Singer : P. Susheela

Music by : Pondiyala Srinivasan

Lyrics by : Pattukottai Kalyanasundaram

Female : Paarthaaya maanidanin leelaiyai
Deva paarthaaya maanidanin leelaiyai
Deva nilaiyaana ulagathaiyum
Neraaana pazhakkathaiyum
Thalaikeezhaai purattividum
Thaarumaaru velaiyai
Paarthaaya maanidanin leelaiyai

Female : Bhaktha janangal kavanam ellaam
Dhinamum kedaikkum sundalilae..haa..haa
Bhaktha janangal kavanam ellaam
Dhinamum kedaikkum sundalilae
Pasiyum sundal rusiyum ponaal
Bhakthiyillai bajanai illai
Suthamaana poligalin sombaeri veshathilae
Suthamaana poligalin sombaeri veshathilae

Female : Thodarnthu undhan kannedhiril
Nadanthu varum mosangalai

Female : Paarthaaya…
Paarthaaya maanidanin leelaiyai
Deva paarthaaya maanidanin leelaiyai

Female : Attam pottu puralvadhu thaan
Aandavnin saevaiyaa
Aalayathai tharisikka alangaaram thevaiya
Aalai aalu idikkaruthum adithadiyum yenaiyaa
Anbar kannu angae moraikkudhu
Kumbidu mattum ingae nadakuthu

Female : Paarthaaya….
Paarthaaya maanidanin leelaiyai
Deva paarthaaya maanidanin leelaiyai

Female : Vinnum mannum neeyaanaai
Veyilum mazhaiyum neeyaanaai
Vilangum agila ulagamidhu
Neeilladha idam yedhu ..haa..haa..
Vinnum mannum neeyaanaai
Veyilum mazhaiyum neeyaanaai
Vilangum agila ulagamidhu
Neeilladha idam yedhu ..

Female : Kaasu thandhaal thaan unnai
Kaanum vazhi kattuvadhaai
Kadhavu pottu pootti veithu
Kattaayam pannuvadhai

Female : Paarthaaya….
Paarthaaya maanidanin leelaiyai
Neraaana pazhakkathaiyum
Thalaikeezhaai purattividum
Thaarumaaru velaiyai
Paarthaaya maanidanin leelaiyai

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பெண் : பார்த்தாயா மானிடனின் லீலையை
தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை
தேவா நிலையான உலகத்தையும்
நேரான பழக்கத்தையும்
தலைகீழாய்ப் புரட்டிவிடும்
தாறுமாறு வேலையை
பார்த்தாயா மானிடனின் லீலையை

பெண் : பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே…
ஹா…ஹா
பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே…
பசியும் சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை
சுத்தமான போலிகளின் சோம்பேறி வேஷத்திலே!
சுத்தமான போலிகளின் சோம்பேறி வேஷத்திலே!

பெண் : தொடர்ந்து உந்தன் கண்ணெதெரில்
நடந்து வரும் மோசங்களை

பெண் : பார்த்தாயா
பார்த்தாயா மானிடனின் லீலையை
தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை

பெண் : ஆட்டம் போட்டுப் புரள்வதுதான்
ஆண்டவனின் சேவையா
ஆலயத்தைத் தரிசிக்க அலங்காரம் தேவையா
ஆளை ஆளு இடிக்கறதும் அடிதடியும் ஏனையா
அன்பர் கண்ணு அங்கே மொறைக்குது
கும்பிடு மட்டும் இங்கே நடக்குது

பெண் : பார்த்தாயா
பார்த்தாயா மானிடனின் லீலையை
தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை

பெண் : விண்ணும் மண்ணும் நீயானாய்
வெயிலும் மழையும் நீயானாய்
விளங்கும் அகில உலகமிது
நீயில்லாத இடம் ஏது ஹா…ஹா..
விண்ணும் மண்ணும் நீயானாய்
வெயிலும் மழையும் நீயானாய்
விளங்கும் அகில உலகமிது
நீயில்லாத இடம் ஏது

பெண் : காசு தந்தால்தான் உன்னைக்
காணும்வழி காட்டுவதாய்
கதவு போட்டு பூட்டி வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப்……..

பெண் : பார்த்தாயா
பார்த்தாயா மானிடனின் லீலையை
நேரான பழக்கத்தையும்
தலைகீழாய்ப் புரட்டிவிடும்
தாறுமாறு வேலையை
பார்த்தாயா மானிடனின் லீலையை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here