla sethi solla
Varavo varavo varavo
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Male : Malaril paniyitta kalai
Manjal mugathuku thirai
Pennil nee oru silai
Indru naan athan vilai
Male : Kaniyil oriya mugam
Karumbil vangiya rasam
Rathiyai meriya sugam
Indru naan athan vasam
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Male : Iraivan aalayamani
Idhuvum devanin pani
Anintha mangala ani
Anbu illaram ini
Male : Ondru enbathu varam
Irandu enbathu manam
Moondru enbathu kulam
Mudivillathathu sugam
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Male : Nadhiyil irupakkam karai
Naduvil ezhuvathu alai
Alaiyai meeriya nadai
Vazhalkai thoniyin kadhai
Male : Mullai enbathu nilai
Kurunji enbathu gunam
Marutham enbathu manam
Vazhnthu valarpathu inam
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Male : Rathinathil seithu vaitha
Chithirathin mandapathil
Uravo uravo uravo
Pathu viral thottezhuthu
Arthamulla sethi solla
Varavo varavo varavo
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஆண் : ரத்தினத்தில் செய்து வைத்த
சித்திரத்தின் மண்டபத்தில்
உறவோ உறவோ உறவோ
பத்து விரல் தொட்டிழுத்து
அர்த்தமுள்ள சேதி சொல்ல
வரவோ வரவோ வரவோ
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஆண் : மலரில் பனியிட்ட கலை
மஞ்சள் முகத்துக்கு திரை
பெண்ணில் நீ ஒரு சிலை
இன்று நான் அதன் விலை
ஆண் : கனியில் ஊறிய முகம்
கரும்பில் வாங்கிய ரசம்
ரதியை மீறிய சுகம்
இன்று நான் அதன் வசம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஆண் : இறைவன் ஆலயமணி
இதுவும் தேவனின் பணி
அணிந்த மங்கல அணி
அன்பு இல்லறம் இனி
ஆண் : ஒன்று என்பது வரம்
இரண்டு என்பது மணம்
மூன்று என்பது குலம்
முடிவில்லாதது சுகம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஆண் : நதியில் இருபக்கம் கரை
நடுவில் எழுவது அலை
அலையை மீறிய நடை
வாழ்க்கை தோணியின் கதை
ஆண் : முல்லை என்பது நிலை
குறிஞ்சி என்பது குணம்
மருதம் என்பது மணம்
வாழ்ந்து வளர்ப்பது இனம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஆண் : ரத்தினத்தில் செய்து வைத்த
சித்திரத்தின் மண்டபத்தில்
உறவோ உறவோ உறவோ
பத்து விரல் தொட்டிழுத்து
அர்த்தமுள்ள சேதி சொல்ல
வரவோ வரவோ வரவோ
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்