Singers : Hariharan and Harini

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Vairamuthu

Male : Ovvoru naalum ulagu thirakkum
Udhaya kadhirae vanakkam
Female : Kadhirai kandu kadhavu thirakkum
Kaalai malargaal vanakkam

Male : Ingo engo pozhiya pogum
Eera mazhaiyae vanakkam
Female : Thanga maniyo kaniyo valarkkum
Thaavara kuzhuvae vanakkam

Male : Engal veettil vaasal thelitha
Iravu paniyae vanakkam
Female : Engalai vidavum nandraai paadum
Innisai kuyilgaal vanakkam

Male : Parandhu kondae kaadu valarkkum
Paravai inangaal vanakkam
Female : Nadandhu kondae dhaagam theerkkum
Nanneer nadhigaal vanakkam

Male : Kodi yugangal thuitha pinnum
Kuraiyaa kaatrae vanakkam
Female : Pudhiya ulagai padaikka thoondum
Pazhaiya neruppae vanakkam

Male : Thonmai porulae vanakkam
Naalai thondrum porulae vanakkam
Female : Pirandha uyirae vanakkam
Indru niraindha uyirae vanakkam

Male : Idhaya poarai mudithu vaikkum
Iravu thuyilae vanakkam

Female : Vaeroar uyirin pasiyai pokkum
Vaervai thuliyae vanakkam
Male : Kaayam meedhu marundhaai veezhum
Kanneer thuliyae vanakkam

Female : Aim boodhathin thuimai kaakkum
Athunai uyirkkum vanakkam
Male : Adutha kolil manidharai yaetrum
Arivu thiramae vanakkam

Female : Kalaiyaa kalaiyae vanakkam
Nalla kavidhai porulae vanakkam
Male : Chamathuva mannae vanakkam
Ulaga samaadhaanamae vanakkam

Female : Vaazhum ulagai iyanga cheiyum
Both : Vayittru pasiyae vanakkam

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் ஹரிணி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : ஒவ்வொரு நாளும் உலகு திறக்கும்
உதயக் கதிரே வணக்கம்
பெண் : கதிரைக் கண்டு கதவு திறக்கும்
காலை மலர்காள் வணக்கம்

ஆண் : இங்கோ எங்கோ பொழியப் போகும்
ஈர மழையே வணக்கம்
பெண் : தங்க மணியோ கனியோ வளர்க்கும்
தாவரக் குழுவே வணக்கம்

ஆண் : எங்கள் வீட்டில் வாசல் தெளித்த
இரவுப் பனியே வணக்கம்
பெண் : எங்களை விடவும் நன்றாய்ப் பாடும்
இன்னிசைக் குயில்காள் வணக்கம்

ஆண் : பறந்து கொண்டே காடு வளர்க்கும்
பறவை இனங்காள் வணக்கம்
பெண் : நடந்து கொண்டே தாகம் தீர்க்கும்
நன்னீர் நதிகாள் வணக்கம்

ஆண் : கோடி யுகங்கள் துய்த்த பின்னும்
குறையாக் காற்றே வணக்கம்
பெண் : புதிய உலகைப் படைக்கத் தூண்டும்
பழைய நெருப்பே வணக்கம்

ஆண் : தொன்மைப் பொருளே வணக்கம்
நாளை தோன்றும் பொருளே வணக்கம்
பெண் : பிறந்த உயிரே வணக்கம்
இன்று நிறைந்த உயிரே வணக்கம்

ஆண் : இதயப் போரை முடித்து வைக்கும்
இரவுத் துயிலே வணக்கம்

பெண் : வேறோர் உயிரின் பசியைப் போக்கும்
வேர்வைத் துளியே வணக்கம்
ஆண் : காயம் மீது மருந்தாய் வீழும்
கண்ணீர்த் துளியே வணக்கம்

பெண் : ஐம் பூதத்தின் தூய்மை காக்கும்
அத்துணை உயிர்க்கும் வணக்கம்
ஆண் : அடுத்த கோளில் மனிதரை ஏற்றும்
அறிவுத் திறமே வணக்கம்

பெண் : கலையாக் கலையே வணக்கம்
நல்ல கவிதைப் பொருளே வணக்கம்
ஆண் : சமத்துவ மண்ணே வணக்கம்
உலக சமாதானமே வணக்கம்

பெண் : வாழும் உலகை இயங்கச் செய்யும்
இருவர் : வயிற்றுப் பசியே வணக்கம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here