Singer : Seerkazhi Govindarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Needhi madhayanai needhi vazhi sendrathamma
Mangai nenja perungovil ninaivilandhu vaadudhamma
Thangai satatthil paasam thanai marandhu
Yengudhamma yengudhamma

Male : Pattoda raagam ingae modhudhamma
Thaalam paarthu kondae irundhu vaadudhamma
Parthu kondae irundhu vaadudhamma
Pattoda raagam ingae modhudhamma modhudhamma

Male : Oru thaayin makkalukku ondrae ratham
Andha uravai marakka vaikkum needhiyin mutham
Oru thaayin makkalukku ondrae ratham
Andha uravai marakka vaikkum needhiyin mutham
Thaalikkum dharmathukkum pagaimaiyaa
Thaalikkum dharmathukkum pagaimaiyaa
Kula dharmamae sattathukku adimaiyaa

Male : Pattoda raagam ingae modhudhamma
modhudhamma

Male : Samsaara kovilukku avanae dheivam
Thangai thannodu pirandhadhanaal avalae deepam
Samsaara kovilukku avanae dheivam
Thangai thannodu pirandhadhanaal avalae deepam
Deepamae deivathudan modhumaa
Deepamae deivathudan modhumaa
Adhu modhinaal kovil ullam vaazhuma

Male : Pattoda raagam ingae modhudhamma
Thaalam paarthu kondae irundhu vaadudhamma
Parthu kondae irundhu vaadudhamma
Parthu kondae irundhu vaadudhamma
Parthu kondae irundhu vaadudhamma

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நீதி மதயானை நீதி வழி சென்றதம்மா
மங்கை நெஞ்சப் பெருங்கோயில்
நினைவிழந்து வாடுதம்மா
தங்கை சட்டத்தில் பாசம் தனை மறந்து
ஏங்குதம்மா….ஏங்குதம்மா…..

ஆண் : பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா
தாளம் பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா
பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா
பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா மோதுதம்மா

ஆண் : ஒரு தாயின் மக்களுக்கு ஒன்றே ரத்தம்
அந்த உறவை மறக்க வைக்கும் நீதியின் முத்தம்
ஒரு தாயின் மக்களுக்கு ஒன்றே ரத்தம்
அந்த உறவை மறக்க வைக்கும் நீதியின் முத்தம்
தாலிக்கும் தர்மத்துக்கும் பகைமையா
தாலிக்கும் தர்மத்துக்கும் பகைமையா
குல தர்மமே சட்டத்துக்கு அடிமையா….

ஆண் : பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா மோதுதம்மா

ஆண் : சம்சாரக் கோவிலுக்கு அவனே தெய்வம்
தங்கை தன்னோடு பிறந்ததினால் அவளே தீபம்
சம்சாரக் கோவிலுக்கு அவனே தெய்வம்
தங்கை தன்னோடு பிறந்ததினால் அவளே தீபம்
தீபமே தெய்வத்துடன் மோதுமா
தீபமே தெய்வத்துடன் மோதுமா
அது மோதினால் கோவில் உள்ளம் வாழுமா

ஆண் : பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா
தாளம் பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா
பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா
பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா..
பார்த்துக் கொண்டே இருந்து வாடுதம்மா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here