Oruvan Oruthi Thunai Song Lyrics from Veettukku Vandha Marumagal Film, Starring Ravichandran, Muthuraman, A. V. M. Rajan and Others. This song was sung by A. M. Raja and Jikki and the music was composed by Shankar Ganesh. Lyrics works are penned by Kannadasan.

Singers : A. M. Raja and Jikki

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Oruvan oruththi thunai saernthu vittaal
Tamil oorvalam pogaatho
Oruvan oruththi thunai saernthu vittaal
Tamil oorvalam pogaatho

Female : Ondrai ondru alli eduththaal
Ulagam muzhuvathum mayangaatho….
Ondrai ondru alli eduththaal
Ulagam muzhuvathum mayangaatho…

Both : Oruvan oruththi thunai saernthu vittaal
Tamil oorvalam pogaatho

Female : Ponnoonjal podum kannoonjal meedhu
Neeyaadum aattamenna
Male : En poojai melangal aasai raagangal
Paadum paadalenna…aa….

Female : Manthaara megam vanthaadum koondhal
Panthaada ketpathenna
Male : Poomaalai polen maarbil sooda
Naan pogum vegamenna

Female : Udal maari maari aadi vizhunthu
Male : Varum maayam pola kadhal virunthu

Female : Oruvan oruththi thunai saernthu vittaal
Tamil oorvalam pogaatho
Male : Ondrai ondru alli eduththaal
Ulagam muzhuvathum mayangaatho….

Both : Oruvan oruththi thunai saernthu vittaal
Tamil oorvalam pogaatho

Male : Senthoora vaayil sinthaatha thenai
Undaalum bodhai tharum
Female : En pookkal naangaiyum eekkal pola nee
Paarkka mbodhai varum

Male : Thenpaangu selai kaipottu moodum
Ponmaeni bodhai tharum
Female : Nee thedi paarkkalaam odi paarkkalaam
En maeni paadhai tharum

Male : Idhu aandu nooru vaazhum uravu
Female : Intha aandu thorum kadhal iravu

Both : Oruvan oruththi thunai saernthu vittaal
Tamil oorvalam pogaatho
Ondrai ondru alli eduththaal
Ulagam muzhuvathum mayangaatho….

Both : Oruvan oruththi thunai saernthu vittaal
Tamil oorvalam pogaatho
Lallaa lalala laalllaa laa….

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால்
தமிழ் ஊர்வலம் போகாதோ
ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால்
தமிழ் ஊர்வலம் போகாதோ

பெண் : ஒன்றை ஒன்று அள்ளி எடுத்தால்
உலகம் முழுவதும் மயங்காதோ…..
ஒன்றை ஒன்று அள்ளி எடுத்தால்
உலகம் முழுவதும் மயங்காதோ…..

இருவர் : ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால்
தமிழ் ஊர்வலம் போகாதோ

பெண் : பொன்னூஞ்சல் போடும் கண்ணூஞ்சல் மீது
நீயாடும் ஆட்டமென்ன
ஆண் : என் பூஜை மேளங்கள் ஆசை ராகங்கள்
பாடும் பாடலென்ன….ஆ….

பெண் : மந்தார மேகம் வந்தாடும் கூந்தல்
பந்தாடக் கேட்பதென்ன
ஆண் : பூமாலை போலென் மார்பில் சூட
நான் போகும் வேகமென்ன

பெண் : உடல் மாறி மாறி ஆடி விழுந்து
ஆண் : வரும் மாயம் போல காதல் விருந்து

பெண் : ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால்
தமிழ் ஊர்வலம் போகாதோ
ஆண் : ஒன்றை ஒன்று அள்ளி எடுத்தால்
உலகம் முழுவதும் மயங்காதோ…..

இருவர் : ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால்
தமிழ் ஊர்வலம் போகாதோ

ஆண் : செந்தூர வாயில் சிந்தாத தேனை
உண்டாலும் போதை வரும்
பெண் : என் பூக்கள் நான்கையும் ஈக்கள் போல நீ
பார்க்க போதை வரும்

ஆண் : தென்பாங்கு சேலை கைபோட்டு மூடும்
பொன்மேனி போதை தரும்
பெண் : நீ தேடித் பார்க்கலாம் ஓடிப் பார்க்கலாம்
என் மேனி பாதை தரும்

ஆண் : இது ஆண்டு நூறு வாழும் உறவு
பெண் : இந்த ஆண்டு தோறும் காதல் இரவு

இருவர் : ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால்
தமிழ் ஊர்வலம் போகாதோ
ஒன்றை ஒன்று அள்ளி எடுத்தால்
உலகம் முழுவதும் மயங்காதோ…..

இருவர் : ஒருவன் ஒருத்தி துணை சேர்ந்து விட்டால்
தமிழ் ஊர்வலம் போகாதோ
லல்லா லல்ல லால்லா லா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here