Singer : Sangeetha Rajeshwaran

Music by : Shankar Ganesh

Lyricist : Vaali

Female : Paaduven kelungal thozhargalae
Anbaana nanbargalae
Ovvoru vaaththiyaar entha maathiri
Mimikkiri pannuvaen antha maathiri

Female : Paaduven kelungal thozhargalae
Anbaana nanbargalae

Female : Namma english vaaththiyaar peru ganapathi rawthaan
Nada ippadiththaan irukkum avar
Paanaiyin udalirukkum poonaiyin kuralirukkum
Paadiyum valainjirukkum thaadiyum valarnthirukkum
Appaavi aanaalum sidumoonji…..

Female : Paaduven kelungal thozhargalae
Anbaana nanbargalae
Ovvoru vaaththiyaar entha maathiri
Mimikkiri pannuvaen antha maathiri

Female : Naama tamil padikkum vaaththiyaar peru thaaththasaarithaan
Avar tamizhil bodhaiyundu ooru pandiserithaan
Kaalarillaa sattai kayil podimatta
Neththiyilae patta nadu thalaiyil sotta

Female : Sotta thala palapalannu kannaadi polirukkum
Pottapulla thalaseevi pottu vachchu poo mudikkum
Ippothum eppothum azhumoonji
Ippothum eppothum azhumoonji

Female : Paaduven kelungal thozhargalae
Anbaana nanbargalae
Ovvoru vaaththiyaar entha maathiri
Mimikkiri pannuvaen antha maathiri

Female : Paaduven kelungal thozhargalae
Anbaana nanbargalae

Female : Namma kanakku vaaththiyaar peru adaikkalasaami
Dhinam kanakku poda solli poradikkira saami
Kanakkula medhaiyinnu perai eduththavaru
Kanakkae illama pullaigalai peththavaru
Aaan yaezhu penn yaezhu padhinezhu…

Female : Indha vaaththiyaargal ellaam ungal thanthaiyai polae
Neengal maanavargal ellaam peththa pillaigal polae
Veligal polirunthu kaappavar ivarandro
Goligal palavaaru seivathu thavarandro
Ennaagum sollungal edhirkaalam

Female : Paaduven kelungal thozhargalae
Anbaana nanbargalae
Ovvoru vaaththiyaar entha maathiri
Mimikkiri pannuvaen antha maathiri

Female : Nalla per vaanguvom vaaththiyaaridam
Vaangiyae vaazhuvom entha naalilum
Nalla per vaanguvom vaaththiyaaridam
Vaangiyae vaazhuvom entha naalilum

பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர்  : வாலி

பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே
ஒவ்வொரு வாத்தியார் எந்த மாதிரி
மிமிக்கிரி பண்ணுவேன் அந்த மாதிரி

பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே

பெண் : நம்ம இங்கிலீஷ் வாத்தியார் பேரு கணபதி ராவ்தான்
நட இப்படித்தான் இருக்கும் அவர்……
பானையின் உடலிருக்கும் பூனையின் குரலிருக்கும்
பாடியும் வளைஞ்சிருக்கும் தாடியும் வளர்ந்திருக்கும்
அப்பாவி ஆனாலும் சிடுமூஞ்சி….

பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே
ஒவ்வொரு வாத்தியார் எந்த மாதிரி
மிமிக்கிரி பண்ணுவேன் அந்த மாதிரி

பெண் : நாம தமிழ் படிக்கும் வாத்தியார் பேரு தாத்தாசாரிதான்
அவர் தமிழில் போதையுண்டு ஊரு பாண்டிச்சேரிதான்
காலரில்லா சட்டை கையில் பொடிமட்ட
நெத்தியிலே பட்ட நடுத்தலையில் சொட்ட

பெண் : சொட்ட தல பளபளன்னு கண்ணாடி போலிருக்கும்
பொட்டப்புள்ள தலச்சீவி பொட்டு வச்சு பூமுடிக்கும்
இப்போதும் எப்போதும் அழுமூஞ்சி
இப்போதும் எப்போதும் அழுமூஞ்சி…

பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே
ஒவ்வொரு வாத்தியார் எந்த மாதிரி
மிமிக்கிரி பண்ணுவேன் அந்த மாதிரி

பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே

பெண் : நம்ம கணக்கு வாத்தியார் பேரு அடைக்கலசாமி
தினம் கணக்கு போடச் சொல்லி போரடிக்கிற சாமி
கணக்குல மேதையின்னு பேரை எடுத்தவரு
கணக்கே இல்லாம புள்ளைங்களை பெத்தவரு
ஆண் ஏழு பெண் ஏழு பதினாலு…..

பெண் : இந்த வாத்தியார்கள் எல்லாம் உங்கள் தந்தையை போலே
நீங்கள் மாணவர்கள் எல்லாம் பெத்த பிள்ளைகள் போலே
வேலிகள் போலிருந்து காப்பவர் இவரன்றோ
கேலிகள் பலவாறு செய்வது தவறன்றோ
என்னாகும் சொல்லுங்கள் எதிர்காலம்

பெண் : பாடுவேன் கேளுங்கள் தோழர்களே
அன்பான நண்பர்களே
நல்ல பேர் வாங்கணும் வாத்தியாரிடம்
வாங்கினால் வாழலாம் எந்த நாளிலும்

பெண் : நல்ல பேர் வாங்குவோம் வாத்தியாரிடம்
வாங்கியே வாழுவோம் எந்த நாளிலும்
நல்ல பேர் வாங்குவோம் வாத்தியாரிடம்
வாங்கியே வாழுவோம் எந்த நாளிலும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here