Singers : S. P. Balasubrahmanyam and B. S. Sasireka

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Oru pazham pazhuthuththathu
Adhu paalil vizhunthathu
Athai paarththiruntha kilikalukku pasi eduththathu

Male : Oru pazham pazhuthuththathu
Adhu paalil vizhunthathu
Athai paarththiruntha kilikalukku pasi eduththathu

Male : Pasi eduththathu udan rusiyum vanthathu
Adhai paathi paathi iru manamum pangu kondathu
Adhai paathi paathi iru manamum pangu kondathu
Pasi eduththathu udan rusiyum vanthathu
Adhai paathi paathi iru manamum pangu kondathu

Male : Vizhi padam pidiththathu mana thiraiyil oduthu
Idaivelaiyindri iruvar paadum duet ketkuthu
Aahaa haa aa….aa…aa… ehae hae hae hae
Vizhi padam pidiththathu mana thiraiyil oduthu
Idaivelaiyindri iruvar paadum duet ketkuthu

Female : Duet ketkuthu antha tune-yum inikuthu
Villan moondru perkal
Thondrinaalum mothi paakkuthu
Duet ketkuthu antha tune-yum inikuthu
Villan moondru perkal
Thondrinaalum mothi paakkuthu
Male : Dishyum dishyum
Female : Dishyum

Male : Oru pazham pazhuthuththathu
Adhu paalil vizhunthathu
Athai paarththiruntha kilikalukku pasi eduththathu

Female : Nee kamban pilaiyo naan
Arasa kanniyo unnai nooru pattu
Pada sonnaal paada mudiyumo
Nee kamban pilaiyo naan
Arasa kanniyo unnai nooru pattu
Pada sonnaal paada mudiyumo

Male : Paada mudiyumae thaalam poda mudiyumae
Besh- aaga paada mudiyumae thaalam poda mudiyumae
Adi kadhal vanthaal kazhuthai kooda kavingan aagumae

Male : Azhagiyaanaval naalai kizhaviyaagalaam
Udal arupathaana pothum manam irupathaagalaam
Female : Irupathaagalaam endrum ilamaiyaagalaam
Naam paattaan paatti aanapothum aattam podalaam

Female : Ilam paruvam vanthathu
Love panna sonnathu
Un mugaththau paarththu
Vetkam vanthu nagaththai kadikkuthu

Female : Ilam paruvam vanthathu
Love panna sonnathu
Un mugaththau paarththu
Vetkam vanthu nagaththai kadikkuthu

Male : Nagaththai kadikkuthu
Konjam naanam irukkuthu
Kattai viralai kondu
Tharaiyil mella vattam poduthu

Both : Naam jodi saernthathu
Kili Josiyam sonnathu
Intha juliet-tu romeo-vai yaar pirippathu

Female : Naan kazhuththa neettanum nee thaali maattanum
Nalla annai endrum thanthai endrum per edukkanum
Male : Per edukkanum moondru pillai pekkanum pettru
Ram raheem rapardunnu peru vaikkanum

Male : …………………
Female : ………………
Male : …………………
Both : Laalaalaalaa laalaalaalaa laalaalaalaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஒரு பழம் பழுத்தது
அது பாலில் விழுந்தது
அதை பார்த்திருந்த கிளிகளுக்கு பசி எடுத்தது

ஆண் : ஒரு பழம் பழுத்தது
அது பாலில் விழுந்தது
அதை பார்த்திருந்த கிளிகளுக்கு பசி எடுத்தது

பெண் : பசி எடுத்தது உடன் ருசியும் வந்தது
அதை பாதி பாதி இரு மனமும் பங்கு கொண்டது
அதை பாதி பாதி இரு மனமும் பங்கு கொண்டது
பசி எடுத்தது உடன் ருசியும் வந்தது
அதை பாதி பாதி இரு மனமும் பங்கு கொண்டது

ஆண் : விழி படம் பிடித்தது மனத் திரையில் ஓடுது
இடைவேளையின்றி இருவர் பாடும் டூயட் கேட்குது
ஆஹா ஹா ஆ…ஆ….ஆ….எஹே ஹே ஹே ஹே
விழி படம் பிடித்தது மனத் திரையில் ஓடுது
இடைவேளையின்றி இருவர் பாடும் டூயட் கேட்குது

பெண் : டூயட் கேட்குது அந்த டூயூனும் இனிக்குது
வில்லன் மூன்று பேர்கள்
தோன்றினாலும் மோதிப் பாக்குது
டூயட் கேட்குது அந்த டூயூனும் இனிக்குது
வில்லன் மூன்று பேர்கள்
தோன்றினாலும் மோதிப் பாக்குது
ஆண் : டிஷ்யூம் டிஷ்யூம்
பெண் : டிஷ்யூம்

ஆண் : ஒரு பழம் பழுத்தது
அது பாலில் விழுந்தது அதை
பார்த்திருந்த கிளிகளுக்கு பசி எடுத்தது ஹுஹூ

பெண் : நீ கம்பன் பிள்ளையோ நான்
அரசக் கன்னியோ உன்னை நூறு பாட்டு
பாடச் சொன்னால் பாட முடியுமோ
நீ கம்பன் பிள்ளையோ நான்
அரசக் கன்னியோ உன்னை நூறு பாட்டு
பாடச் சொன்னால் பாட முடியுமோ

ஆண் : பாட முடியுமே தாளம் போட முடியுமே
பேஷாக பாட முடியுமே தாளம் போட முடியுமே
அடி காதல் வந்தால் கழுதை கூட கவிஞன் ஆகுமே

ஆண் : அழகியானவள் நாளை கிழவியாகலாம்
உடல் அறுபதான போதும் மனம் இருபதாகலாம்
பெண் : இருபதாகலாம் என்றும் இளமையாகலாம்
நாம் பாட்டன் பாட்டி ஆனபோதும் ஆட்டம் போடலாம்

பெண் : இளம் பருவம் வந்தது
லவ் பண்ண சொன்னது
உன் முகத்தை பார்த்து
வெட்கம் வந்து நகத்தை கடிக்குது

பெண் : இளம் பருவம் வந்தது
லவ் பண்ண சொன்னது
உன் முகத்தை பார்த்து
வெட்கம் வந்து நகத்தை கடிக்குது

ஆண் : நகத்தை கடிக்குது
கொஞ்சம் நாணம் இருக்குது
கட்டை விரலைக் கொண்டு
தரையில் மெல்ல வட்டம் போடுது

இருவர் : நாம் ஜோடி சேர்ந்தது
கிளி ஜோஸ்யம் சொன்னது
இந்த ஜூலியட்டு ரோமியோவை யார் பிரிப்பது

பெண் : நான் கழுத்தை நீட்டணும் நீ தாலி மாட்டணும்
நல்ல அன்னை என்றும் தந்தையென்றும் பேர் எடுக்கணும்
ஆண் : பேர் எடுக்கணும் மூன்று பிள்ளை பெக்கணும் பெற்று
ராம் ரஹீம் ராபர்டுன்னு பேரு வைக்கணும்……

ஆண் : ……………………..
பெண் : …………………
ஆண் : …………………….
இருவர் : லாலாலாலா லாலாலாலா லாலாலாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here