Singer :P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Oru vitha mayakkam unnidam enakkum
Oru vitha mayakkam unnidam enakkum
Irupathil evarkkum iruppathu vazhakkam

Female : Oru vitha mayakkam unnidam enakkum
Irupathil evarkkum iruppathu vazhakkam
Vaai konjam velukkum
Idhazh konjam sivakkum
Noi ondru irukkum nee varum varaikkum

Female : Oru vitha mayakkam unnidam enakkum
Irupathil evarkkum iruppathu vazhakkam

Female : Yaedugakal pol iru kannam irukka
Ezhuthum mannavaa
Ezhuthiya paadalil ennenna suvaiyo
Muzhuthum sollavaa

Female : Yaedugakal pol iru kannam irukka
Ezhuthum mannavaa
Ezhuthiya paadalil ennenna suvaiyo
Muzhuthum sollavaa

Female : Madithaan manjam malar manjam
Idhazhthaan kinnam madhu kinnam
Idaithaan medai mani medai
Innum enna sugam thevai
Paruvangal namakkaaga paruvangal namakkaaga

Female : Oru vitha mayakkam unnidam enakkum
Irupathil evarkkum iruppathu vazhakkam

Female : Naadi narambinil aayiram minnal
Odum kaaranam
Naal vizhu saernthing naaloru vidhamaai
Aadum naadagam

Female : Thegam thazhuva varumpothu
Thendral nuzhaiya idamedhu
Kaaval ondru kidaiyaathu
Kadhal valara thadaiyaethu
Thodarattum inithaaga
Thodarattum inithaaga

Female : Oru vitha mayakkam unnidam enakkum
Irupathil evarkkum iruppathu vazhakkam

Female : Oru vitha mayakkam……

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்

பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்
வாய் கொஞ்சம் வெளுக்கும்
இதழ் கொஞ்சம் சிவக்கும்
நோய் ஒன்று இருக்கும் நீ வரும் வரைக்கும்

பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்

பெண் : ஏடுகள் போல் இரு கன்னம் இருக்க
எழுதும் மன்னவா
எழுதிய பாடலில் என்னென்ன சுவையோ
முழுதும் சொல்லவா

பெண் : ஏடுகள் போல் இரு கன்னம் இருக்க
எழுதும் மன்னவா
எழுதிய பாடலில் என்னென்ன சுவையோ
முழுதும் சொல்லவா

பெண் : மடிதான் மஞ்சம் மலர் மஞ்சம்
இதழ்தான் கிண்ணம் மது கிண்ணம்
இடைதான் மேடை மணி மேடை
இன்னும் என்ன சுகம் தேவை
பருவங்கள் நமக்காக பருவங்கள் நமக்காக

பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்

பெண் : நாடி நரம்பினில் ஆயிரம் மின்னல்
ஓடும் காரணம்
நால் விழி சேர்ந்திங்கு நாளொரு விதமாய்
ஆடும் நாடகம்

பெண் : தேகம் தழுவ வரும்போது
தென்றல் நுழைய இடமேது
காவல் ஒன்று கிடையாது
காதல் வளர தடையேது
தொடரட்டும் இனிதாக
தொடரட்டும் இனிதாக

பெண் : ஒரு வித மயக்கம் உன்னிடம் எனக்கும்
இருபதில் எவர்க்கும் இருப்பது வழக்கம்

பெண் : ஒரு வித மயக்கம்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here