Singer : T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Oru thavarum senjariyaa uththamara maththavara
Koththi pazhi vaanga vantha kuttu paambae
Un kottaththa naan adakka poren
Kodumaigala mudikka poren
Keezhirangi vanthidappa naagapaambae
Mugamoodiya naan kizhikka poren ketta paambae

Male : Paambae neeyaadu paambae
Aadumvarai aadu paambae
Pagal vesham pottu vantha
Potti paambae

Male : Adhigaaram konda paambae
Agangaaram neranja paambae
Keezhirangi vaa vaa ketta paambae

Male : Paambae neeyaadu paambae
Aadumvarai aadu paambae
Pagal vesham pottu vantha
Potti paambae

Male : Koozhukkum velaiyindri
Kudilukkum olaiyindri
Yaezhainga thudikkaiyilae
Paalundu neeyindru pazhamendru nee kandu
Paththiramaa neeyingu nadikkiriyae

Male : Yaezhainga vayirunga izhukkuthu pudikkuthu
Irukkira edaththaiyum silathunga idikkuthu
Kovilirunthoru kodumaigal nadaththura
Kutti paambae

Male : Paambae neeyaadu paambae
Aadumvarai aadu paambae
Pagal vesham pottu vantha
Potti paambae

Male : Beedaththil yaerikondu
Pidivaatham pannikkondu
Aattangal podaathe
Paavaththa saerkkaathae pazhigala vaangaathae
Panjaigalin vaazhvai theendaathae

Male : Paavamum pazhigalum kooduthu yaeruthu
Pasiyila irukkura vayirunga eriyuthu
Kaaranamellaam needhaan kalla paambae

Male : Paambae neeyaadu paambae
Aadumvarai aadu paambae
Pagal vesham pottu vantha
Potti paambae

Male : Oorukkul vanjam vaththu
Ullukkul nanjum vaithu
Ulavura nalla paambae
Nallorai vaataathae
Naakkai nee neettaathae
Nalinthavar vaazhvai vathaikkaathae

Male : Veshamum kalaigira neramum nerunguthu
Vedhanai theeyila vilangugal norunguthu
Naasamum moshamum naalaikku mudiyuthu
Nanju paambae

Male : Paambae neeyaadu paambae
Aadumvarai aadu paambae
Pagal vesham pottu vantha
Potti paambae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஒரு தவறும் செஞ்சறியா உத்தமர மத்தவர
கொத்தி பழி வாங்க வந்த குட்டிப் பாம்பே
உன் கொட்டத்த நான் அடக்கப் போறேன்
கொடுமைகளை முடிக்கப்போறேன்
கீழிறங்கி வந்திடப்பா நாகப்பாம்பே
முகமூடிய நான் கிழிக்கப்போறேன் கெட்டப் பாம்பே….

ஆண் : பாம்பே நீயாடு பாம்பே
ஆடும்வரை ஆடு பாம்பே
பகல் வேஷம் போட்டு வந்த
பொட்டிப் பாம்பே

ஆண் : அதிகாரம் கொண்ட பாம்பே
அகங்காரம் நெறஞ்ச பாம்பே
கீழிறங்கி வா வா கெட்டப் பாம்பே

ஆண் : பாம்பே நீயாடு பாம்பே
ஆடும்வரை ஆடு பாம்பே
பகல் வேஷம் போட்டு வந்த
பொட்டிப் பாம்பே

ஆண் : கூழுக்கும் வேலையின்றி
குடிலுக்கும் ஓலையின்றி
ஏழைங்க துடிக்கையிலே
பாலுண்டு நீயின்று பழமென்று நீ கண்டு
பத்திரமா நீயிங்கு நடிக்கிறியே

ஆண் : ஏழைங்க வயிறுங்க இழுக்குது புடிக்குது
இருக்கிற எடத்தையும் சிலதுங்க இடிக்குது
கோவிலிலிருந்தொரு கொடுமைகள் நடத்துற
குட்டி பாம்பே…..

ஆண் : பாம்பே நீயாடு பாம்பே
ஆடும்வரை ஆடு பாம்பே
பகல் வேஷம் போட்டு வந்த
பொட்டிப் பாம்பே

ஆண் : பீடத்தில் ஏறிக்கொண்டு
பிடிவாதம் பண்ணிக்கொண்டு
ஆட்டங்கள் போடாதே
பாவத்த சேர்க்காதே பழிகள வாங்காதே
பஞ்சைகளின் வாழ்வை தீண்டாதே

ஆண் : பாவமும் பழிகளும் கூடுது ஏறுது
பசியில இருக்குற வயிறுங்க எரியுது
காரணமெல்லாம் நீதான் கள்ளப் பாம்பே

ஆண் : பாம்பே நீயாடு பாம்பே
ஆடும்வரை ஆடு பாம்பே
பகல் வேஷம் போட்டு வந்த
பொட்டிப் பாம்பே

ஆண் : ஊருக்குள் வஞ்சம் வைத்து
உள்ளுக்குள் நஞ்சும் வைத்து
உலவுற நல்ல பாம்பே
நல்லோரை வாட்டாதே
நாக்கை நீ நீட்டாதே
நலிந்தவர் வாழ்வை வதைக்காதே

ஆண் : வேஷமும் கலைகிற நேரமும் நெருங்குது
வேதனை தீயில விலங்குகள் நொறுங்குது
நாசமும் மோசமும் நாளைக்கு முடியுது
நஞ்சு பாம்பே…

ஆண் : பாம்பே நீயாடு பாம்பே
ஆடும்வரை ஆடு பாம்பே
பகல் வேஷம் போட்டு வந்த
பொட்டிப் பாம்பே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here