Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Aa…aa….aa….aa…aa…aa…aa.

Male : {Paai virithadhu paruvam

Female : Palli kondadhu ilamai

Male : Kural koduthadhu saeval

Female : Vizhithu kondana kangal} (2)

Male : Nilavu magal nadai payilvadhenna
Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna

Female : Aahahahaa… aa…

Male : Nilavu magal nadai payilvadhenna
Endhan nenjanaiyil vandhu thuyilvadhenna

Female : Idiyanaithu ennai pidippadhenna
Oru idaivaelai indri nadippadhenna
Idiyanaithu ennai pidippadhenna
Oru idaivaelai indri nadippadhenna

Male : Valaikkaram irundhaal
Thunai karam vaendum

Male : Valaikkaram irundhaal
Thunai karam vaendum

Female : Thunai karam irundhaal…
Thoda cholla thondrum

Male : Paai virithadhu paruvam

Female : Palli kondadhu ilamai

Male : Kural koduthadhu saeval

Female : Vizhithu kondana kangal

Male : Vazhi vazhiyaai vandha vazhakka padi
Indha vizhi vazhiyaai konjam vaa ippadi

Female : Padi padiyaai solli kodutha padi
Kadhai padikka vandhaal indha paruva kodi

Male : Mudhal mudhal padithaal
Mayakkathai kodukkum

Male : Mudhal mudhal padithaal
Mayakkathai kodukkum

Female : Padithadhai mudhithaal…
Pala naal inikkum

Male : Paai virithadhu paruvam

Female : Palli kondadhu ilamai

Male : Kural koduthadhu saeval

Female : Vizhithu kondana kangal

Both : Laa… lallalla lalallaa…
Laalla laallala laalaalaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….ஆ…

ஆண் : {பாய் விரித்தது பருவம்

பெண் : பள்ளி கொண்டது இளமை

ஆண் : குரல் கொடுத்தது சேவல்

பெண் : விழித்துக் கொண்டன கண்கள்} (2)

ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

பெண் : ஆஹாஹஹா…..ஆ….

ஆண் : நிலவுமகள் நடை பயில்வதென்ன
எந்தன் நெஞ்சணையில் வந்து துயில்வதென்ன

பெண் : இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன
ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன
இடையணைத்து என்னைப் பிடிப்பதென்ன
ஒரு இடைவேளை இன்றி நடிப்பதென்ன

ஆண் : வளைக்கரம் இருந்தால்
துணைக்கரம் வேண்டும்

ஆண் : வளைக்கரம் இருந்தால்
துணைக்கரம் வேண்டும்

பெண் : துணைக்கரம் இருந்தால்
தொடச் சொல்லத் தோன்றும்

ஆண் : பாய் விரித்தது பருவம்

பெண் : பள்ளி கொண்டது இளமை

ஆண் : குரல் கொடுத்தது சேவல்

பெண் : விழித்துக் கொண்டன கண்கள்

ஆண் : வழிவழியாய் வந்த வழக்கப்படி
இந்த விழிவழியாய் கொஞ்சம் வா இப்படி

பெண் : படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி
கதை படிக்க வந்தாள் இந்த பருவக்கொடி

ஆண் : முதல் முதல் படித்தால்
மயக்கத்தைக் கொடுக்கும்

ஆண் : முதல் முதல் படித்தால்
மயக்கத்தைக் கொடுக்கும்

பெண் : படித்ததை முடித்தால்…..
பல நாள் இனிக்கும்

ஆண் : பாய் விரித்தது பருவம்

பெண் : பள்ளி கொண்டது இளமை

ஆண் : குரல் கொடுத்தது சேவல்

பெண் : விழித்துக் கொண்டன கண்கள்

இருவர் : லா…..லல்லல்ல லல்லல்ல
லால்ல லாலலாலா லாலாலா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here