Singer : K. J. Yesudas

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Oru pullaanguzhal oomaiyaanathu
Oru poovin manam kaayamaanathu
Oru pullaanguzhal oomaiyaanathu
Oru poovin manam kaayamaanathu

Male : Vaanil thondrum minnal pola
Vaazhvil konda kadhal kalaiya
Vithithaanae sathi seithathu
Ival mathithaanae thadumaaruthu
Vithithaanae sathi seithathu
Ival mathithaanae thadumaaruthu

Male : Oru pullaanguzhal oomaiyaanathu
Oru poovin manam kaayamaanathu

Male : Selai anintha maathu cholai ennumpothu
Avanthaanae aval thedum kaaththu
Kaaththu avanai ninaiththu kaaththu kidanthapothu
Ponaanae veru cholai paatthu

Male : Inikkindra vasantham izhanthaalae sontham
Inikkindra vasantham izhanthaalae sontham
Kolam kalaintha vaasal ival
Megam soozhntha nilavu ival

Male : Oru pullaanguzhal oomaiyaanathu
Oru poovin manam kaayamaanathu

Male : Neelam sinthum nayanam neeril aadum thuyaraan
Shruthi maara thavikkindra raagam
Avanai paathai endru ninaiththa paavai payanam
Vazhi maara thadumaarum paatham

Male : Ezhil konjjum maadam yaettraalae sogam
Ezhil konjjum maadam yaettraalae sogam
Vaarththai tholaintha kavithai ival
Vaazhkkai kulaintha bedhai ival

Male : Oru pullaanguzhal oomaiyaanathu
Oru poovin manam kaayamaanathu

Male : Vaanil thondrum minnal pola
Vaazhvil konda kadhal kalaiya
Vithithaanae sathi seithathu
Ival mathithaanae thadumaaruthu

Male : Oru pullaanguzhal oomaiyaanathu
Oru poovin manam kaayamaanathu

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது
ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது

ஆண் : வானில் தோன்றும் மின்னல் போல
வாழ்வில் கொண்ட காதல் கலைய
விதிதானே சதி செய்தது
இவள் மதிதானே தடுமாறுது….
விதிதானே சதி செய்தது
இவள் மதிதானே தடுமாறுது….

ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது

ஆண் : சேலை அணிந்த மாது சோலை எண்ணும்போது
அவன்தானே அவள் தேடும் காத்து
காத்து அவனை நினைத்து காத்துக் கிடந்த போது
போனானே வேறு சோலை பாத்து

ஆண் : இனிக்கின்ற வசந்தம் இழந்தாளே சொந்தம்
இனிக்கின்ற வசந்தம் இழந்தாளே சொந்தம்
கோலம் கலைந்த வாசல் இவள்
மேகம் சூழ்ந்த நிலவு இவள்…….

ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது

ஆண் : நீலம் சிந்தும் நயனம் நீரில் ஆடும் துயரம்
ஸ்ருதி மாற தவிக்கின்ற ராகம்
அவனை பாதை என்று நினைத்த பாவை பயணம்
வழி மாற தடுமாறும் பாதம்

ஆண் : எழில் கொஞ்சும் மாடம் ஏற்றாளே சோகம்
எழில் கொஞ்சும் மாடம் ஏற்றாளே சோகம்
வார்த்தை தொலைந்த கவிதை இவள்
வாழ்க்கை குலைந்த பேதை இவள்…..

ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது

ஆண் : வானில் தோன்றும் மின்னல் போல
வாழ்வில் கொண்ட காதல் கலைய
விதிதானே சதி செய்தது
இவள் மதிதானே தடுமாறுது….

ஆண் : ஒரு புல்லாங்குழல் ஊமையானது
ஒரு பூவின் மணம் காயமானது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here