Singer : M. S. Vishwanathan

Music by : M. S. Vishwanathan

Male : Paasam enbathu pon vilanghu

Male : Paasam enbathu pon vilanghu
Adhai pootti kondathu nenjirandu
Pootti kondathu nenjirandu

Male : Paasam enbathu pon vilanghu

Male : Neer varanda kulanthanil nilaithirukkum paasam
Neer varanda kulanthanil nilaithirukkum paasam
Adhai pol dhisai pirindha uravinilum
Thazhaithirukkum paasam thazhaithirukkum paasam

Male : Oon sumandha uyirdhanil vilaindhirukkum paasam
Oon sumandha uyirdhanil vilaindhirukkum paasam
Adhu thaan ilamai mudhal mudhumai varai
Thodarnthu varum paasam thodarnthu varum paasam

Male : Aazhkadalil dhinam ezhum alaigalai pol paasam
Aazhkadalil dhinam ezhum alaigalai pol paasam
Adadaa paravaigalai sirai pidikkum
Valaigalai pol paasam valaigalai pol paasam

Male : Pugai naduvae thanalena maraindhirukkum paasam
Pugai naduvae thanalena maraindhirukkum paasam
Nedunaal pagai valartha idhayangalai
Pinaithirukkum paasam pinaithirukkum paasam

Male : Ezh pirappum thodarkadhai uyir kulathin paasam
Ezh pirappum thodarkadhai uyir kulathin paasam
Azhiyaa ilakkiyam pol nirandharamaai
Iruppadhu thaan paasam iruppadhu thaan paasam

Male : Paasam enbathu pon vilanghu
Adhai pootti kondathu nenjirandu
Pootti kondathu nenjirandu

Male : Paasam enbathu pon vilanghu

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பாசம் என்பது பொன் விலங்கு

ஆண் : பாசம் என்பது பொன் விலங்கு
அதைப் பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு
பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு

ஆண் : பாசம் என்பது பொன் விலங்கு

ஆண் : நீர் வறண்ட குளந்தனில் நிலைத்திருக்கும் பாசம்
நீர் வறண்ட குளந்தனில் நிலைத்திருக்கும் பாசம்
அதைப் போல் திசை பிரிந்த உறவினிலும்
தழைத்திருக்கும் பாசம் தழைத்திருக்கும் பாசம்

ஆண் : ஊன் சுமந்த உயிர்தனில் விளைந்திருக்கும் பாசம்
ஊன் சுமந்த உயிர்தனில் விளைந்திருக்கும் பாசம்
அதுதான் இளமை முதல் முதுமை வரை
தொடர்ந்து வரும் பாசம் தொடர்ந்து வரும் பாசம்

ஆண் : ஆழ்க்கடலில் தினம் எழும் அலைகளைப் போல் பாசம்
ஆழ்க்கடலில் தினம் எழும் அலைகளைப் போல் பாசம்
அடடா பறவைகளை சிறை பிடிக்கும்
வலைகளைப் போல் பாசம் வலைகளைப் போல் பாசம்….

ஆண் : புகை நடுவே தணலென மறைந்திருக்கும் பாசம்
புகை நடுவே தணலென மறைந்திருக்கும் பாசம்
நெடுநாள் பகை வளர்த்த இதயங்களை
பிணைத்திருக்கும் பாசம் பிணைத்திருக்கும் பாசம்…

ஆண் : ஏழ் பிறப்பும் தொடர்கதை உயிர் குலத்தின் பாசம்
ஏழ் பிறப்பும் தொடர்கதை உயிர் குலத்தின் பாசம்….
அழியா இலக்கியம் போல் நிரந்தரமாய்
இருப்பதுதான் பாசம் இருப்பதுதான் பாசம்

ஆண் : பாசம் என்பது பொன் விலங்கு
அதைப் பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு
பூட்டிக் கொண்டது நெஞ்சிரண்டு

ஆண் : பாசம் என்பது பொன் விலங்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here