Singers : M. C. Balu and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Oru pudhiya paadagan udhayamaagiraan
Idhyarani un sabhaiyile
Nalla ilamai raagamum paruva thaalamum
Kalanthu ketkum en isaiyile

Male : Oru pudhiya paadagan udhayamaagiraan
Idhyarani un sabhaiyile
Nalla ilamai raagamum paruva thaalamum
Kalanthu ketkum en isaiyile

Male : Pudhiyavan…..naan pudhiyavan…
Iniyavan…..unthan iniyavan….

Female : Ennidathil enna naadagam
Eppozhuthum unthan nyapagam
Unnidathil intha oviyam
Kandu kollum inba kaaviyam

Female : Ennidathil enna nadagam
Eppozhuthum unthan nyapagam
Unnidathil intha oviyam
Kandu kollum inba kaaviyam

Female : Entha vazhi enthan kadhalan
Antha vazhi intha kadhali
Anbu vazhi sellum ullame
Antharangam enna sollumo

Male : Oru pudhiya paadagan udhayamaagiraan
Idhyarani un sabhaiyile
Nalla ilamai raagamum paruva thaalamum
Kalanthu ketkum en isaiyile…..

Female : …………….

Male : Kandhanidam vantha valli maan
Gaanagathil thullum pulli maan
Enthanidam vantha enthan maan
Kayirendil thannai thantha maan

Male : Chinna idhazh sinthum punnagai
Minnavarum intha kannigai
Poovinathil oru malligai
Penninathil oru menagai

Male : Oru pudhiya paadagan udhayamaagiraan
Idhyarani un sabhaiyile
Nalla ilamai raagamum paruva thaalamum
Kalanthu ketkum en isaiyile…..

Male : ………….

Female : Kannanukku oru kogulam
Mannukku intha penn manam
Male : Nitham nitham anthi maalaiyil
Nenjirendum konjum velaiyil

Female : Kannanukku oru kogulam
Mannukku intha penn manam
Male : Nitham nitham anthi maalaiyil
Nenjirendum konjum velaiyil

Female : Nenjam varai vantha paingili
Manjam varai vara vendumo
Male : Etta etta nindru pesinaal
Ennugindra sugam thondrumo

Male : Oru pudhiya paadagan udhayamaagiraan
Idhyarani un sabhaiyile
Nalla ilamai raagamum paruva thaalamum
Kalanthu ketkum en isaiyile…..

Both : ………………….

பாடகர்கள் : எம். சி. பாலு மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஒரு புதிய பாடகன் உதயமாகிறான்
இதயராணி உன் சபையிலே
நல்ல இளமை ராகமும் பருவ தாளமும்
கலந்து கேட்கும் என் இசையிலே

ஆண் : ஒரு புதிய பாடகன் உதயமாகிறான்
இதயராணி உன் சபையிலே
நல்ல இளமை ராகமும் பருவ தாளமும்
கலந்து கேட்கும் என் இசையிலே

ஆண் : புதியவன்…….நான் புதியவன்…..
இனியவன்…….உந்தன் இனியவன்….

பெண் : என்னிடத்தில் என்ன நாடகம்
எப்பொழுதும் உந்தன் ஞாபகம்
உன்னிடத்தில் இந்த ஓவியம்
கண்டுக் கொள்ளும் இன்ப காவியம்

பெண் : என்னிடத்தில் என்ன நாடகம்
எப்பொழுதும் உந்தன் ஞாபகம்
உன்னிடத்தில் இந்த ஓவியம்
கண்டுக் கொள்ளும் இன்ப காவியம்

பெண் : எந்த வழி எந்தன் காதலன்
அந்த வழி இந்த காதலி
அன்பு வழி செல்லும் உள்ளமே
அந்தரங்கம் என்ன சொல்லுமோ

பெண் : ஒரு புதிய பாடகன் உதயமாகிறான்
இதயராணி என் சபையிலே
நல்ல இளமை ராகமும் பருவ தாளமும்
கலந்து கேட்கும் உன் இசையிலே…..

பெண் : ………………….

ஆண் : கந்தனிடம் வந்த வள்ளி மான்
கானகத்தில் துள்ளும் புள்ளி மான்
எந்தனிடம் வந்த எந்தன் மான்
கையிரெண்டில் தன்னை தந்த மான்

ஆண் : சின்ன இதழ் சிந்தும் புன்னகை
மின்னவரும் இந்த கன்னிகை
பூவினத்தில் ஓரு மல்லிகை
பெண்ணினத்தில் ஒரு மேனகை

ஆண் : ஒரு புதிய பாடகன் உதயமாகிறான்
இதயராணி உன் சபையிலே
நல்ல இளமை ராகமும் பருவ தாளமும்
கலந்து கேட்கும் என் இசையிலே

ஆண் : ……………………….

பெண் : கண்ணனுக்கு ஒரு கோகுலம்
மன்னனுக்கு இந்த பெண் மனம்
ஆண் : நித்தம் நித்தம் அந்தி மாலையில்
நெஞ்சிரெண்டும் கொஞ்சும் வேளையில்

பெண் : கண்ணனுக்கு ஒரு கோகுலம்
மன்னனுக்கு இந்த பெண் மனம்
ஆண் : நித்தம் நித்தம் அந்தி மாலையில்
நெஞ்சிரெண்டும் கொஞ்சும் வேளையில்

பெண் : நெஞ்சம் வரை வந்த பைங்கிளி
மஞ்சம் வரை வர வேண்டுமோ
ஆண் : எட்ட எட்ட நின்று பேசினால்
எண்ணுகின்ற சுகம் தோன்றுமோ….

பெண் : ஒரு புதிய பாடகன் உதயமாகிறான்
இதயராணி என் சபையிலே
ஆண் : நல்ல இளமை ராகமும் பருவ தாளமும்
கலந்து கேட்கும் என் இசையிலே

இருவர் : ……………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here