Singers :  P. B. Srinivas and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Oruthi oruvanai ninathu vittaal
Andha uravukku peyarenna

Male : Kaadhal…

Female : Andha oruvan orthiyai manandhu kondaal
Andha urimaikku peyar enna

Male : Kudumbam…

Female : Ninaithavan alavai marandhu vittaal
Andha nilamaiyin mudivenna

Male : Thuyaram…mm..mm…mm…

Female : Pirindhavar meendum serndhu vittaal
Angu penmaiyin nilai enna

Male : Maunam…

Female : Oruthi oruvanai ninathu vittaal
Andha uravukku peyarenna

Male : Kaadhal…

Female : Iravum pagalum unnuruvam
Adhil ingum angum unnuruvam
Iravum pagalum unnuruvam
Adhil ingum angum unnuruvam

Male : Adakkam enbadhu pennuruvam
Adhai arindhaal maraiyum ennuruvam
Adakkam enbadhu pennuruvam
Adhai arindhaal maraiyum ennuruvam

Female : Maraikka muyandren mudiyavillai unnai
Marakka muyandren nadakkavillai
Maraikka muyandren mudiyavillai unnai
Marakka muyandren nadakkavillai

Male : Ninaikkum nilaiyilum naan illai
Unai nerungum thagudhiyum enakkillai

Female : Oruthi oruvanai ninathu vittaal
Andha uravukku peyarenna

Male : Kaadhal…

Female : Ketten kettadhu kidaikkavillai
Ennai gaeli seidhaai manam porukkavillai
Ketten kettadhu kidaikkavillai
Ennai gaeli seidhaai manam porukkavillai

Male : Vaadham seivadhu en kadamai
Adhil vazhiyai kaanbadhu un thiramai
Vaadham seivadhu yen kadamai
Adhil vazhiyai kaanbadhu un thiramai

Female : Kanden kandadhu nalla vazhi
Adhu kaadhalan udanae sellum vazhi
Kanden kandadhu nalla vazhi
Adhu kaadhalan udanae sellum vazhi

Male : Sonnen pala murai yaasikkiraai
Nee sonnadhai naanum yosikkiren

Female : Oruthi oruvanai ninathu vittaal
Andha uravukku peyarenna

Male : Kaadhal…

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஒருத்தி ஒருவனை
நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன

ஆண் : காதல்……

பெண் : அந்த ஒருவன் ஒருத்தியை
மணந்து கொண்டால்
அந்த உரிமைக்குப் பெயர் என்ன

ஆண் : குடும்பம்……

பெண் : நினைத்தவன் அவளை
மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன

ஆண் : துயரம்……ம்ம்…..ம்ம்…..ம்ம்…..

பெண் : பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன

ஆண் : மௌனம்……..

பெண் : ஒருத்தி ஒருவனை
நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன

ஆண் : காதல்……

பெண் : இரவும் பகலும் உன்னுருவம்
அதில் இங்கும் அங்கும் உன் உருவம்
இரவும் பகலும் உன்னுருவம்
அதில் இங்கும் அங்கும் உன் உருவம்

ஆண் : அடக்கம் என்பது பெண்ணுருவம்
அதை அறிந்தால் மறையும் என்னுருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம்
அதை அறிந்தால் மறையும் என்னுருவம்

பெண் : மறைக்க முயன்றேன்
முடியவில்லை உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை

ஆண் : நினைக்கும் நிலையிலும் நான் இல்லை
உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

பெண் : ஒருத்தி ஒருவனை
நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன

ஆண் : காதல்……

பெண் : கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
என்னை கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

ஆண் : வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை

பெண் : கண்டேன் கண்டது நல்ல வழி
அது காதலன் உடனே செல்லும் வழி
கண்டேன் கண்டது நல்ல வழி
அது காதலன் உடனே செல்லும் வழி

ஆண் : சொன்னேன் பல முறை யாசிக்கிறாய்
நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்

பெண் : ஒருத்தி ஒருவனை
நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன

ஆண் : காதல்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here