Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Female : Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga

Female : Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga

Female : Irunda megam thirandu vandhu
Surundu surundu vilum koondhal
Karandha paalil pirandhu vandhu
Kaniya kaniya nirkkum kannam

Female : Irunda megam thirandu vandhu
Surundu surundu vilum koondhal
Karandha paalil pirandhu vandhu
Kaniya kaniya nirkkum kannam

Female : Oru pakkam kodi vittu
Maru pakkam ilai vittu
Malargindra udal allava
Iravukkum pagalukkum
Uravukku thudikkindra
Azhagukku kadhai sollava

Female : Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga

Female : Paruvamingae kavanam engae
Payanthu payanthu enna paarvai
Uruvam paarthu urugum bothu
Unadhu mugathil enna vervai

Female : Paruvamingae kavanam engae
Payanthu payanthu enna paarvai
Uruvam paarthu urugum bothu
Unadhu mugathil enna vervai

Female : Nadapathu nadakattum mudivathu mudiyattum
Namakkenna aruginil vaa
Inba ragasiyam varugindra pirarukku
Therivadhu thavarallava

Female : Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

பெண் : ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக

பெண் : ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக

பெண் : இருண்ட மேகம் திரண்டு வந்து
சுருண்டு சுருண்டு விழும் கூந்தல்
கறந்த பாலில் பிறந்து வந்து
கனியக் கனிய நிற்கும் கன்னம்

பெண் : இருண்ட மேகம் திரண்டு வந்து
சுருண்டு சுருண்டு விழும் கூந்தல்
கறந்த பாலில் பிறந்து வந்து
கனியக் கனிய நிற்கும் கன்னம்

பெண் : ஒரு பக்கம் கொடி விட்டு
மறு பக்கம் இலை விட்டு
மலர்கின்ற உடலல்லவா
இரவுக்கும் பகலுக்கும் உறவுக்குத் துடிக்கின்ற
அழகுக் கதை சொல்லவா

பெண் : ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக

பெண் : பருவமிங்கே கவனமெங்கே
பயந்து பயந்து என்ன பார்வை
உருவம் பார்த்து உருகும் போது
உனது முகத்தில் என்ன வேர்வை

பெண் : பருவமிங்கே கவனமெங்கே
பயந்து பயந்து என்ன பார்வை
உருவம் பார்த்து உருகும் போது
உனது முகத்தில் என்ன வேர்வை

பெண் : நடப்பது நடக்கட்டும் முடிவது முடியட்டும்
நமக்கென்ன அருகினில் வா
இன்ப ரகசியம் என்பது வருகின்ற பிறருக்கு
தெரிவது தவறல்லவா……..

பெண் : ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here