Singers : Rakshitha Suresh and Ananthu

Music by : Moses

Lyrics by : Kadhir Mozhi

Female : Otha kannula thoosiya pola
Rendu kannulaiyum kuththuraiyae
Kallu erinja kolaththu thanniyaa
Enna kalanga nee vaikkuraiyae

Female : Kaththi munaiyilae naththaiyaa nimisham
Nagarnthu nagarntha poguthunga
Kannu kuzhiyila vizhuntha thanneer
samuththiramaa maaruthunga

Female : Yuththamaa raththamaa nithamaa venaa
Moththamaa naan thaaraen kann muzhidaa
Kannaadi thottikkul meenaaga vaazhntha
Kadala kaatturaen enthiridaa

Female : Vedha manalaa iruntha manam
Potha manalaa izhukkuthadaa
Vedha manalaa iruntha manam
Potha manalaa izhukkuthadaa

Female : Vaanaththa urasum pattathukku
Tharaiyila oru pidi undu
Kallaththanam seiyum
Unnil naanum kollai pona
Nodi kandukittaen

Female : Vaarthaigal ellaam thaandi ulla
Mounaththil oru paashai undu
Kallippoo kalladi thaangikittu
Kaayaththil sirikkum katrukkollu

Female : Sila neram enakkaga
Pala neram unakkaga
Inimelum namakkaaga vaazhnthidanum
Veyilodum mazhaiyodum
Paniyodum kulirodum
Nizhalaaga enkooda vanthidanum

Female : Vazhipariyaa vizhipariyaa
Theriyala onnum piriyalayae
Kadavulthaan kandathumilla
Kandukondaen
Naan kadhalukkulla

Male : Kadhalukkullae

Male : Kaayaththa kothum kaakkaiyena
Kaalangal ennai thoraththuthae
Theevaaga enna nee soozhntha pinnae
Aaraatha kaayangal aariduthae
Eththanai thunbangal vanthathundu
Thaayinmadi theda thonalaiyae

Male : Intha nodi neeyum thaayumadi
Paththu viral enthan thoppul kodi
Kalankaththa sumanthaalum
Oli veesa marukkaatha
Nilavaaga en vaazhvil vanthaayadi

Male : Eravaana elipola
Enakkulla neeyodi
En thookkam ippothu kalaiththaayadi

Male : Thanni vandiyaa irunthavana
Thallivida nee ninaikkalaiyae
Tharikettuthaan thirinjavana
Onakkullathaan karaikiraiyae

Female : Otha kannula thoosiya pola
Rendu kannulaiyum kuththuraiyae
Kallu erinja kolaththu thanniyaa
Enna kalanga nee vaikkuraiyae

பாடகர்கள் : ரக்ஷிதா சுரேஷ் மற்றும் அனந்து

இசையமைப்பாளர் : மோசஸ்

பாடலாசிரியர் : கதிர் மொழி

பெண் : ஒத்த கண்ணுல தூசிய போல
ரெண்டு கண்ணுலையும் குத்துறையே
கல்லு எரிஞ்ச கொளத்து தண்ணியா
என்ன கலங்க நீ வைக்குறையே

பெண் : கத்தி முனையிலே நத்தையா நிமிஷம்
நகர்ந்து நகர்ந்த போகுதுங்க
கண்ணு குழியில விழுந்த தண்ணீர்
சமுத்திரமா மாறுதுங்க

பெண் : யுத்தமா ரத்தமா நித்தமா வேணா
மொத்தமா நான் தாரேன் கண் முழிடா
கண்ணாடி தொட்டிக்குள் மீனாக வாழ்ந்த
கடல காட்டுறேன் எந்திரிடா

பெண் : வெத மணலா இருந்த மனம்
பொத மணலா இழுக்குதடா
வெத மணலா இருந்த மனம்
பொத மணலா இழுக்குதடா

பெண் : வானத்த உரசும் பட்டத்துக்கு
தரையில ஒரு பிடி உண்டு
கள்ளத்தனம் செய்யும்
உன்னில் நானும் கொள்ளை போன
நொடி கண்டுகிட்டேன்

பெண் : வார்த்தைகள் எல்லாம் தாண்டி உள்ள
மௌனத்தில் ஒரு பாஷை உண்டு
கள்ளிப்பூ கல்லடி தாங்கிகிட்டு
காயத்தில் சிரிக்கும் கற்றுக்கொள்ளு

பெண் : சில நேரம் எனக்காக
பல நேரம் உனக்காக
இனிமேலும் நமக்காக வாழ்ந்திடனும்
வெயிலோடும் மழையோடும்
பனியோடும் குளிரோடும்
நிழலாக என்கூட வந்திடனும்

பெண் : வழிபறியா விழிபறியா
தெரியல ஒன்னும் புரியலயே
கடவுள்தான் கண்டதுமில்ல
கண்டுகொண்டேன்
நான் காதலுக்குள்ள

ஆண் : காதலுக்குள்ளே…..

ஆண் : காயத்த கொத்தும் காக்கையென
காலங்கள் என்னை தொரத்துதே
தீவாக என்ன நீ சூழ்ந்த பின்னே
ஆறாத காயங்கள் ஆரிடுதே
எத்தனை துன்பங்கள் வந்ததுண்டு
தாயின்மடி தேட தோணலையே

ஆண் : இந்த நொடி நீயும் தாயுமடி
பத்து விரல் எந்தன் தொப்புள் கொடி
கலங்கத்த சுமந்தாலும்
ஒளி வீச மறுக்காத
நிலவாக என் வாழ்வில் வந்தாயடி

ஆண் : எரவான எலிபோல
எனக்குள்ள நீயோடி
என் தூக்கம் இப்போது கலைத்தாயடி

ஆண் : தண்ணி வண்டியா இருந்தவன
தள்ளிவிட நீ நினைக்கலையே
தறிகெட்டுதான் திரிஞ்சவன
ஒனக்குள்ளதான் கரைக்கிரையே

பெண் : ஒத்த கண்ணுல தூசிய போல
ரெண்டு கண்ணுலையும் குத்துறையே
கல்லு எரிஞ்ச கொளத்து தண்ணியா
என்ன கலங்க நீ வைக்குறையே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here