Singer : Benny Dayal

Music by : Vagu Mazan

Lyrics by : Vairamuthu

Male : Paarthukkol manidhaa
Paarthukkol
Paarthukkol manidhaa
Paarthukkol
Sandhosham kollaamal
Paarthukkol
Paarthukkol manidhaa
Paarthukkol
Yaarum sandhosham kollaamal
Paarthukkol

Male : Nee sagumbodhu yaarum
Sandhosham kollaamal
Paarthukkol
Kanneer choriya
Sila kaaranangal saerthukkol
Paarthukkol

Male : Ennadhaan vaazhkkai endru
Ennippaaru
Adhu azhuvadharku
Aalsaerkkum yaerpaadu

Male : Irandhaveettil azhaavidil
Azhagae illai
Irandha payal azhuvadharkku
Vaaippae illai

Male : Pendaatti azhuvaal
Karikkindraa chirukanneer
Kasappodu veliyaerum
Pillaigalum azhuvaargal
Naalusottu vandhavudan
Naagarigam thadaipodum

Male : Manamazhindhu ponavargal
Azhuvadhillai
Mannikka theriyaadhaar
Azhuvadhillai

Male : Kadangodutha nallavano
Kattaayam azhamaattaan
Kadanvaangi ponavano
Kadaisivarai varamaattaan
Hmm mm hmm mmm

Male : Irandhaveettil azhaavidil
Azhagae illai
Irandha payal azhuvadharku
Vaaippae illai

Male : Paarthukkol manidhaa
Paarthukkol

Male : Uravinargal azhuvaargal
Avarveettu izhavukku
Nee sendru azhudhirundhaal
Oozhiyargal azhuvaargal
Oodhiyathai thaandi nee
Uyar anbu kondirundhaal

Male : Edhirveettaan azhudhaal
Nee manidhan aavaai
Edhirigalum azhudhaal
Nee theivam aavaai

Male : Veettu naayum azhudhuvidil
Buthanaagi povaai nee
Vettiyaanum azhudhuvidil
Kadavulaagi poavaai nee

Male : Irandhaveettil azhaavidil
Azhagae illai
Irandha payal azhuvadharku
Vaaippae illai

Male : Paarthukkol manidhaa
Paarthukkol
Paarthukkol manidhaa
Paarthukkol
Sandhosham kollaamal
Paarthukkol
Paarthukkol manidhaa
Paarthukkol
Yaarum sandhosham kollaamal
Paarthukkol

Male : Nee sagumbodhu yaarum
Sandhosham kollaamal
Paarthukkol
Kanneer choriya
Sila kaaranangal saerthukkol
Paarthukkol

Male : Haan
Ennadhaan vaazhkkai endru
Ennippaaru
Adhu azhuvadharku
Aalsaerkkum yaerpaadu

Male : Irandhaveettil azhaavidil
Azhagae illai
Irandha payal azhuvadharkku
Vaaippae illai

பாடகர் : பென்னி தயாள்

இசை அமைப்பாளர் : வகு மழன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

ஆண் : பார்த்துக்கொள்
மனிதா பார்த்துக்கொள்
பார்த்துக்கொள்
மனிதா பார்த்துக்கொள்
சந்தோஷம் கொள்ளாமல்
பார்த்துக்கொள்
பார்த்துக்கொள்
மனிதா பார்த்துக்கொள்
யாரும் சந்தோஷம் கொள்ளாமல்
பார்த்துக்கொள்

ஆண் : நீ சாகும்போது யாரும்
சந்தோஷம் கொள்ளாமல்
பார்த்துக்கொள்
கண்ணீர் சொரிய
சில காரணங்கள் சேர்த்துக்கொள்
பார்த்துக்கொள்

ஆண் : என்னதான் வாழ்க்கையென்று
எண்ணிப்பாரு
அது அழுவதற்கு ஆள்சேர்க்கும் ஏற்பாடு

ஆண் : இறந்தவீட்டில் அழாவிடில்
அழகே இல்லை
இறந்தபயல் அழுவதற்கு
வாய்ப்பே இல்லை

ஆண் : பெண்டாட்டி அழுவாள்
கரிக்கின்ற சிறுகண்ணீர்
கசப்போடு வெளியேறும்
பிள்ளைகளும் அழுவார்கள்
நாலுசொட்டு வந்தவுடன்
நாகரிகம் தடைபோடும்

ஆண் : மனமழிந்து போனவர்கள்
அழுவதில்லை
மன்னிக்கத் தெரியாதார்
அழுவதில்லை

ஆண் : கடன்கொடுத்த நல்லவனோ
கட்டாயம் அழமாட்டான்
கடன்வாங்கிப் போனவனோ
கடைசிவரை வரமாட்டான்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண் : இறந்தவீட்டில் அழாவிடில்
அழகே இல்லை
இறந்தபயல் அழுவதற்கு
வாய்ப்பே இல்லை

ஆண் : பார்த்துக்கொள் மனிதா
பார்த்துக்கொள்

ஆண் : உறவினர்கள் அழுவார்கள்
அவர்வீட்டு இழவுக்கு
நீசென்று அழுதிருந்தால்
ஊழியர்கள் அழுவார்கள்
ஊதியத்தைத் தாண்டி நீ
உயரன்பு கொண்டிருந்தால்

ஆண் : எதிர்வீட்டான் அழுதால்
நீ மனிதன் ஆவாய்
எதிரிகளும் அழுதால்
நீ தெய்வம் ஆவாய்

ஆண் : வீட்டு நாயும் அழுதுவிடில்
புத்தனாகிப் போவாய் நீ
வெட்டியானும் அழுதுவிடில்
கடவுளாகிப் போவாய் நீ

ஆண் : இறந்தவீட்டில் அழாவிடில்
அழகே இல்லை
இறந்தபயல் அழுவதற்கு
வாய்ப்பே இல்லை

ஆண் : பார்த்துக்கொள்
மனிதா பார்த்துக்கொள்
பார்த்துக்கொள்
மனிதா பார்த்துக்கொள்
சந்தோஷம் கொள்ளாமல்
பார்த்துக்கொள்
பார்த்துக்கொள்
மனிதா பார்த்துக்கொள்
யாரும் சந்தோஷம் கொள்ளாமல்
பார்த்துக்கொள்

ஆண் : நீ சாகும்போது யாரும்
சந்தோஷம் கொள்ளாமல்
பார்த்துக்கொள்
கண்ணீர் சொரிய
சில காரணங்கள் சேர்த்துக்கொள்
பார்த்துக்கொள்

ஆண் : ஹான்
என்னதான் வாழ்க்கையென்று
எண்ணிப்பாரு
அது அழுவதற்கு ஆள்சேர்க்கும் ஏற்பாடு

ஆண் : இறந்தவீட்டில் அழாவிடில்
அழகே இல்லை
இறந்தபயல் அழுவதற்கு
வாய்ப்பே இல்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here