Singers : Swarnalatha and Anuradha Sriram
Music by : S. A. Rajkumar
Lyrics by : Vaali
Female : Paal nilaa pachchai nila
Endrum enthan itchai nilaa
Aasaiyaai petra nilaa
Ammaavaasai atra nilaa
Female : India mazhai saaralaa
Vanthaadum thaenilaa
Sinthiya mazhai thooralaa
Girikaadam thaenilaa
Nee vaazhga nalamaaga
Endrum ulla thendral pola
Female : Paal nilaa pachchai nila
Endrum enthan itchai nilaa
Aasaiyaai petra nilaa
Ammaavaasai atra nilaa
Female : Aanai mugam oru pillai
Aarumugam oru pillai
Unakku undu iru pillai
Enakku enthan oru pillai
Female : Karunjkoyil undaana
Kai pillai unathammaa
Thirukkoyil soththaanaal
Unathalla enathammaa
Female : Pillaikkeedaai pon tharavaa
Paalaiyaththamaa bathil sollu
Female : Podi podi paiththiyamae
Vairaththukkeedaa uppukkallu
Female : Pidivaathakkaariyae magamaayi maariyae
Edhirvaatham yaenammaa
Ammaa un kovam aaraathamaa
Female : Paal nilaa pachchai nilaa
Endrum enthan itchai nilaa
Pon nila pesum nilaa
Palli sellum velli nilaa
Female : Oor maari per maari
Ododi sendraalum
Urumaari karumaari
Varuvaalae ennaalum
Female : Vanthaalum kettaalum
Veshankal pottaalum
Thaai paasam poraada
Thayangaathu oru naalum
Female : Bakthiyai neeyum thuranthaayaa
Paasaththil ennai maranthaayaa
Masakkaiyil maangaai kadththaayaa
Pirasavaththil en pol thudiththaayaa
Female : Om sakthi thorkkumaa
Un sakthi vellummaa
Thaaikkellaam thaai naanae
Unmai orr naal puriyum ponmaanae
Female : Irandu perum paaduraanga
Enakku puriyala
Kaaranam naan chinna pulla
Irandu perum enakku iranduthaai
Illai endraal
En vaazhvirkkum irundathaai
Female : Paal nilaa pachchai nilaa
Pakkam vanthaa pillai nilaa
Aasaiyaai pettra nilaa
Ammaavaasai attra nilaa
Female : Annaiyin mani poongaram
Anaikkaatho aavalaa
Eppavum entha naazhiyum
Irukkaatho kaavalaa
Poonthaenae ponmaanae
Female : Paal nilaa pachchai nilaa
Pakkam vantha pillai nilaa
Paal nilaa pachchai nila
Endrum enthan itchai nilaa
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : எஸ். எ. ராஜ்குமார்
பாடலாசிரியர் : வாலி
பெண் : பால் நிலா பச்சை நிலா
என்றும் எந்தன் இச்சை நிலா
ஆசையாய் பெற்ற நிலா
அம்மாவாசை அற்ற நிலா
பெண் : இந்திய மழை சாரலா
வந்தாடும் தேன்நிலா
சிந்திய மழை தூரலா
கிரிகாடம் தேன்நிலா
நீ வாழ்க நலமாக
என்றும் உள்ள தென்றல் போல
பெண் : பால் நிலா பச்சை நிலா
பக்கம் வந்த பிள்ளை நிலா
பொன் நிலா பேசும் நிலா
பள்ளி செல்லும் வெள்ளி நிலா
பெண் : ஆனைமுகம் ஒரு பிள்ளை
ஆறுமுகம் ஒரு பிள்ளை
உனக்கு உண்டு இரு பிள்ளை
எனக்கு எந்தன் ஒரு பிள்ளை
பெண் : கருங்கோயில் உண்டான
கை பிள்ளை உனதம்மா
திருக்கோயில் சொத்தானால்
உனதல்ல எனதம்மா
பெண் : பிள்ளைக்கீடாய் பொன் தரவா
பாளையத்தம்மா பதில் சொல்லு
பெண் : போடி போடி பைத்தியமே
வைரத்துக்கீடா உப்புக்கல்லு
பெண் : பிடிவாதக்காரியே மகமாயி மாரியே
எதிர்வாதம் ஏனம்மா
அம்மா உன் கோவம் ஆராதம்மா
பெண் : பால் நிலா பச்சை நிலா
என்றும் எந்தன் இச்சை நிலா
பொன் நிலா பேசும் நிலா
பள்ளி செல்லும் வெள்ளி நிலா
பெண் : ஊர் மாறி பேர் மாறி
ஓடோடி சென்றாலும்
உருமாறி கருமாறி
வருவாளே எந்நாளும்
பெண் : வந்தாலும் கேட்டாளும்
வேஷங்கள் போட்டாலும்
தாய் பாசம் போராட
தயங்காது ஒரு நாளும்
பெண் : பக்தியை நீயும் துறந்தாயா
பாசத்தில் என்னை மறந்தாயா
மசக்கையில் மங்காய் கடித்தாயா
பிரசவத்தில் என் போல் துடித்தாயா
பெண் : ஓம் சக்தி தோற்க்கும்மா
உன் சக்தி வெல்லுமா
தாய்க்கெல்லாம் தாய் நானே
உண்மை ஓர்நாள் புரியும் பொன்மானே
பெண் : இரண்டு பேரும் பாடுறாங்க
எனக்கு புரியல
காரணம் நான் சின்ன புள்ள
இரண்டு பேரும் எனக்கு இரண்டுதாய்
இல்லை என்றால்
என் வாழ்விற்கும் இருண்டதாய்
பெண் : பால் நிலா பச்சை நிலா
பக்கம் வந்த பிள்ளை நிலா
ஆசையாய் பெற்ற நிலா
அம்மாவாசை அற்ற நிலா
பெண் : அன்னையின் மணி பூங்கரம்
அணைக்காதோ ஆவலா
எப்பவும் எந்த நாழியும்
இருக்காதோ காவலா
பூந்தேனே பொன்மானே
நெஞ்சில் என்றும் நீந்தும் செம்மீனே
பெண் : பால் நிலா பச்சை நிலா
பக்கம் வந்த பிள்ளை நிலா
பால் நிலா பச்சை நிலா
என்றும் எந்தன் இச்சை நிலா