Singers : K. S. Chithra and Vani Jairam

Music by : Vijayanand

Lyrics by : Vaali

Female : Oruvanukkku oruththiyena
Uravu kolla urimai ulla
Vannamayil kannagiyum naanae

Female : Silambin mani sithara manam sithara
Thalaivan avan thirusabaiyil
Nadanamidum maadhaviyum naanae

Female : Malareduththu kuzhal mudiththu
Manavaraiyil karam pidiththa
Kula magalum kuna magalum ivalae

Female : Kanigai en per irunthum
Kanavar ena oruvar vasam
Saranadaintha sarasa magal ivalae

Female : Oruvanukkku oruththiyena
Uravu kolla urimai ulla
Vannamayil kannagiyum naanae

Female : Naan potta maalai ennaalumae
Nee theenda koodaathu podi
Naalthorum maalai un kaavalan
Vanthaanae en vaasal thedi

Female : Naanangal yaedhum illaathaval
Pennalla peyallavo
Pasi vantha velai theerkkaathaval
Kaniyalla kaayallavo

Female : Aduththavalin kudiththanaththil
Idam pidiththal muraiyaa
Oru mugaththil iru vizhigal
Iruppathenna thavaraa

Female : Enakkenave piranthavandi
Female : Idaiyil ennai kalanthavandi
Female : Iniyum intha virasamenna
Iruvarukkul sarasamenna

Female : Oruvanukkku oruththiyena
Uravu kolla urimai ulla
Kannin mani rukkumani naanae

Female : Thalaivan radham nadaththa
Samar kalaththil vadam pidiththa
Vanithai intha bhaamaa enum
Azhagu nalar thaanae

Female : Kaiyodu yaenthum pullaanguzhal
Adhu pola naan konda sontham
Female : Kannaana kannan brinthaavanam
Ennaalum bhaamavin bantham

Female : Neeraadum gangai naanallavo
En pol neeyaagumo
Female : Aanantha vellam naanthaanadi
Yamunaikku eedaagumo

Female : Enakkirukkum urimaiyinai
Parippathenna muraiyo
Female : Oru nadhiyai iru karaiyum
Thazhuvuvathu thavaro

Female : Kadal kalantha nadhi idhuthaan
Female : Udan inaintha vidhi idhuthaan
Female : Iniyum antha mayakkamenna
Iruvarukkul nerukkamenna

Female : Oruvanukkku oruththiyena
Uravu kolla urimai ulla
Paruva magal pommi ivalthaanae

Female : Thalaivan manamarinthu kunamarinthu
Malarpadukkai viriththu vaiththa
Vadivazhagi vellaiyammaa naanae

Female : Thenpaandi veeran en mannavan
Naan mattum kondaadum devan
Female : Naanenna solla en nenjilum
Neengaamal vaazhgindra jeevan

Female : Naan konjum maeni ennaalumaee
Nee konja koodaathadi
Female : Un mannan vanthaal ennaalumae
Vaasal moodaathadi

Female : Purushan enna palar virumbum
Podhuvudamai porulaa
Female : Iru manaivi muruganukku
Iruppathenna thavaraa

Female : Manitharellaam iravaalla
Female : Unairchchiyillaa maramumalla
Female : Vilakkavurau ini edharkkau
Vilagi vidu vazhakkedharkkau

Female : Oruvanukkku oruththiyena
Uravu kolla urimai ulla
Mudhal vedu en veeduthaanae

Female : Iravil nilaverikka kuliredukka
Iru karaththil aravanaikka
Chinna veedu en veeduthaanae

Female : Ulagariya oorariya arunthathiyum thaanariya
Samsaaram ennaalum ivalae

Female : Aduththavarum ariyaamal
Veeraarkkum theriyaamal
Aanantham tharupavalum ivalae

Female : Oruvanukkku oruththiyena
Uravu kolla urimai ulla
Mudhal veedu en veeduthaanae

Female : {Prabhu….
Female : Anbae….
Female : Prabhu….
Female : Anbae….} (2)

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : விஜயானந்த்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
வண்ணமயில் கண்ணகியும் நானே

பெண் : சிலம்பின் மணி சிதற மனம் சிதற
தலைவன் அவன் திருச்சபையில்
நடனமிடும் மாதவியும் நானே

பெண் : மலரெடுத்து குழல் முடித்து
மணவறையில் கரம் பிடித்த
குல மகளும் குண மகளும் இவளே

