Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Oru tharam orae tharam
Udhavi seidhaal enna paavam
Iruvarum arimugam
Aanadhil verenna laabam

Male : Oru tharam orae tharam
Udhavi seidhaal enna paavam
Iruvarum arimugam
Aanadhil verenna laabam

Female : Iruvarukkum mudhal mayakkam
Idam koduthaal adhu yedhu varaikkum
Penmai endraal kan maraivaai
Moodi vaithaal suvai irukkum

Female : Iruvarukkum mudhal mayakkam
Idam koduthaal adhu yedhu varaikkum

Male : Ulladhellaam alli thandhaal
Kaalamellaam suvai irukkum

Female : Oru tharam orae tharam
Uravu thaedum kangal paavam
Thanimaiyil urugidum
Paarvaiyil ennenna baavam

Male : Vanna silai edhir vandhaalo
Kannukkoru badhil thandhaalo
Thottu kolla thadai seivaalo
Thathi thathi mella selvaalo

Female : Thanga valai thalir kaiyodu
Velli thingal iru kannodu
Muthu pandhal nagai thannodu
Mannan mattum ival nenjodu

Female : Oru tharam orae tharam
Uravu thaedum kangal paavam
Thanimaiyil urugidum
Paarvaiyil ennenna baavam

Male : Sithirathin mugam kandenae
Sembavalam niram endrenae
Unna unna idhazh senthaenae
Unnidathil ennai thandhaenae

Female : Illai enum idai thallaada
Mella mella unnai mandraada
Solla solla thoda vandhaayo
Enna enna sugam kandaayo

Male : Oru tharam orae tharam
Udhavi seidhaal enna paavam
Iruvarum arimugam
Aanadhil verenna laabam
Oru tharam
Female : Orae tharam

பாடகர்கள் : பி சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்

ஆண் : ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்

பெண் : இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
பெண்மை என்றால் கண் மறைவாய்
மூடி வைத்தால் சுவை இருக்கும்

பெண் : இருவருக்கும் முதல் மயக்கம்
இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்

பெண் : உள்ளதெல்லாம் அள்ளித் தந்தால்
காலமெல்லாம் சுவை இருக்கும்

பெண் : ஒரு தரம் ஒரே தரம்
உறவு தேடும் கண்கள் பாவம்
தனிமையில் உருகிடும்
பார்வையில் என்னென்ன பாவம்

ஆண் : வண்ணச்சிலை எதிர் வந்தாளோ
கண்ணுக்கொரு பதில் தந்தாளோ
தொட்டுக்கொள்ள தடை செய்வாளோ
தத்தி தத்தி மெல்ல செல்வாளோ

பெண் : தங்கவளை தளிர்க்கையோடு
வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு
முத்துப்பந்தல் நகை தன்னோடு
மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு

பெண் : ஒரு தரம் ஒரே தரம்
உறவு தேடும் கண்கள் பாவம்
தனிமையில் உருகிடும்
பார்வையில் என்னென்ன பாவம்

ஆண் : சித்திரத்தின் முகம் கண்டேனே
செம்பவழ நிறம் என்றேனே
உண்ண உண்ண இதழ் செந்தேனே
உன்னிடத்தில் என்னை தந்தேனே

பெண் : இல்லை என்னும் இடை தள்ளாட
மெல்ல மெல்ல உன்னை மன்றாட
சொல்ல சொல்ல தொட வந்தாயோ
என்ன என்ன சுகம் கண்டாயோ

ஆண் : ஒரு தரம் ஒரே தரம்
உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்
ஒரு தரம்
பெண் : ஒரே தரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here