Singer : K. S. Chithra
Music by : S. A. Rajkumar
Female : Paarthu paarthu kangal poothirupen
Nee varuvai yena
Poothu poothu punnagai serthuvaipen
Nee varuvai yena
Female : Thendralaaga nee varuvayaa
Jannalaagiren
Theerthamaaga nee varuvayaa
Megamaagiren
Female : Vannamaaga nee varuvayaa
Pookalaagiren
Vaarthaiyaaga nee varuvayaa
Kavidhai aagiren
Chorus : Nee varuvai yena
Nee varuvai yena
Female : Paarthu paarthu kangal poothirupen
Nee varuvai yena
Poothu poothu punnagai serthuvaipen
Nee varuvai yena
Female : Karaigalil odhungiya kilinjalgal
Unakena dhinam dhinam segarithen
Kumudhamum vigatanum nee padipayena
Vaasagi aagi vitten
Female : Kavidhai noolodu kola puthagam
Unakaai semikkiren
Kanavil unnodu enna pesalam
Dhinamum yosikkiren
Oru kagam kaavena karaindhaalum
Yen vaasal paarkiren
Chorus : Nee varuvai yena
Nee varuvai yena
Female : Paarthu paarthu kangal poothirupen
Nee varuvai yena
Poothu poothu punnagai serthuvaipen
Nee varuvai yena
Chorus : Aaa aah aah …. aaa aah aah
Female : Enakulla vedhanai nilavuku therindhidum
Nilavukum jodi illai
Ezhuthiya kavidhaigal unai vandhu serndhida
Kavidhaikum kaalgal illai
Female : Imaigal ennodu sandai poduthae
Ethirae vanthaal enna
Dhinamum kanooram deepam veikkiren
Velicham thanthaal enna
Female : Mani sari paarthu
Dhinam vazhi paarthu
Iru vizhigal theigiren
Chorus : Nee varuvai yena
Nee varuvai yena
Female : Paarthu paarthu kangal poothirupen
Nee varuvai yena
Poothu poothu punnagai serthuvaipen
Nee varuvai yena
Female : Thendralaaga nee varuvayaa
Jannalaagiren
Theerthamaaga nee varuvayaa
Megamaagiren
Female : Vannamaaga nee varuvayaa
Pookalaagiren
Vaarthaiyaaga nee varuvayaa
Kavidhai aagiren
Chorus : Nee varuvai yena
Nee varuvai yena
Nee varuvai yena
Nee varuvai yena
பாடகி : கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
பெண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
பெண் : தென்றலாக நீ வருவாயா
ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
பெண் : வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்
குழு : நீ வருவாயென நீ வருவாயென
பெண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
பெண் : கரைகளில் ஒதுங்கிய
கிளிஞ்சல்கள் உனக்கென
தினம்தினம் சேகரித்தேன்
பெண் : குமுதமும் விகடனும்
நீ படிப்பாயென
வாசகி ஆகி விட்டேன்
பெண் : கவிதை நூலோடு கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும்
என் வாசல் பார்க்கிறேன்
குழு : நீ வருவாயென நீ வருவாயென
பெண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
குழு : ஆஆ…..ஆஅ..ஆஅ…
ஆஆ…..ஆஅ..ஆஅ…
பெண் : எனக்குள்ள வேதனை
நிலவுக்குத் தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை
பெண் : எழுதிய கவிதைகள்
உனை வந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்கள் இல்லை
பெண் : இமைகள் என்னோடு சண்டை போடுதே
எதிரே வந்தால் என்ன
தினமும் கண்ணோரம் தீபம் வைக்கிறேன்
வெளிச்சம் தந்தால் என்ன
பெண் : மணி சரிபார்த்து
தினம் வழிபார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்
குழு : நீ வருவாயென நீ வருவாயென
பெண் : பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாயென
பூத்துப் பூத்துப்
புன்னகை சேர்த்து வைப்பேன்
நீ வருவாயென
பெண் : தென்றலாக நீ வருவாயா
ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா
மேகமாகிறேன்
பெண் : வண்ணமாக நீ வருவாயா
பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா
கவிதை ஆகிறேன்
குழு : நீ வருவாயென நீ வருவாயென
நீ வருவாயென நீ வருவாயென