பெண் : கனிகை என பேர் இருந்தும்
கணவர் என ஒருவர் வசம்
சரணடைந்த சரச மகள் இவளே

பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
வண்ணமயில் கண்ணகியும் நானே

பெண் : நான் போட்ட மாலை எந்நாளுமே
நீ தீண்டக் கூடாது போடி
நாள்தோறும் மாலை உன் காவலன்
வந்தானே என் வாசல் தேடி

பெண் : நாணங்கள் ஏதும் இல்லாதவள்
பெண்ணல்ல பேயல்லவோ
பசி வந்த வேளை தீர்க்காதவள்
கனியல்ல காயல்லவோ

பெண் : அடுத்தவளின் குடித்தனத்தில்
இடம் பிடித்தல் முறையா
ஒரு முகத்தில் இரு விழிகள்
இருப்பதென்ன தவறா

பெண் : எனக்கெனவே பிறந்தவன்டி
பெண் : இடையில் என்னை கலந்தவன்டி
பெண் : இனியும் இந்த விரசமென்ன
இருவருக்குள் சரசமென்ன

பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
கண்ணின் மணி ருக்குமணி நானே

பெண் : தலைவன் ரதம் நடத்த
சமர் களத்தில் வடம் பிடித்த
வனிதை இந்த பாமா எனும்
அழகு மலர் தானே

பெண் : கையோடு ஏந்தும் புல்லாங்குழல்
அது போல நான் கொண்ட சொந்தம்
பெண் : கண்ணான கண்ணன் பிருந்தாவனம்
எந்நாளும் பாமாவின் பந்தம்

பெண் : நீராடும் கங்கை நானல்லவோ
என் போல் நீயாகுமோ
பெண் : ஆனந்த வெள்ளம் நான்தானடி
யமுனைக்கு ஈடாகுமோ

பெண் : எனக்கிருக்கும் உரிமையினை
பறிப்பதென்ன முறையோ
பெண் : ஒரு நதியை இரு கரையும்
தழுவுவது தவறோ

பெண் : கடல் கலந்த நதி இதுதான்
பெண் : உடன் இணைந்த விதி இதுதான்
பெண் : இனியும் அந்த மயக்கமென்ன
இருவருக்குள் நெருக்கமென்ன

பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
பருவ மகள் பொம்மி இவள்தானே

பெண் : தலைவன் மனமறிந்து குணமறிந்து
மலர்ப்படுக்கை விரித்து வைத்த
வடிவழகி வெள்ளையம்மா நானே

பெண் : தென்பாண்டி வீரன் என் மன்னவன்
நான் மட்டும் கொண்டாடும் தேவன்
பெண் : நானென்ன சொல்ல என் நெஞ்சிலும்
நீங்காமல் வாழ்கின்ற ஜீவன்

பெண் : நான் கொஞ்சும் மேனி எந்நாளுமே
நீ கொஞ்சக் கூடாதடி
பெண் : உன் மன்னன் வந்தால் எந்நாளுமே
என் வாசல் மூடாதடி

பெண் : புருஷன் என்ன பலர் விரும்பும்
பொதுவுடைமை பொருளா
பெண் : இரு மனைவி முருகனுக்கு
இருப்பதென்ன தவறா

பெண் : மனிதரெல்லாம் இறைவனல்ல
பெண் : உணர்ச்சியில்லா மரமுமல்ல
பெண் : விளக்கவுரை இனி எதற்கு
விலகி விடு வழக்கெதற்கு

பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
முதல் வீடு என் வீடு தானே

பெண் : இரவில் நிலவெரிக்க குளிரெடுக்க
இரு கரத்தில் அரவணைக்க
சின்ன வீடு என் வீடுதானே

பெண் : உலகறிய ஊரறிய அருந்ததியும் தானறிய
சம்சாரம் எந்நாளும் இவளே

பெண் : அடுத்தவரும் அறியாமல்
வேறார்க்கும் தெரியாமல்
ஆனந்தம் தருபவளும் இவளே

பெண் : ஒருவனுக்கு ஒருத்தியென
உறவுக் கொள்ள உரிமை உள்ள
முதல் வீடு என் வீடு தானே

பெண் : இரவில் நிலவெரிக்க குளிரெடுக்க
இரு கரத்தில் அரவணைக்க
சின்ன வீடு என் வீடுதானே

பெண் : {பிரபு…..
பெண் : அன்பே….
பெண் : பிரபு…..
பெண் : அன்பே….} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here