Singer : P. Susheela

Music by : R. Sudharsanam

Lyrics by : Kannadasan

Female : Hooo oo oo oo
Paar indha pakkam
Paarka mudiyumaanaal
Paarthu veru pakkam
Poga mudiyuma

Female : Paar indha pakkam
Paarka mudiyumaanaal
Paarthu veru pakkam
Poga mudiyuma

Female : Patharai maatrilae padhinaaru vayadhilae
Paruvam uruvam merugu podudhu
Patharai maatrilae padhinaaru vayadhilae
Paruvam uruvam merugu podudhu
Paalil pirandhadhu thaenil kalandhadhu
Paalil pirandhadhu thaenil kalandhadhu
Pazhagum suvaiyil mudivilaadhadhu

Female : Paar indha pakkam
Paarka mudiyumaanaal
Paarthu veru pakkam
Poga mudiyuma

Female : Kotthodu thirathchai kodiyil
kanindhadhu
Kuttraala megam koondhalil aadudhu
Kotthodu thirathchai kodiyil
kanindhadhu
Kuttraala megam koondhalil aadudhu
Sithiram thottraadhu sirapamum saaindhadhu
Sithiram thottraadhu sirapamum saaindhadhu
Silaiyum jeevanum sernthu vandhadhu

Female : Paar indha pakkam
Paarka mudiyumaanaal
Paarthu veru pakkam
Poga mudiyuma

Female : Ilamaiyil paadhi ilaiyil marainthathu
Irupadhil ondru thaan ingae therindhadhu
Ilamaiyil paadhi ilaiyil marainthathu
Irupadhil ondru thaan ingae therindhadhu
Inbathin mudhalidhu inimai kadal idhu
Inbathin mudhalidhu inimai kadal idhu
Innum oruvar kann padathathu

Female : Paar indha pakkam
Paarka mudiyumaanaal
Paarthu veru pakkam
Poga mudiyuma

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ
பார் இந்தப் பக்கம் பார்க்க முடியுமானால்
பார்த்து வேறு பக்கம் போக முடியுமா

பெண் : பார் இந்தப் பக்கம் பார்க்க முடியுமானால்
பார்த்து வேறு பக்கம் போக முடியுமா

பெண் : பத்தரை மாற்றிலே பதினாறு வயதிலே
பருவம் உருவம் மெருகு போடுது
பத்தரை மாற்றிலே பதினாறு வயதிலே
பருவம் உருவம் மெருகு போடுது
பாலில் பிறந்தது தேனில் கலந்தது
பாலில் பிறந்தது தேனில் கலந்தது
பழகும் சுவையில் முடிவில்லாதது

பெண் : பார் இந்தப் பக்கம் பார்க்க முடியுமானால்
பார்த்து வேறு பக்கம் போக முடியுமா

பெண் : கொத்தோடு திராட்சை கொடியில் கனிந்தது
குற்றால மேகம் கூந்தலில் ஆடுது
கொத்தோடு திராட்சை கொடியில் கனிந்தது
குற்றால மேகம் கூந்தலில் ஆடுது
சித்திரம் தோற்றது சிற்பமும் சாய்ந்தது
சித்திரம் தோற்றது சிற்பமும் சாய்ந்தது
சிலையும் ஜீவனும் சேர்ந்து வந்தது

பெண் : பார் இந்தப் பக்கம் பார்க்க முடியுமானால்
பார்த்து வேறு பக்கம் போக முடியுமா

பெண் : இளமையில் பாதி இலையில் மறைந்தது
இருபதில் ஒன்றுதான் இங்கே தெரிந்தது
இளமையில் பாதி இலையில் மறைந்தது
இருபதில் ஒன்றுதான் இங்கே தெரிந்தது
இன்பத்தின் முதலிது இனிமைக் கடலிது
இன்பத்தின் முதலிது இனிமைக் கடலிது
இன்னும் ஒருவர் கண் பாடாதது

பெண் : பார் இந்தப் பக்கம் பார்க்க முடியுமானால்
பார்த்து வேறு பக்கம் போக முடியுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here