Singers : Manorama and Vani Jairam

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Female : Paarthaale theriyaadho nekku
Adiyae sarasu…puriyaadha aanandham nokku
Puriyaadha anandham nokku
Ukanthirukarar ennaena sonnar
Engaathukar makatam ninar

Female : Paarthaale teriyaadho nekku
Adiyae sarasu…..

Female : Yaendi ellaamae purinjundiyaa
Ethukaaga mudha raathiri terinjundiyaa
Sugamo shanthi kalyaanamo

Female : Asadae thulikooda thoongalayaa
Avar panna vishamangal thaangalayaa
Adiye…..romba kummalamo

Female : Naanthaanae aduthaathu maami kannae
Enkita kannatha kaami
Thalaiyanai mandhiram iruvarum padichudan
Thalai mudhal kaal varai thanalena kodhichudan
Polllaatha mogam vandhathenna
Ullaasam neethaan kandathenna…..

Female : Paarthaale theriyadho nekku
Adiye sarasu….

Female : Engey manavaalan kaipatadho
Angangu medhuvaaga kulir vitadho
Aasai nenjil alai paainthadho

Female : Kanne sivapaana kadhai ennadi
Kaalgal kooda thadumaarum nadai ennadi
Vidiyum varaiyil poraatamo

Female : Nee pattapadu enna penne
Innum bodhaigal theliyadha kanno

Female : Sarasangal purivadhil virasangal yaethadi
Sagalamum arinjaval ulagathil nanadi
Santhegam vanthaa theeruthukadi
Enkita vandhu ketukadi……

Female : Paarthaale theriyaadho nekku
Adiyae sarasu…
Puriyaadha aanandham nokku

Female : Paarthaale theriyaadho nekku
Adiyae sarasu…

பாடகர்கள் : மனோரமா மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….புரியாத ஆனந்தம் நோக்கு
புரியாத ஆனந்தம் நோக்கு
உங்காத்துக்காரர் என்னென்ன சொன்னார்
எங்காத்துக்காரர் மக்காட்டம் நின்னார்

பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….

பெண் : ஏன்டி எல்லாமே புரிஞ்சுண்டியா
எதுக்காக முதராத்திரி தெரிஞ்சுண்டியா
சுகமோ சாந்தி கல்யாணமோ

பெண் : அசடே துளிக்கூட தூங்கல்லையா
அவர் பண்ண விஷமங்கள் தாங்கல்லையா
அடியே…..ரொம்ப கும்மாளமோ

பெண் : நான்தானே அடுத்தாத்து மாமி கண்ணே
எங்கிட்ட கன்னத்த காமி
தலையணை மந்திரம் இருவரும் படிச்சுடன்
தலை முதல் கால் வரை தணலென கொதிச்சுடன்
பொல்லாத மோகம் வந்ததென்ன
உல்லாசம் நீதான் கண்டதென்ன…….

பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….

பெண் : எங்கே மணவாளன் கைப்பட்டதோ
அங்கங்கு மெதுவாக குளிர் விட்டதோ
ஆசை நெஞ்சில் அலை பாய்ந்ததோ

பெண் : கண்ணே சிவப்பான கதை என்னடி
கால்கள் கூட தடுமாறும் நடை என்னடி
விடியும் வரையில் போராட்டமோ

பெண் : நீ பட்டப்பாடு என்ன பெண்ணே
இன்னும் போதைகள் தெளியாத கண்ணோ

பெண் : சரசங்கள் புரிவதில் விரசங்கள் ஏதடி
சகலமும் அறிஞ்சவள் உலகத்தில் நானடி
சந்தேகம் வந்தா தீர்த்துக்கடி
எங்கிட்ட வந்து கேட்டுக்கடி…..

பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….
புரியாத ஆனந்தம் நோக்கு

பெண் : பார்த்தாலே தெரியாதோ நேக்கு
அடியே சரசு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here