Singers : P. Unni Krishnan, Sadhana Sargam and Malgudi Subha

Music by : Ilayaraja

Lyrics by : Karunanithi

Female : Oru sundari vanthalaam
Andha munthiri thopula! thopula!

Female : Oru sundari vanthalaam
Andha munthiri thopula! thopula!
Oru sandham padichalaam
Nalla andhiyil pookura poo pola

Female : Sangeetham sathiram theriyadhu
Aanalum paaduva!
Vaathiyar kedaiyathu
Aanalum vaarthaigal poduva!
Edutha edutha sruthi maaradhu
Andha thaalam velagadhu
Yarum solli tharama mottu
Virikum malligai poo pola

Female : Oru sundari vanthalaam
Andha munthiri thopula! thopula!
Oru sandham padichalaam
Nalla andhiyil pookura poo pola

Dialogue : ………………..

Female : Haaa..haha haa..haa…aaa
Nesam neranja manam pol
Vaasam veesum malar pol
Nadhi karaiyila porandhen
Indha ulagam marandhu

Female : Uthirnthu vilunthu nadhiyil
Porandu porandu alaiyil
Ilukkum dhisaiyil midhanthen
Adhu thaduka marandhu

Female : Oodum nadhi ellaam
Andha kadalil kalakuma!
Paadum isai kaatril
Sendru kalaka marukuma!

Female : Ellarkum edhirpaarpu
Ethanai.. ethaniyo?
Ennai pol thaniyaaga
Valvadhu ethanaiyo

Female : Oru sugam illathavar
Sorga kulanthaigalae…

Female : Oru sundari vanthalaam
Nalla andhiyil poothidum poo pola
Poo pandhu aduchalaam
Thulli thulli kuthikira meen pola

Male : Haa.a.aa..hahahah…aa..aa..hahaahaa…
Nandraga vaalndhaal
Ellorin kangal thirumbum
Undhan meedhile!

Male : Illadhu ponaal
Solladha kadhaigal sollum
Thangal mozhiyilae

Male : Thannaiyae nondhu vazhthirundhal
Edhai than mudipaai enniduvai
Ellarkum kuraigal undu
Yekkam etharkku

Male : Thannaiyae thaalthi kondu
Thavithaai edharkku?
Man meethu veesinalum
Pon maatru kuraiyuma?

Male : Theeyinal suttaalum
Minni minni jolikum
Thangam thangamadi

Male : Oru sundari vanthalaam
Nalla anthiyil poothidum poo pola
Poo pandhu aduchalaam
Thulli thulli kuthikira meen pola

பாடகர்கள்  : பி. உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம் மற்றும் மால்குடி சுபா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : கருணாநிதி

பெண் : ஒரு சுந்தரி வந்தாளாம்
அந்த முந்திரி தோப்பில! தோப்பில!
ஒரு சுந்தரி வந்தாளாம்
அந்த முந்திரி தோப்பில! தோப்பில!
ஒரு சந்தம் படிச்சாளாம்
நல்ல அந்தியில் பூக்கிற பூ போல

பெண் : சங்கீதம் சாத்திரம் தெரியாது
ஆனாலும் பாடுவா!
வாத்தியார் கிடையாது
ஆனாலும் வார்த்தைகள் போடுவா!
எடுத்தா எடுத்த ஸ்ருதி மாறாது
அந்த தாளம் விலகாது
யாரும் சொல்லித் தரமா மொட்டு
விரிக்கும் மல்லிகை பூ போல

பெண் : ஒரு சுந்தரி வந்தாளாம்
அந்த முந்திரி தோப்பில! தோப்பில!
ஒரு சந்தம் படிச்சாளாம்
நல்ல அந்தியில் பூக்கிற பூ

வசனம் : ………………………..

பெண் : ஹா..ஆஅ..ஆ…ஆஅ….
நேசம் நெறஞ்ச மணம் போல்
வாசம் வீசும் மலர் போல்
நதி கரையில பொறந்தேன்
இந்த உலகம் மறந்து

பெண் : உதிர்ந்து விழுந்த நதியில்
பொறண்டு பொறண்டு அலையில்
இழுக்கும் திசையில் மிதந்தேன்
அதை தடுக்க மறந்து

பெண் : ஓடும் நதி எல்லாம்
அந்த கடலில் கலக்குமா?
வாழும் இசை காற்றில்
சென்று கலக்க மறக்குமா!

பெண் : எல்லாருக்கும் எதிர்பார்ப்பு
எத்தனை? எத்தனையோ?
என்னை போல் தனியாக
வாழ்வது எத்தனையோ
ஒரு சோகம் இல்லாதவர்
சொர்க்க குழந்தைகளே!

பெண் : ஒரு சுந்தரி வந்தாளாம்
நல்ல அந்தியில் பூத்திடும் பூ போல
பூ பந்து அடிச்சாளாம்
துள்ளி துள்ளி குதிக்கிற மீன் போல

ஆண் : ஹா..ஆஆ…ஆஅ…
நன்றாக வாழ்ந்தால்
எல்லோரின் கண்கள் திரும்பும்
உந்தன் மீதினிலே!

ஆண் : இல்லாது போனால்
சொல்லாத கதைகள் சொல்லும்
தங்கள் மொழியிலே!

ஆண் : தன்னையே நொந்து வாழந்திருந்தால்
எதை தான் முடிப்பாய் எண்ணிடுவாய்

ஆண் : எல்லாருக்கும் குறைகள் உண்டு
ஏக்கம் எதற்கு
தன்னையே தாழ்த்தி
கொண்டு தவித்தாய் எதற்கு?

ஆண் : மண் மீது வீசினாலும்
பொன் மாற்று குறையுமா?
தீயினில் சுட்டாலும்
மின்னி மின்னி ஜொலிக்கும்
தங்கம் தங்கமடி

ஆண் : ஒரு சுந்தரி வந்தாளாம்
நல்ல அந்தியில் பூத்திடும் பூ போல
பூ பந்து அடிச்சாளாம்
துள்ளி துள்ளி குதிக்கிற மீன் போல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here