Singers : Mano and Swarnalatha

Music by : Ilayaraja

Male : Oru pokkiri raathiri
Paarkkura paarvai thaan
Unna thaakkudhu kekkudhu
Pookkudhu aasai thaan

Male : Pirakkudhu sabalam sabalam
Koduppadhu sulabam sulabam
Mana kaayangal aaraadho kaadhalaal thaan
Oru aarudhal koorinen aadhalaal thaan

Male : Oru pokkiri raathiri
Paarkkura paarvai thaan

Male : Kalloori vaasalilae nattu vaitha
Kaadhal vidhai
Kaayaagi kanindhu varum
Kaalam ulla kaalam varai

Female : Kalyaana pandhalukku
Kaathirukkum vaazha idhu
Kannaa un kai anaikka
Poothirukkum thaazhai idhu

Male : Singaara maeni thaan
Sokka velli paarkudam

Female : Sindhaamal nee idhai
Allugindra naal varum

Male : Eppodhu aarambam
Andhappura naadagam

Female : Yen indha thaamadham
Enna solla kaaranam

Male : Kaathiru kannae
Kodi naattalaam hoi

Female : Kaadhalae vellum
Ena kaattalaam hoi

Male : Oru pokkiri raathiri
Paarkkura paarvai thaan
Female : Unna thaakkudhu kekkudhu
Pookkudhu aasai thaan

Female : Ennodu nee irundhaal
Nenjukkoru nimmadhi thaan
Illaamal thanithirundhaal
Ambu patta paingili thaan

Male : Eppodhum en manadhu
Unnai suttri kolam idum
Thannandhani endrirundhaal
Thathalitthu olam idum

Female : En koondhal vaendudhu
Unnudaiya poo charam
Ennaalil kai varum
Unnudaiya modhiram

Male : En dhaegam yaavumae
Unnudaiya seedhanam
Paarthaalum theerumo
Un azhagu noodhanam

Female : Kaadhalaal koovum
Oru poonguyil hoi

Male : Poonguyil maevum
Ilam aan kuyil hoi

Female : Oru pokkiri raathiri
Paarkkura paarvai thaan
Unna thaakkudhu kekkudhu
Pookkudhu aasai thaan

Female : Pirakkudhu sabalam sabalam
Koduppadhu sulabam sulabam
Mana kaayangal aaraadho kaadhalaal thaan
Oru aarudhal koorinen aadhalaal thaan

Male : Oru pokkiri raathiri
Paarkkura paarvai thaan

Female : Unna thaakkudhu kekkudhu
Pookkudhu aasai thaan

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வைதான்
உன்ன தாக்குது கேக்குது
பூக்குது ஆசைதான்

ஆண் : பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மனக் காயங்கள் ஆறாதோ காதலால்தான்
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால்தான்

ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வைதான்

ஆண் : கல்லூரி வாசலிலே நட்டு வைத்த
காதல் விதை
காயாகி கனிந்து வரும்
காலம் உள்ள காலம் வரை

பெண் : கல்யாணப் பந்தலுக்கு
காத்திருக்கும் வாழை இது
கண்ணா உன் கை அணைக்க
பூத்திருக்கும் தாழை இது

ஆண் : சிங்கார மேனிதான்
சொக்க வெள்ளி பாற்குடம்

பெண் : சிந்தாமல் நீ இதை
அள்ளுகின்ற நாள் வரும்

ஆண் : எப்போது ஆரம்பம்
அந்தப்புர நாடகம்

பெண் : ஏன் இந்த தாமதம்
என்ன சொல்ல காரணம்

ஆண் : காத்திரு கண்ணே
கொடி நாட்டலாம் ஹோய்

பெண் : காதலே வெல்லும்
என காட்டலாம் ஹோய்……

ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வைதான்
பெண் : உன்ன தாக்குது கேக்குது
பூக்குது ஆசைதான்

பெண் : என்னோடு நீ இருந்தால்
நெஞ்சுக்கொரு நிம்மதிதான்
இல்லாமல் தனித்திருந்தால்
அம்பு பட்ட பைங்கிளிதான்

ஆண் : எப்போதும் என் மனது
உன்னைச் சுற்றி கோலம் இடும்
தன்னந்தனி என்றிருந்தால்
தத்தளித்து ஓலம் இடும்

பெண் : என் கூந்தல் வேண்டுது
உன்னுடைய பூச்சரம்
எந்நாளில் கை வரும்
உன்னுடைய மோதிரம்

ஆண் : என் தேகம் யாவுமே
உன்னுடைய சீதனம்
பார்த்தாலும் தீருமோ
உன் அழகு நூதனம்

பெண் : காதலால் கூவும்
ஒரு பூங்குயில் ஹோய்

ஆண் : பூங்குயில் மேவும்
இளம் ஆண் குயில் ஹோய்……

பெண் : ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வைதான்
உன்ன தாக்குது கேக்குது
பூக்குது ஆசைதான்

பெண் : பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மனக் காயங்கள் ஆறாதோ காதலால்தான்
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால்தான்

ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வைதான்

பெண் : உன்ன தாக்குது கேக்குது
பூக்குது ஆசைதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here