Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Aa…aaa….aaa….aaa….aaa…
Aahaa… aa… aa…
Female : Oru sandhana kaattukkullae
Muzhu chandhiran kaayayilae
Siru singaara koottukkullae
Malai thaendralum veesayilae
Kuyilu kunju thoongattumae
Raathiri velaiyilae
Kan muzhichu naan iruppen
Kannae un pakkathilae
Solai poovae aaraaro
Pasum sokka ponnae aareeroo
Female : Oru sandhana kaattukkullae
Muzhu chandhiran kaayayilae
Female : Naan valarkkum mootha pillai
Poovum pottum thandha naayaganae naayaganae
Naan kulikkum manjalukku
Naalum kaaval nindra nallavanae nallavanae
Female : En maaman anbukku koyil konda
Dheivam kooda eedillaiyae
Ellaamae en raasaa vaazhvo thaazhvo
Sondham bandham verillaiyae
En polae yaarkkum kanavan vaaikkaadhu
Eer ezhu jenmam uravu neengaadhu
Magizham poovae endhan mani muthae
Kuzhalai polae dhinam mazhalai pesum
Ilam poongothae poongothae
Female : Oru sandhana kaattukkullae
Muzhu chandhiran kaayayilae
Siru singaara koottukkullae
Malai thendralum veesayilae
Kuyilu kunju thoongattumae…
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..
ஆஹா…..ஆஅ……ஆ…..
பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆராரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ
பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
பெண் : நான் வளர்க்கும் மூத்த பிள்ளை
பூவும் பொட்டும் தந்த நாயகனே நாயகனே
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
நாளும் காவல் நின்ற நல்லவனே நல்லவனே
பெண் : என் மாமன் அன்புக்கு கோயில் கொண்ட
தெய்வம் கூட ஈடில்லையே
எல்லாமே என் ராசா வாழ்வோ தாழ்வோ
சொந்தம் பந்தம் வேறில்லையே
என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது
ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலைப் போலே தினம் மழலை பேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே
பெண் : ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே
முழுச் சந்திரன் காயயிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே
குயிலுக் குஞ்சு தூங்கட்டுமே